Published:Updated:

12,000 பேர் பங்கேற்பு; ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை! - புதுக்கோட்டையை அதிரவைத்த மாரத்தான்

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

புதுக்கோட்டையில், உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாபெரும் மாரத்தானில் சுமார் 12,000பேர் வரையிலும் கலந்து கொண்டு புதுக்கோட்டையையே அதிர வைத்தனர். இந்த மாரத்தான் போட்டி, ஏசியன் புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பிடித்துள்ளது.

Pudukkottai Marathon
Pudukkottai Marathon

புதுக்கோட்டையில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.

Pudukkottai Marathon
Pudukkottai Marathon

அரசு பொது அலுவலக வளாகம் நீதிமன்றத்தின் முன்பு துவங்கிய மாரத்தான் எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலை கடந்து கீழ ராஜ வீதி வழியாகப் பிருந்தாவனம், திலகர் திடல், பிஎல்ஏ கார்னர் வழியாக அரசு மகளிர் கல்லூரி ஸ்டேடியத்தில் முடிவடைந்தது.

இதில், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 12ஆயிரம் பேர் வரையிலும் பங்கேற்றனர்.

Pudukkottai Marathon
Pudukkottai Marathon

குறிப்பாக, புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தான், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 12,000ஆயிரம் பேர் வரையிலும் கலந்துகொண்டதால்,

Pudukkottai Marathon
Pudukkottai Marathon

ஏசியன் புக் ஆப் ரெக்கார்டாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாரத்தானை துவங்கி வைத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

Pudukkottai Marathon
Pudukkottai Marathon

``உடல் உறுப்புதானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதாகப் பிரதமரே பாராட்டி உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரையிலும் 1,298 கொடையாளர்களிடம் இருந்து 7,573 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது"என்றார்.