Published:Updated:

மெஸ்ஸி பயன்படுத்திய `டிஷ்யூ பேப்பர்'... 4 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய பிரபலம்!

லயோனல் மெஸ்ஸி

மெஸ்ஸி கண்ணீரைத் துடைத்த அந்த டிஷ்யூ பேப்பரைக் கண்டறிந்து எடுத்து அதனை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடும் இணையதளம் ஒன்றில் பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:

மெஸ்ஸி பயன்படுத்திய `டிஷ்யூ பேப்பர்'... 4 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய பிரபலம்!

மெஸ்ஸி கண்ணீரைத் துடைத்த அந்த டிஷ்யூ பேப்பரைக் கண்டறிந்து எடுத்து அதனை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடும் இணையதளம் ஒன்றில் பதிவிட்டிருக்கிறார்.

லயோனல் மெஸ்ஸி

கோப்பா அமெரிக்கா கால்பந்துத் தொடரை அர்ஜென்டினாவுக்கு வென்று கொடுத்துவிட்டு, பார்சிலோனா ரசிகர்களுக்கு அந்த துக்கமான செய்தியையும் சேர்த்துக் கொடுத்தார் மெஸ்ஸி. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி பார்சிலோனா அணியைவிட்டு தான் விடைபெறும் துயரமான செய்தியையும் தெரிவித்தார். 21 வருடங்கள் பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடிவிட்டு விடைபெறும் அந்த நேரத்தில் மேடையில் அவர் உடைந்து தேம்பி அழுத காட்சியைப் பார்த்து கால்பந்து உலகமே சோகத்தில் மூழ்கியது. அவர் தேம்பி அழுத அந்த நேரத்தில் அவரைத் தேற்றி, அவர் கண்ணீரைத் துடைக்க அவரது மனைவி ஆன்டோநெலா டிஷ்யூ பேப்பர் ஒன்றைக் கையில் கொடுத்தார்.

டிஷ்யூ பேப்பரை வாங்கிய மெஸ்ஸி தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்த டிஷ்யூவைக் கீழே போட்டுச் சென்றுவிட்டார். மெஸ்ஸி கண்ணீரைத் துடைத்த அந்த டிஷ்யூ பேப்பரை கண்டறிந்து எடுத்து அதனை விற்பனைக்காக இணையதளம் ஒன்றில் பதிவிட்டிருக்கிறார்கள். அதன் விலை 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள். மெஸ்ஸி பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் ஏலத்திற்கு வந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. நிலைமை இப்படி இருக்க, அந்த டிஷ்யூ பேப்பரை வாங்குவதற்கு பிரேசிலைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் முன்வந்திருப்பது தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

லுவானா சான்டைன்
லுவானா சான்டைன்

பிரேசிலின் மாடலும், பார்சிலோனா கால்பந்து அணியின் தீவிர ரசிகையுமான 27 வயது லுவானா சான்டைன் (Luana Sandien) தான் மெஸ்ஸி பயன்படுத்திய அந்த டிஷ்யூ பேப்பரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 50,000 பாலோவர்களுக்கு மேல் வைத்திருக்கும் அவர் மெஸ்ஸி பயன்படுத்திய அந்த டிஷ்யூ பேப்பரை 4,38,000 பவுண்ட்களுக்கு (இந்திய மதிப்பில் 4.45 கோடி ரூபாய்) வாங்குவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்த பிரேசிலியன் மாடல்.

இவ்வளவு மதிப்பிற்கு அந்த டிஷ்யூ பேப்பரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியிருந்தாலும், அந்த டிஷ்யூ பேப்பருக்கான ஏலம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. யார் நீக்கினார்கள், என்ன காரணம் என்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், மெஸ்ஸி பயன்படுத்தினார் என்பதற்காகவே ஒரு டிஷ்யூ பேப்பருக்கு 4 கோடி ரூபாய் கொடுக்க ஒருவர் முன் வந்திருக்கிறார் என்பதே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.