Published:Updated:

Chennai Football: இங்கு இல்லையென்றால் எங்கு? சென்னை லீக் போட்டிகளுக்கு மறுக்கப்படும் நேரு மைதானம்!

Chennai Football - Nehru Stadium | நேரு மைதானம்

லீக் போட்டிள் நடைபெற்றால்தான் அடிமட்டத்தில் இருக்கும் வீரர்களின் திறமைகள் வெளியே தெரியவரும். மாநில அணிக்காக ஆடும் பெரும்பாலான வீரர்கள் இதுபோன்ற லீக் தொடர்களில் இருந்து சென்றவர்கள்தான்.

Chennai Football: இங்கு இல்லையென்றால் எங்கு? சென்னை லீக் போட்டிகளுக்கு மறுக்கப்படும் நேரு மைதானம்!

லீக் போட்டிள் நடைபெற்றால்தான் அடிமட்டத்தில் இருக்கும் வீரர்களின் திறமைகள் வெளியே தெரியவரும். மாநில அணிக்காக ஆடும் பெரும்பாலான வீரர்கள் இதுபோன்ற லீக் தொடர்களில் இருந்து சென்றவர்கள்தான்.

Published:Updated:
Chennai Football - Nehru Stadium | நேரு மைதானம்
சென்னையின் கால்பந்து கலாசாரம் சுதந்திரத்திற்கும் முன்பான ஒரு நீண்ட வரலாறை கொண்டது. கால்பந்தை மட்டுமே மூச்சாய்க் கொண்டு தங்கள் கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வீரர்கள் பலரும் இன்னமும் இருக்கிறார்கள். மாநகர் எங்கும் சிதறிக்கிடக்கும் இதுபோன்ற வீரர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாய் இத்தனை ஆண்டுகளாய் இருந்துவருவது ஆண்டுதோறும் நடத்தப்படும் சென்னை கால்பந்து லீக் தொடர்தான். ஆனால் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இத்தொடரை இந்தாண்டு நடத்த நேரு மைதானத்தில் அனுமதி மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Yuvaraj
Yuvaraj

இதுகுறித்து 'Chennai Football players and fans' அசோசியேஷனின் தலைவர் யுவராஜிடம் பேசினோம். "70-களின் பிற்பகுதியில் மாநில அளவிலான சப்-ஜூனியர் அணியில் கோல்-கீப்பராக நான் விளையாடியுள்ளேன். எனக்குத் தெரிந்த வரையில் எங்களுக்கு கால்பந்து மைதானம் என்றாலே அது நேரு ஸ்டேடியம்தான். அப்போதெல்லாம் போட்டிகளை நடத்துவதற்கு மைதானம் முழுவதும் இலவசமாக விடப்பட்டு, ரசிகர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். உள்ளிருக்கும் 2 மைதானங்களிலும் லீக் போட்டிகள் தொடங்கி கல்லூரித் தொடர்கள், பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் என ஏதாவது நடைபெற்று கொண்டே இருக்கும். இந்தக் காரணங்களால் சென்னை சுற்றிய வட்டாரங்களில் கால்பந்து நல்ல வளர்ச்சியடைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை ஃபுட்பால் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு ஃபுட்பால் அசோசியேஷன் ஆகிய இரண்டு சங்கங்களுக்கு இடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இது போன்ற பிரச்னைகளை விளையாட்டு ஆணையம்தான் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்துவைக்கவேண்டும். லீக் போட்டிகள் நடைபெற்றால்தான் அடிமட்டத்தில் இருக்கும் வீரர்களின் திறமைகள் வெளியே தெரியவரும். மாநில அணிக்காக ஆடும் பெரும்பாலான வீரர்கள் இதுபோன்ற லீக் தொடர்களில் இருந்து சென்றவர்கள்தான். மேலும் இந்த தொடர்களில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் IOB, Customs, தெற்கு ரயில்வே முதலிய அணிகளுக்கு தேர்வாகி அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

Nehru Stadium | நேரு மைதானம்
Nehru Stadium | நேரு மைதானம்

நேரு ஸ்டேடியத்தில் அனுமதி கிடைக்காமல் இருப்பதுதான் இத்தொடர் நடைபெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணம். மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் தான் நேரு ஸ்டேடியம் வருகிறது. ஐ.எஸ்.எல் தொடர் தொடங்கி தனியார் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் வரை அனுமதி தரப்படும் இம்மைதானத்தில் கால்பந்தின் வளர்ச்சிக்காகப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்க வேண்டுமல்லவா. வருடத்தின் 4 மாதங்களுக்காவது இதற்கான அனுமதி தரப்பட வேண்டும். வருமானத்தை மட்டுமே பார்த்தால் விளையாட்டை எப்படி முன்னேற்ற முடியும். மாநில அளவில் சிறந்த வீரர்களை உருவாக்கி தேசிய அளவிற்கு முன்னேற்ற கொஞ்சமாவது நிதி அளித்து உதவி செய்தல் தானே முடியும். சென்னையில் உள்ள மற்ற விளையாட்டு மைதானங்களில் இது போன்ற வேறு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்படுமா? ஆனால், கால்பந்திற்காகவே உருவாக்கப்பட்ட நேரு ஸ்டேடியத்தில் இன்று இத்தொடர்கள் நடத்த அனுமதி இல்லை. முன்பு concession fees-ஆக ஆயிரம் இரண்டாயிரம் என்று வசூலிக்கப்பட்டது போய் இன்று எட்டாயிரம், பத்தாயிரம் கேட்பது நியாயமா? கொரோனா பேரிடரில் கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தொடர் நடைபெறவில்லை. தற்போது சிறு வயது வீரர்கள் எல்லாம் ஆர்வமுடன் மீண்டும் மைதானத்தை நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அவர்களை ஊக்குவிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் விளையாட்டு ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டு சங்கங்களுக்கான பிரச்னையும் தீர்க்காமல் நடக்கவேண்டிய போட்டிகளுக்கும் மைதானம் தரப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல பாரிஸ் பேருந்து நிலையத்திற்கு எதிரே மூன்றரை ஏக்கர் பரப்பளவில் பச்சையப்பன் பள்ளி மைதானம் உள்ளது. ஆனால், அந்த இடத்தை தற்போது நீதிமன்ற கட்ட எடுக்கப் போகிறார்கள். ஏற்கெனவே உள்ள மைதானங்களை அழித்துவிட்டு நகருக்கு வெளியே இத்தனை மைதானங்களை உருவாக்குவோம் என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது. கால்பந்து எளியவர்களுக்கான ஒரு விளையாட்டு, நீங்கள் உருவாக்கும் புதிய மைதானத்திற்கு கிரிக்கெட் போல யாரும் காரில் சென்று விளையாடமாட்டார்கள். இப்படி செய்தால் எங்கே தான் விளையாடுவது ” என்று கூறினார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism