Published:Updated:

ஐரோப்பாவில் நடக்கும் ஒரே கால்பந்துத் தொடர்... எப்படி சாத்தியமானது பெலாரஸ் பிரீமியர் லீக்?

Belarus Premier League

மொத்த விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்துக் கிடக்கும் இந்த வேளையில், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் நடந்துகொண்டிருக்கிறது பெலாரஸ் பிரீமியர் லீக்.

ஐரோப்பாவில் நடக்கும் ஒரே கால்பந்துத் தொடர்... எப்படி சாத்தியமானது பெலாரஸ் பிரீமியர் லீக்?

மொத்த விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்துக் கிடக்கும் இந்த வேளையில், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் நடந்துகொண்டிருக்கிறது பெலாரஸ் பிரீமியர் லீக்.

Published:Updated:
Belarus Premier League

மொத்த விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்துக் கிடக்கும் இந்த வேளையில், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் நடந்துகொண்டிருக்கிறது பெலாரஸ் பிரீமியர் லீக். கொரோனா தொற்று, காலி மைதானம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தை முக்கியமாகக் கருதும், ``வோட்கா குடித்தால் கொரோனா வராது” என்று சொல்லும் ஒரு ஆட்சியாளர் இருக்கும்போது அங்கு கால்பந்து நடப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லைதானே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா ஐரோப்பாவில் பரவத் தொடங்கிய காலகட்டத்திலேயே, பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ போன்ற முக்கிய லீக்குகளை அந்தந்த நாட்டின் கால்பந்து சங்கங்கள் நிறுத்தி வைத்தன. யூரோ கோப்பை ஒரு வருடம் தள்ளிப்போனது. பெல்ஜியம் கால்பந்து சங்கம் லீக்கை இப்போதே முடித்து வெற்றியாளரை அறிவித்துவிட்டது. பல நாடுகளிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் நடந்துகொண்டிருக்கிறது. வெற்றியாளரை அறிவிக்காவிட்டால் ஐரோப்பிய போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என்று UEFA அறிவித்திருப்பதால், சீஸனை முடிக்க வேண்டிய கட்டாயம் அனைத்து லீக்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்போது எந்தக் காரணத்துக்காகவும் சீஸனைத் தொடரக்கூடாது என்பதில் முன்னணி அமைப்புகள் தீர்க்கமாக இருக்கின்றன.

Euro 2020
Euro 2020
AP

சமீபத்தில் பல கட்டுப்பாடுகளோடு பயிற்சியைத் தொடங்கியது பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆண்டர்லெக்ட் அணி. ஆனால், அது பெரும் விமர்சனத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. தன் வீரர் எண்டோம்பலேவை தனியாகப் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற பிரபல பயிற்சியாளர் மொரினியோ மீதும் கடும் விமர்சனங்கள் விழுந்தன. மொத்த உலகமும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில், தங்கள் பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கிய பிரீமியர் லீக் கிளப்களான லிவர்பூல், போர்ன்மௌத் மீது ரசிகர்களின் கோபம் பாய்ந்தது. பல அணிகள் வீரர்களின் சம்பளத்தைக் குறைப்பது பற்றி ஆலொசித்துக்கொண்டிருக்கின்றன. வீரர்களும் சூழ்நிலையை உணர்ந்து அதற்குத் தயாராக இருக்கிறார்கள். இப்படி மொத்த கால்பந்து உலகமுமே விழிபிதுங்கிக் கிடக்கிறது. ஆனால், மொத்த ஐரோப்பாவும் விதிவிலக்காக பெலாரஸ் மட்டும் போட்டிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெலாரஸைப் பொறுத்தவரை அங்கு பெரிதாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அதனால் போட்டிகளுக்கு ரசிகர்கள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டே இருக்கிறது. இப்போது 100 ரசிகர்கள்கூட ஆட்டத்தைக் காணச் செல்வதில்லை. இருந்தாலும் சளைக்காமல் போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எந்த கால்பந்துப் போட்டியும் நடக்காத காரணத்தால், இப்போது இந்தத் தொடரின் மீது உலகம் முழுக்க இருக்கும் கால்பந்து ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. டிரீம் லெவனில் இப்போது இந்தக் கால்பந்து தொடர் (மற்றும் எங்கு நடக்கிறது என்றே தெரியாது ஒரு பேஸ்கட்பால் லீக்) மட்டும் நடந்துகொண்டிருப்பதால் இந்தியாவிலும் கொஞ்சம் பப்ளிசிட்டி பெற்றிருக்கிறது பெலாரஸ் லீக்.

நடப்பு பெலாரஸ் லீக் சாம்பியனான டைனமோ பிரஸ்ட் அணி, இந்தப் பப்ளிசிட்டியை பாசிட்டிவாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. மைதானத்துக்கு வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்த சியர் லீடர்கள், மைதானத்துக்கு வரவைக்க சலுகைகள் என்று ஒருபக்கம் செய்துகொண்டிருக்க, அதைவிடப் புதுமையான ஒரு திட்டத்தையும் கையாண்டுகொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் மைதானத்துக்கு வரவில்லையென்றாலும், ஆன்லைனில் டிக்கெட் வாங்கலாம். அப்படி டிக்கெட் வாங்கும் ரசிகர்களின் முகங்கள் டம்மிக்களில் ஒட்டப்பட்டு, அவை மைதானத்தில் அமர்ந்திருப்பதுபோல் செட் அப் செய்யப்படும். உலக ரசிகர்களின் கவனத்தை சற்று ஈர்த்திருப்பதால், அனைத்து நாட்டு கிளப்களின் ஜெர்சிக்களையும் அந்த டம்மிக்களுக்கு அணிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டத்தை நேரில் பார்க்க விருப்பமில்லையென்றாலும் தங்களின் முகம் மைதானத்தில் இருக்குமென்பதால் ரசிகர்களும் சந்தோஷமாக ஆன்லைனில் டிக்கெட் வாங்குகிறார்கள். அதனால், இப்போது டிக்கெட் விற்பனை சற்று அதிகரித்திருக்கிறது.

மற்ற நாடுகளில் கால்பந்து சங்கங்கல் ஓரளவு விரைந்து நடவடிக்கை எடுத்த நிலையில், பெலாரஸ் கால்பந்து கூட்டமைப்பு இப்படி எந்த முடிவும் எடுப்பதாகத் தெரியவில்லை. ஒருசில அணிகளும் வீரர்களுமே தங்களின் சங்கடங்களை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்டியை நடத்துவதிலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை. இதற்கு முக்கியக் காரணம், அங்கிருக்கும் அரசாங்கத்தின் சார்புநிலை.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகசென்கோ 25 ஆண்டுகளாகத் தன் சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். worldometers.info வலைதளத்தின்படி நேற்றைய தேதிக்கு பெலாரஸில் மொத்தம் 3,281 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 33 பேர் இறந்திருக்கிறார்கள். பெலாரஸிலிருக்கும் அதிகாரிகளுக்குமே சமீபத்தில் 29 கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பதை ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால், அதையெல்லாம் முழுமையாக மறுத்திருக்கிறார் லுகசென்கோ. “இதுவரை பெலாரஸில் ஒரு கொரோனா பலிகூட ஏற்படவில்லை. ஏற்படப்போவதுமில்லை” என்று தீர்க்கமாகச் சொல்கிறார். இதுவரை இறந்தவர்கள் ஏற்கெனவே இருந்த நோய்களால்தான் இறந்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இந்திய, அமெரிக்கா ஆட்சியாளர்களைப்போல் சம்பந்தமே இல்லாமல் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறார். "வோட்கா சாப்பிடுங்கள், டிராக்டர் ஓட்டுங்கள், ஆட்டுக்குட்டியோடு விளையாடுங்கள்" என்றெல்லாம் தன் மக்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்படிச் செய்தால் கொரோனா வராது என்றும் சொல்கிறார். இப்படியொரு ஆட்சியாளர் இருக்கும்போது அங்கு கால்பந்து நடப்பதில் ஆச்சர்யம் இல்லைதானே! இதில் என்ன கொடுமையெனில், இனியும் சரியான நடவடிக்கை இருக்காது என்றுதான் பலரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தை கவனிப்பதுதான் முக்கியம் என்று லுகசென்கோ கருதும் நிலையில், மற்ற நாடுகளைப்போல் அவர் ஊரடங்கைப் பிறப்பிக்க மாட்டார் என்றே தெரிகிறது. அந்நாட்டு அதிகாரிகள் பெலாரஸ் மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என்று அஞ்சுகிறார்கள். மீண்டுமொரு செர்னோபில் நிகழலாம் என்று வருந்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கருத்தில் உறுதியாக இருக்கிறார் பெலாரஸ் அதிபர். உலக அமைப்புகள் களத்தில் இறங்கினால்தான் அந்த நாட்டில் மாற்றம் ஏற்படும்.

Alexander Lukashenko
Alexander Lukashenko

சீரி ஏ, பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் முன்பே போட்டிகளை நிறுத்தி வைத்திருந்தாலும், அதில் ஆடும் வீரர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகுதான் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. பெலாரஸ் கால்பந்து அமைப்பும் அப்படி வீரர்கள் அவதிப்படும்வரை காத்திருக்கப்போகிறதா தெரியவில்லை. இந்த விஷயத்தில் UEFA தலையிடாமல் அமைதியாக இருப்பதும் கொடுமையாக இருக்கிறது. லீக்கின் முடிவுகள் வர வேண்டும் என்று உறுதியாகச் சொல்லியிருக்கும் அந்த அமைப்பு வீரர்களின் நலன் பற்றி யோசிக்காமல் இருப்பது முட்டாள்தனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism