Published:Updated:

Champions League: பேயர்ன் மூனிச்சை வீழ்த்தி அதிர்ச்சியளித்த வியரியல்; அரையிறுதியில் ரியல் மாட்ரிட்!

Bayern Munich vs Villareal ( AP )

போட்டி கூடுதல் நேரத்துக்குப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய அதிர்ச்சியை அரங்கேற்றியது வியரியல். 88-வது நிமிடத்தில் ஒரு அதிவேக கவுன்ட்டர் அட்டாக் செய்தது அந்த அணி.

Champions League: பேயர்ன் மூனிச்சை வீழ்த்தி அதிர்ச்சியளித்த வியரியல்; அரையிறுதியில் ரியல் மாட்ரிட்!

போட்டி கூடுதல் நேரத்துக்குப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய அதிர்ச்சியை அரங்கேற்றியது வியரியல். 88-வது நிமிடத்தில் ஒரு அதிவேக கவுன்ட்டர் அட்டாக் செய்தது அந்த அணி.

Published:Updated:
Bayern Munich vs Villareal ( AP )

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பேயர்ன் மூனிச் அணியை வீழ்த்தி பெரும் அதிர்ச்சியளித்திருக்கிறது வியரியல் அணி. பரபரப்பாக நடந்த மற்றொரு போட்டியில், நடப்பு சாம்பியன் செல்சீயை கூடுதல் நேரத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது ரியல் மாட்ரிட்.

கடந்த வாரம் நடந்த முதல் சுற்றுப் போட்டியிலேயே பேயர்ன் மூனிச்சுக்கு பெரும் அதிர்ச்சியளித்திருந்தது வியரியல். டஞ்ஜுமா அடித்த கோலால் 1-0 என வெற்றி பெற்றது அந்த அணி. இரண்டாவது சுற்றுப் போட்டி அலயன்ஸ் அரீனாவில் இன்று அதிகாலை நடந்தது. முதல் சுற்றைப் போலவே இந்தப் போட்டியிலும் டிஃபன்ஸிவாக மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது வியரியல். சொல்லப்போனால், ஆட்டத்தின் முதல் அட்டாக்குமே அந்த அணியிடமிருந்துதான் வந்தது. ஆறாவது நிமிடத்திலேயே ஜெரார்ட் மொரேனோ ஒரு ஷாட் அடித்தார். ஆனால், அது போஸ்ட்டுக்கு வெளியே சென்றுவிட்டது.

முதல் கால் மணி நேரம் எதுவுமே செய்யமுடியாமல் இருந்த பேயர்ன் மூனிச், அதன்பிறகு அடுத்தடுத்து அட்டாக்குகளை மேற்கொண்டது. கிம்மிச், சனே, கொரேட்ஸ்கா போன்றவர்கள் அடுத்தடுத்து வியரியல் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார்கள். ஆனால், அவர்களால் கோலடிக்க முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ராபர்ட் லெவண்டோஸ்கி, இந்தப் போட்டியில் எதுவுமே செய்ய முடியாமல் தடுமாறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

41-வது நிமிடத்தில் வியரியல் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. பாக்ஸுக்கு அருகில் கிடைத்த வாய்ப்பை டஞ்சுமா பயன்படுத்திக்கொள்ளத் தவற, முன்னிலையை இரட்டிப்பாக்கும் வியரியல் அணியின் வாய்ப்பு வீணானது. அடுத்த சில நிமிடங்களில் ஜெரார்ட் மொரோனேவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர் நெட்டின் பக்கவாட்டில் அடிக்க, முதல் பாதி 0-0 என முடிந்தது. இரண்டாவது பாதி தொடங்கியதும் மிகவும் உக்கிரமாக ஆடியது பேயர்ன் மூனிச். லெராய் சனே, ஜமால் மூசியாலா இருவரும் அடுத்தடுத்து வாய்ப்புகளை உருவாக்கினார்கள். இந்த தொடர் அட்டாக்குகளின் பலனாக, 52-வது நிமிடத்தில் கோலடித்தது பேயர்ன் மூனிச். வியரில் மிட்ஃபீல்டர் டேனி பரேகோ நடுகளத்தில் பந்தைத் தவறவிட, அதைப் பயன்படுத்தி முன்னேறினார் தாமஸ் முல்லர். பந்தை அவர் லெவண்டோஸ்கியிடம் கொடுக்க, அதை எளிதாக கோலாக்கினார் அவர்.

Villarreal
Villarreal
AP

முதல் கோல் வந்ததும் மூனிச் அடுத்தடுத்து அட்டாக் செய்ய நினைத்தாலும், வியரியல் அணியின் சிறப்பான தடுப்பாட்டம் அவர்களை கோலடிக்க முடியாமல் தடுத்தது. சனே, முல்லர் செய்த தொடர் முயற்சிகள் அதனால் வீணானது. 82-வது நிமிடத்தில் டஞ்ஜுமாவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்க, போட்டியை முடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டி கூடுதல் நேரத்துக்குப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய அதிர்ச்சியை அரங்கேற்றியது வியரியல். 88-வது நிமிடத்தில் ஒரு அதிவேக கவுன்ட்டர் அட்டாக் செய்தது அந்த அணி. பந்தோடு முன்னேறிய ஜெரார்ட் மொரேனோ, வலது விங்கில் இருந்த சாமுவேல் சுக்வீஸிக்கு பாஸ் செய்ய, மானுவேல் நூயரைத் தாண்டி அதைப் போஸ்ட்டுக்குள் அடித்தார் சுக்வீஸி. 1-1. ஒட்டுமொத்தமாக 2-1 என முன்னிலை பெற்றது வியரியல். அதன்பிறகு பேயர்ன் மூனிச்சால் வியரியல் போஸ்ட்டை முற்றுகையிட முடியவில்லை. அதனால், இந்தப் போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது அந்த அணி.

மற்றொரு போட்டியில், ரியல் மாட்ரிட் மற்றும் செல்சீ அணிகள் சான்டியாகோ போர்னபோ மைதானத்தில் மோதின. 3-1 என முதல் போட்டியை வென்றிருந்ததால் நம்பிக்கையோடு ஆட்டத்தைத் தொடங்கியது ரியல் மாட்ரிட். ஆனால், தொடக்கத்திலிருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது செல்சீ. பத்தாவது நிமிடத்துக்கு மேல் அடுத்தடுத்து வாய்ப்புகளை உருவாக்கியது அந்த அணி. ஹாவர்ட்ஸ், ருடிகர் ஆகியோரின் முயற்சிகள் கோலாகாமல் போனாலும், 15-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது செல்சீ. ரூபன் லோஃப்டஸ் சீக் பந்தோடு முன்னேறி, பாக்சுக்கு அருகிலிருந்து வெர்னருக்கு பாஸ் கொடுத்தார். வெர்னர் பாக்சுக்குள் முன்னேறிக்கொண்டிருந்த மேசன் மவுன்ட் பாதையில் பந்தை அனுப்ப, அதை கோலாக்கினார் மவுன்ட்.

Real Madrid vs Chelsea
Real Madrid vs Chelsea
AP

அதன்பிறகு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பெரிய அளவில் ரியல் மாட்ரிட்டை செல்சீயால் சோதிக்க முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது செல்சீ. இரண்டாவது பாதியிலும் அதே உத்வேகத்தோடு ஆடியது அந்த அணி. 51-வது நிமிடத்தில் கிடைத்த கார்னரை மேசன் மவுன்ட் பெனால்டி ஏரியாவுக்குள் அனுப்ப, அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் ஆன்டோனியோ ருடிகர். 2-0 என முன்னிலை பெற்ற செல்சீ, காலிறுதியை 3-3 என சமனாக்கியது.

அடுத்த சில நிமிடங்கள் ரியல் மாட்ரிட் அணி சில அட்டாக்குகளை மேற்கொண்டது. ஆனால், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. மாட்ரிட் அட்டாக் செய்தாலும், செல்சீயும் தங்கள் திட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. அதன் பலனாக 75-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தது அந்த அணி. கோவசிச் உடன் 1-2 ஆடி இடது பக்கம் முன்னேறிய டிமோ வெர்னர், பாக்சுக்குள் நுழைந்து ரியல் மாட்ரிட் வீரர்களை ஏமாற்றி கோலடித்தார். இதனால், 4-3 என முன்னிலை பெற்று அரையிறுதியில் ஒரு காலை எடுத்தது வைத்தது செல்சீ.

Luka Modric
Luka Modric
AP

ஆனால், 80-வது நிமிடத்தில் கோலடித்து மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவந்தார் இளம் வீரர் ராட்ரிகோ. லூகா மோட்ரிச் கொடுத்த அட்டகாசமான பாஸை வாலி மூலம் கோலடித்தார் அவர். ஆட்டம், கூடுதல் நேரத்துக்குச் செல்ல, அதில் தன் டிரேட் மார்க் ஹெட்டர் மூலம் கோலடித்து, மீண்டும் மாட்ரிட்டை முன்னிலை பெறவைத்தார் பென்சிமா. அதன்பிறகு செல்சீ எவ்வளவு போராடியும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. அதனால், இந்தப் போட்டி 2-3 என முடிவுக்கு வந்தது. இரண்டு போட்டிகளையும் சேர்த்து 5-4 என்ற முன்னிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism