Published:Updated:

வறுமை கடந்து வளர்த்துக்கொண்ட திறமை! - இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வான அரியலூர் இளைஞர்

ஹாக்கி அணிக்குத் தேர்வான அரியலூர் இளைஞர்

தமிழகத்திலிருந்து ஒரே நேரத்தில் 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர் தமிழக ஹாக்கி வீரர்கள்.

வறுமை கடந்து வளர்த்துக்கொண்ட திறமை! - இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வான அரியலூர் இளைஞர்

தமிழகத்திலிருந்து ஒரே நேரத்தில் 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர் தமிழக ஹாக்கி வீரர்கள்.

Published:Updated:
ஹாக்கி அணிக்குத் தேர்வான அரியலூர் இளைஞர்

இந்தியாவின் முக்கிய விளையாட்டுகளில் ஒன்றான ஹாக்கிக்கு இந்திய அணியின் சார்பாக விளையாட அரியலூரைச் சேர்ந்த, 20 வயது இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரியலூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர்
அரியலூர்

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தொடரானது இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இம்மாதம் 23-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடக்கவிருக்கிறது. மொத்தம் 20 வீரர்கள் பங்குபெறும் இதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், மற்றொருவர் அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்திக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹாக்கிக்குப் பெயர் பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியும் ஒன்று. ‘ஹாக்கிப்பட்டி’ என அழைக்கும் அளவுக்கு இங்கு தயாராகும் வீரர்கள், வீராங்கனைகள் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி, தேசிய ஹாக்கி அணி, தேசிய அளவிலான சப் - ஜூனியர் மகளிர் அணியிலும் கலந்துகொள்கின்றனர். ஆனால், அரியலூர் மாவட்டத்திலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறை.

ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் இளைஞர்
ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் இளைஞர்

தற்போது, அரியலூரிலிருந்து இந்திய அணிக்காக விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள கார்த்திக்கின் தந்தை செல்வம் முன்பு ஒரு வங்கியில் இரவு நேரக் காவலராகப் பணியாற்றிவிட்டு, தற்போது அரியலூர் அரசுக் கலைக்கல்லூரியில் காவலராகப் பணியாற்றிவருகிறார். கார்த்திக்கின் தாயார் வளர்மதி அங்குள்ள சில வீடுகளில் தினமும் பாத்திரம் விளக்கிக் கொடுத்து.

அதன் மூலமாக வரும் வருமானத்தில் தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஏழ்மையான சூழலில் வளரும் கார்த்திக் அரியலூரில் உள்ள செயின்ட் மேரி மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில் 10ஆம் வகுப்பை முடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கார்த்திக்கின் விளையாட்டுத் திறனைப் பற்றி அறிந்துகொண்ட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பயிற்சியாளர், கார்த்திக்கை அழைத்து அவரது ஹாக்கி விளையாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியிலிருந்து கொண்டே அங்குள்ள எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரியில் பி.ஏ. வரலாற்றுப் படிப்பில் சேர்ந்தார்.

கார்த்திக்
கார்த்திக்

அங்கிருந்து அவரது விளையாட்டு திறனால், பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு ‘எக்லான்ஸ்’ அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட அவர் அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில்தான், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய ஹாக்கி போட்டி தொடருக்கான இந்திய அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கார்த்திக். மே 23-ம் தேதி தொடங்க உள்ள தொடக்கப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் முன் களத்தில் ஆட உள்ளார்.

இவரோடு தேர்வாகியுள்ள மற்றொரு தமிழக வீரரான கோவில்பட்டி மாரீஸ்வரன் சக்திவேல் இதே போட்டியில் நடுகளத்தில் ஆட உள்ளார். தமிழகத்திலிருந்து ஒரே நேரத்தில் 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர் தமிழக ஹாக்கி வீரர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism