Published:Updated:

கடைசி 2 நிமிடங்களில் 2 கோல்கள். ஆன்டோனியோ கான்டே தலைமையில் அசத்தும் ஸ்பர்ஸ்!

Antonio Conte ( AP )

லெஸ்டர் சிட்டி, டாட்டான்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிரிமீயர் லீக் போட்டியில், கடைசி 2 நிமிடங்களில் 2 கொல்கள் அடித்து வெற்றியைப் பறித்தது ஸ்பர்ஸ். ஆன்டோனியோ கான்டே தலைமையில் இன்னும் பிரீமியர் லீகில் தோற்கவில்லை என்ற ரெக்கார்டையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

கடைசி 2 நிமிடங்களில் 2 கோல்கள். ஆன்டோனியோ கான்டே தலைமையில் அசத்தும் ஸ்பர்ஸ்!

லெஸ்டர் சிட்டி, டாட்டான்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிரிமீயர் லீக் போட்டியில், கடைசி 2 நிமிடங்களில் 2 கொல்கள் அடித்து வெற்றியைப் பறித்தது ஸ்பர்ஸ். ஆன்டோனியோ கான்டே தலைமையில் இன்னும் பிரீமியர் லீகில் தோற்கவில்லை என்ற ரெக்கார்டையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
Antonio Conte ( AP )

95வது நிமிடம் வரை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த லெஸ்டர் சிட்டி அணியே வெற்றி பெறும் என போட்டியை காண்பவர்கள் நினைத்து கொண்டிருந்தார்கள்.கான்டேவின் அணி முதல் பிரிமீயர் லீக் தோல்வியை தழுவ கூடும் என்று எண்ணி கொண்டிருந்த வேளையில், கூடுதல் நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டத்தின் முடிவு மாற்றி அமைக்கப்பட்டது.

நட்சத்திர வீரர் ஜேமி வார்டி காயத்தால் அவதியுற, அவர் இல்லாமல் ஸ்பர்ஸ் அணியை கிங் பவர் மைதானத்தில் எதிர்கொண்டது லெஸ்டர் சிட்டி. போட்டி துவங்கியதில் இருந்து சரிக்கு சமமாக இரண்டு அணிகளும் வாய்ப்புகளை உருவாக்கி ஆடி வந்தது. ஸ்பர்ஸ் வீரர் ஹரி கேன் அடித்த ஒரு பந்து கோல் கம்பத்தின் ஓரத்தில் பட்டு வெளியே சென்றது. மற்றொரு கார்னர் கிக்கை ஹரி கேன் தலையால் முட்டி அடித்தபோது கம்பத்தின் மேலே பட்டு பறந்தது.

போட்டியின் 24-வது நிமிடத்தில் லெஸ்டர் வீரர் பாட்சன் டாகா சக வீரரிடமிருந்து பந்தை பெற்று அருமையாக கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக 38வது நிமிடத்தில் ஹரி கேன், ஹாரி விங்ஸிடம் பந்தை பெற்று கோல் அடித்தார். இந்த பந்து கோல் கம்பத்தில் உள் முனையில் அடித்ததால், முன்பு போல தப்பிக்காமல் கோலானது. 1-1.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டியின் 76வது நிமிடத்தில் லெஸ்டர் வீரர் ஜேம்ஸ் மேடிசன் அற்புதமாக பாஸ் பெற்று கோலாக்கினார்.ஜேம்ஸ் மேடிசன் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் 8 கோல்கள், 5 அசிஸ்ட்கள் என அருமையான ஃபார்மைத் தொடர்ந்து வருகிறார். அடுத்த சில நிமிடங்கள் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் இந்த போட்டியில் லெஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் கூடுதல் நிமிடத்தில் முடிவு வேறானது.

Tottenham Hotspur
Tottenham Hotspur
AP

95வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் வீரர் ஸ்டீவன் பெர்க்வின், தடுமாறிய லெஸ்டர் சிட்டி வீரரை தாண்டி கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டியை சமன் செய்ததை எதிர்பாராத லெஸ்டர் அணியை மேலும் உருக்குலைக்கும் விதமாக 97வது நிமிடத்தில் ஹாரி கேன் துல்லியமாக கொடுத்த த்ரூ பாலை பெற்று முந்தைய கோல் அடித்த ஸ்டீவன் பெர்க்வினே மீண்டும் கோல் அடித்து அணியை வெற்றி கொள்ள செய்தார். கடைசி நிமிடத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றி பெற்றதால், ஸ்பர்ஸ் அணி வீரர்களும் ரசிகர்களும் ஆர்ப்பரித்தார்கள். தோல்வியை நம்ப முடியாமல் லெஸ்டர் சிட்டி அணி வீரர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினார்கள்.

Antonio Conte
Antonio Conte
AP

டாட்டான்ஹாம் ஹாட்ஸ்பர் அணி மோசமான தோல்விகளை சந்தித்து கொண்டிருந்ததால், அணியின் பயிற்சியாளர் நுனோ எஸ்பெரிடோ சான்டோவை நீக்கிவிட்டு, ஆன்டோனியா கான்டேவை கடந்த நவம்பர் மாதத்தில் நியமனம் செய்தது நிர்வாகம். கான்டே அந்த அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றத்தில் இருந்து, அந்த அணி பங்கேற்ற 9 பிரிமீயர் லீக் ஆட்டத்தில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. 6 போட்டிகளில் வெற்றியையும் 3 போட்டிகளில் டிராவையும் சந்தித்து இருக்கிறது. மற்ற கோப்பை போட்டிகளில் வெற்றி தோல்விகளை பெற்று வந்தாலும், பிரிமீயர் லீக் போட்டிகளில் நிலையாக விளையாடி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆன்டோனியா கான்டே - லீக் கோப்பை வெல்லாத அணிகளுக்கு கோப்பைகளை வென்று தருவதில் வல்லவர் என புகழப்பட்டு வருபவர். 2011-ம் ஆண்டு இத்தாலியின் யுவென்டஸ் அணிக்கு பொறுப்பேற்ற காண்டே, 2004 ஆண்டுக்கு பிறகு சீரி ஆ (Serie A) தொடரை தொடர்ந்து மூன்று முறை வென்று கொடுத்தார். 2017-ம் ஆண்டு செல்சீ அணிக்கு பொறுப்பேற்ற காண்டே முதல் சீசனிலேயே பிரிமீயர் லீக் வென்றார். அதன் பின் இத்தாலியின் இன்டர்மிலன் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இவர், தன்னுடைய இரண்டாவது சீசனில் சீரி ஆ (Serie A) கோப்பையை வசமாக்கினார்.

இவ்வாறு தான் நியமனம் செய்யப்படும் அணிக்கு கோப்பைகளை வென்று கொடுக்கும் காண்டே 2008-ம் ஆண்டுக்கு பின் கோப்பை வெல்லாத ஸ்பர்ஸ் அணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தலைமையில் அந்த அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. 19 போட்டிகளில் 11 வெற்றிகள், 3 டிரா ,5 தோல்விகள் என 36 புள்ளிகளுடன் பிரிமீயர் லீக் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளை ஒப்பிடும் போது குறைந்த ஆட்டத்தில் விளையாடி இருப்பதால், எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism