Published:Updated:

`சவாலான தொடர்' மட்டுமே இலக்கு! - கைகொடுக்குமா கங்குலியின் `Four Nation' Plan?

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

கங்குலியின் இந்தத் திட்டத்துக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பிசிசிஐ தலைவராகப் பதவியேற்ற பின்னர், பல்வேறு புதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். இந்திய அணி, தொடர்ச்சியாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் ஆடாமல் இருந்துவந்த நிலையில்... அணி நிர்வாகத்திடம் பேசி, கொல்கத்தாவில் இந்திய அணியின் முதலாவது பகலிரவு ஆட்டத்தை நடத்தி மாஸ் காட்டினார்.

 ஈடன் கார்டன் மைதானம்
ஈடன் கார்டன் மைதானம்
Twitter

அடுத்தகட்டமாக, நான்கு நாடுகள் கிரிக்கெட் என்னும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளார். இதன்மூலம், தரமான கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு வழங்க முடியும் என நம்புகிறார் கங்குலி. தரமான கிரிக்கெட்டை வழங்கிவிட்டால், ரசிகர்களின் ஆதரவு தனாகக் கிடைத்துவிடும் என்கிறார். கங்குலியின் இந்தத் திட்டத்துக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்து, இணைந்துள்ளன.

ஐசிசி-யின் FTP எனப்படும் எதிர்கால திட்டத்தில் இதைக் கொண்டுவரவும் முயற்சிகள் நடக்கின்றன. ஐசிசி-யின் அனுமதி கிடைக்கும்பட்சத்தில், 2021-ம் ஆண்டில் டாப் 4 அணிகள் மோதும் தொடரை இந்தியாவில் நடத்த கங்குலி ஆர்வமாக உள்ளார். எனினும், கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய 3 வாரியங்கள், தங்களின் ஆதிகத்தை நிலைநிறுத்தவே இந்தத் தொடரை நடத்தத் திட்டமிடுவதாக குற்றச்சாட்டுகளும் வருகின்றன.

கங்குலி
கங்குலி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித், ``4 நாடுகள் மட்டும் இணைந்து விளையாடும் திட்டம், மற்ற நாட்டு போர்டுகளைத் தனிமைப்படுத்தும் திட்டம். இது, மிகப் பெரிய தோல்வியில்தான் முடியும்’ என்று சொல்லியிருக்கிறார். அதேபோன்று, மிகப் பெரிய போர்டுகள் மேலும் மேலும் பணம் சம்பாதிப்பதற்காக இந்த வகை போட்டிகளை முன்னெடுக்கிறார்கள். இதனால் தரமான கிரிக்கெட் வெளிப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர் ஒருசிலர்.

பலதரப்பட்ட கருத்துகளுக்கு நடுவே, பிசிசிஐ தலைவரான கங்குலி, நான்கு நாடுகள் கிரிக்கெட் தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த இது தொடர்பான பதிலில், ``தற்போதுவரை அது ஒரு கோரிக்கைதான். இந்தக் கோரிக்கை எப்படி பரிசீலிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தத் தொடருக்கான காரணமெல்லாம் சவாலான நல்ல கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என்பது மட்டுமே.

பிசிசிஐ
பிசிசிஐ

இது தொடர்பாகப் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்கள் மற்றும் ஐசிசி உடன் பேச வேண்டும். ஐசிசி-யின் எதிர்காலத் தொடர்கள் திட்டம் தொடர்பாகவும் யோசிக்க வேண்டும். அந்தத் திட்டத்தில், இந்த நான்கு நாடுகள் தொடர் குறித்தும் பேசுவோம். ஆனால், இந்த யோசனை சிறப்பான கிரிக்கெட்டுக்கு வழிவகுக்கும். இன்று நாம் பார்ப்பதெல்லாமே இரு நாட்டு கிரிக்கெட் தொடர்கள்தான். மக்கள், தரமான கிரிக்கெட் தொடர்களைப் பார்க்க விரும்புகிறார்கள். நாங்கள் அதைத் தருவதற்கான நடவடிக்கைகளில் இருக்கிறோம். `பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியைக் காண வரும் ரசிகர்களைப் பாருங்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மோதும்போது, ரசிகர்களும் அதிகம் விரும்பி வருகிறார்கள்.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தவிர்த்து, நான்காவது பெரிய அணி எது எனப் பலரும் கேட்கிறார்கள். அது, அப்போது இருக்கும் சூழலைப் பொறுத்தது. ஆனால், பலமான ஒரு அணியைத் தேர்வுசெய்யவே விரும்புகிறோம். அடிப்படையான காரணமே சவாலான, தரமான கிரிக்கெட்டை வழங்குவதுதான்” என்றார்.

 கங்குலி
கங்குலி

இந்தத் தொடர் மூலம் பெரிய கிரிக்கெட் போர்டுகள் பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய கங்குலி, ``அப்படியா... இதை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது? நான்காவது அணியும் தொடரில் இருக்கும். எக்களுக்கு இருக்கும் சவால் எல்லாம், இந்தத் தொடரை எப்போது நடத்துவது? அந்த காலகட்டத்தில் 4 அணிகளுக்கும் வேறு தொடர்கள் இருக்கக்கூடாது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் ஒரே தொடரில் விளையாடுவது அரிதான விஷயமாகிவிட்டது. அதற்காகத்தான், இந்தத் தொடர் குறித்துப் பேசுகிறோம்” என்றார்.

மேலும், 'சிறிய போர்டுகளுக்கான தொடர்களில் பெரிய போர்டுகள் ஆர்வம் காட்டுவதில்லை' என்ற குற்றச்சாட்டையும் கங்குலி மறுத்தார். ``இந்தியா போன்ற நாடுகள், அவர்கள் நாட்டில் தொடர்களில் கலந்துகொள்ளும்போது, அந்த போர்டுகளுக்கு வருமானம் வருகிறது. இந்தியாவில் தொடர்கள் நடந்தாலும், அதேபோன்று செலவுசெய்கிறோம். உதாரணத்துக்கு, பிங்க் பால் டெஸ்ட் போட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்... வங்கதேச அணிக்கு எதிராக விளையாடினோம். ஆனால், நாங்கள் பெரிய அளவில்தான் செலவுசெய்தோம்” என்றார்.

`இதுபோன்ற விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகும்!’ - அஷ்வினைப் பாராட்டிய கங்குலி

தரமான கிரிக்கெட் போட்டியை வழங்க, நான்கு நாடுகள் தொடர் என்ற கங்குலியின் யோசனையை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கமென்ட் ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு