Published:Updated:

வெள்ளை மாளிகையைத் திரும்பிப் பார்க்க வைத்த மேகன் ரப்பினோ வெற்றிக் கூட்டணி!

கால்பந்து உலகக்கோப்பை சாம்பியன்கள் ( AP )

ஆண்கள் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை வெற்றி என்பது வெறும் கொண்டாட்டமே. ஆனால், பெண்கள் உலகக்கோப்பையில் வெற்றி என்பது உரிமையைக் கேட்கும் ஓர் ஆயுதம்.

வெள்ளை மாளிகையைத் திரும்பிப் பார்க்க வைத்த மேகன் ரப்பினோ வெற்றிக் கூட்டணி!

ஆண்கள் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை வெற்றி என்பது வெறும் கொண்டாட்டமே. ஆனால், பெண்கள் உலகக்கோப்பையில் வெற்றி என்பது உரிமையைக் கேட்கும் ஓர் ஆயுதம்.

Published:Updated:
கால்பந்து உலகக்கோப்பை சாம்பியன்கள் ( AP )

கடந்த ஆண்டு பாலெண்டார் விருது விழாவில், பெண்கள் கால்பந்தின் உலகின் சிறந்த வீராங்கனையாக நார்வேயைச் சேர்ந்த ஆடா ஹெகர்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழாவில் அவர் பேசும்போது, ''பெண்களும் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்தப் பாரபட்சத்தை சரிசெய்யும்வரை, நான் இனி தேசிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை'' எனத் தடாலடியாக அறிவித்தார்.

மேகன் ரப்பினோ
மேகன் ரப்பினோ
AP

உடனடியாக நார்வே அரசு கால்பந்து சம்மேளனம், பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிகரான ஊதியத்தை அறிவித்தது. பெண்கள் வெற்றி பெற்றால் ஒரு சமூகம் முன்னேறும் என்றால், அந்த வெற்றியின் கொண்டாட்டம் ஆண்கள் கால்பந்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்தானே. ஆனால், ஃபிரான்ஸில் சத்தமில்லாமல் முடிந்திருக்கிறது பெண்கள் உலகக்கோப்பை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4-வது முறையாக அமெரிக்க பெண்கள் கால்பந்து அணி உலக சாம்பியன் என்ற மகுடத்தைச் சூடியுள்ளது. இந்த வெற்றியில் கேட்கப்படுவது கொண்டாட்டத்தின் வெடிச்சத்தம் இல்லை; உரிமையின் கலகக்குரல். அரையிறுதியில் வென்று ஃபைனலுக்குச் சென்றவுடன் ''பெண்கள் கால்பந்து ஆண்கள் கால்பந்தைவிட எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது. ஆனால், ஊதியம் மட்டும் ஏன் மிகக்குறைவாக இருக்கிறது'' என்று US அணியின் கேப்டன் மேகன் ரப்பினோ கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கேட்டபோது, ''வென்றுவிட்டுப் பேசட்டும்'' என்றார். US National Women's Team (USNWT) இப்போது வென்றுவிட்டார்கள்.

மேகன் ரப்பினோ
மேகன் ரப்பினோ
AP

கால்பந்தைப் பொறுத்தவரை பெண்களுக்கென தனி விதிமுறைகள் கிடையாது. ஆண்கள் கால்பந்தில் இருக்கும் அதே விதிமுறைகள்தான். அதே அளவு மைதானம்தான். விளையாட்டிலும் அதே சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் இருக்கும். இந்த உலகக் கோப்பையும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமலேயே சென்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகக் கோப்பை பரேடில் US அணியின் கேப்டன் மேகன் ரப்பினோ பேசும்போது, ''இந்த டீமில் பர்ப்பிள் தலைமுடியும் உண்டு, பிங்க் முடியும் உண்டு. இங்கு டேட்டுவும் உண்டு, டிரெட்லாக்கும் உண்டு. வெள்ளச்சிகளும் இருக்கிறார்கள், கறுப்பிகளும் இருக்கிறார்கள், ஸ்டிரெய்ட்டும் இருக்கிறார்கள், கே பெண்களும் இருக்கிறார்கள். USWNT, பன்முகத்தன்மை கொண்ட அமெரிக்காவின் உண்மையான பிம்பம். அதனால்தான் இவர்கள் சாம்பியன்'' என்றார்.

கடைசி ஆட்டத்தின் முதல் கோல் கொண்டாட்டம்
கடைசி ஆட்டத்தின் முதல் கோல் கொண்டாட்டம்
AP
34 வயதாகும் மேகனிடம் நீங்கள் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, "நிச்சயம் விளையாடுவேன். போராடுவேன். எனக்கும், என்னுடைய அணிக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும், அமெரிக்கர்களுக்கும், அகதிகளுக்கும், எந்த நிறமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்குமான சமமான ஊதியத்துக்காக நான் போராடுவேன். செரீனா வில்லியம்ஸ் சொல்வதுபோல 'என்னுடைய கல்லறை வரை...' '' - மேகன் பேசி முடித்தபோது ஆர்ப்பரித்தது கூட்டம்.

மேகன் ரெப்பினோவின் குரல், பெண்களைச் சுற்றி கட்டப்பட்டுள்ள சுவர்களை உடைத்து, ஓங்கி ஒலிக்கிறது.

உலகக்கோப்பயை வென்ற கொண்டாட்டம்
உலகக்கோப்பயை வென்ற கொண்டாட்டம்
AP

இறுதிப் போட்டியில் தோற்ற நெதர்லாந்தோ, 3-ம் இடம் பிடித்த ஸ்வீடனோ, போராடி வெளியேறிய இங்கிலாந்தோ, பிரான்ஸோ, இத்தாலியோ யார் வென்றிருந்தாலும் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இது கால்பந்துக்காக மட்டும் கேட்கப்படும் கேள்வியல்ல உலகின் அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களுக்கான ஊதியம் குறைவாகவே வழங்கப்படுவதால் எழும் கேள்வி. இது ஒரு வெற்றியாளரின் குரல் அல்ல, அணியின் குரல் அல்ல, ஒரு நாட்டினுடைய குரல் அல்ல... இது ஒரு சமூகத்தின் குரல். பெண்களுக்கு எப்போது சமமான ஊதியம் வழங்கப்போகிறீர்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism