Published:Updated:

`முதல்ல ஃகுவாலிபை ஆகுங்க பாஸு'- கெவின் பீட்டர்சனை சம்பவம் செய்த யுவராஜ் சிங்!

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் ( twitter )

யுவராஜ் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதில் கமென்ட் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ``இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றால் அது நடக்காது'' எனக் கிண்டலாகப் பதிவிட்டார்...

உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 315 ரன்கள் இலக்கை விரட்டிய வங்கதேசம் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்கிடையே, முதல் இன்னிங்ஸின்போது இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
AP

அசத்தலாக விளையாடிய `ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் தனது 4 -வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக சதமடித்த இந்திய வீரர் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தை ரோஹித் பெற்றார்.

Vikatan

ரோஹித்தின் பேட்டிங்கை பாராட்டி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ``ரோஹித் ஷர்மா தொடர் நாயகன் விருதுக்கு அருகில் செல்கிறார். ஹிட்மேன் யூ பியூட்டி. மிகச் சிறப்பான ஆட்டம் சாம்பியன்” எனப் பதிவிட்டார். யுவராஜ் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதில் கமென்ட் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ``இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றால் அது நடக்காது'' எனக் கிண்டலாக பதிவிட, அதற்குப் பதிலளித்த யுவராஜ், ``முதலில் தகுதி பெறுங்கள். பிறகு ஜெயிப்பது பற்றிப் பேசுங்கள். நான் தொடர் நாயகன் விருது பற்றிப் பேசுகிறேன். வெற்றி பெறுவதைப் பற்றி அல்ல'' எனப் பதிலடி கொடுத்தார்.

கெவின் பீட்டர்சன்
கெவின் பீட்டர்சன்
twitter

அதற்கு மீண்டும், ``இந்தியா நிச்சயம் தகுதிபெறும்" எனக் கூறி வம்பிழுத்துள்ளார் பீட்டர்சன். இவர்களின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையே, இன்னொரு ட்வீட்டில், ``வருங்காலத்துக்கான நம்பர் 4 பேட்ஸ்மேனைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கிறேன். ரிஷப் பன்டை சரியான வகையில் உருவாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டு யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் நான்காம் இடத்தில் இறங்கிய ரிஷப் பன்ட் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 பந்தில் 48 ரன்கள் சேர்த்து அணிக்கு வலிமை சேர்த்தார்.

அடுத்த கட்டுரைக்கு