Published:Updated:

``பும்ரா பேபி பவுலர்; கோலியிடம் உலகத்தரம் இல்லை!"- பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசாக்

கோலி, பும்ரா
கோலி, பும்ரா

1992 முதல் 2007 வரை விளையாடிய வீரர்களிடம் பேசினால் அவர்கள் உங்களுக்கு உண்மையிலே கிரிக்கெட் என்றால் என்ன என்று சொல்வார்கள்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சமீபகாலமாக சிறப்பாகச் செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார்கள். பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் என வீரர்கள் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். அதிலும் பும்ரா என்றாலே பல பேட்ஸ்மேன்களுக்கு பயம் என்கிற அளவுக்கு மிரட்டலாக இருக்கிறது அவரது பந்துவீச்சு.

பும்ரா
பும்ரா

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5 -வது இடத்தில் இருக்கிறார். பல முக்கியத் தொடர்களுக்காக பும்ராவுக்குச் சிறிய தொடர்களில் ஓய்வு அளிக்கும் காட்சிகளும் அரங்கேறும். அந்த அளவுக்கு பும்ரா அணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

`இப்ப சிங்கர் தோனிதான் டிரெண்ட்!’- ஹார்ட்டின்களைத் தெறிக்கவிடும் ரசிகர்கள்

ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், பும்ராவை `பேபி பெளலர்' எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக `கிரிக்கெட் பாகிஸ்தான்' ஊடகத்துக்குப் பேசிய அப்துல் ரசாக், ``நான் பல உலகத்தர பந்துவீச்சாளர்களைச் சந்தித்து இருக்கிறேன். எனக்கு பும்ராவை எதிர்கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.

ரசாக்
ரசாக்
Twitter

நான் அவருக்கு எதிராக பேட்டிங் செய்தால் அது அவருக்குத்தான் ப்ரஷர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ``மெக்ரத், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் போன்ற பந்து வீச்சாளர்களைச் சந்தித்த பிறகு நமக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். என்னால் அவரை எளிதாக எதிர்கொள்ள முடியும். நான் யார் யார் பந்துவீச்சையெல்லாம் சந்தித்திருக்கிறேன் என பும்ராவுக்கே தெரியும்” என்றார்.

தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்பாகப் பேசிய ரசாக், ``1992 முதல் 2007 வரை விளையாடிய வீரர்களிடம் பேசினால் அவர்கள் உங்களுக்கு உண்மையிலே கிரிக்கெட் என்றால் என்ன என்று சொல்வார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகத்தரமிக்க வீரர்கள் இருந்தார்கள். தற்போது எங்குமே உலகத் தரமிக்க வீரர்கள் இல்லை. எல்லாமே அடிப்படை அளவில்தான் இருக்கிறது. பந்துவீச்சிலோ, பேட்டிங்லோ, ஃபீல்டிங்கிலோ தரம் இல்லை.

``பும்ரா பேபி பவுலர்; கோலியிடம் உலகத்தரம் இல்லை!"- பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசாக்

கோலி ரன்கள் குவிக்கிறார், அவர் இந்தியாவுக்கு நல்ல வீரர்தான். இந்தியாவுக்காக தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால், அவரை சச்சினுடன் ஒப்பிட முடியாது. சச்சின் மொத்தமாகவே வேறு...” என்றார். ரசாக்கின் இந்தக் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு