Published:Updated:

ISL: இணைந்த கைகளாக அசத்திய சேத்ரி - உதாண்டா... சமநிலை தவறி சொதப்பிய சென்னையின் FC!

Udanda ( ISL )

ஒரு போட்டியில் டிஃபன்ஸில் அதிக கவனம் செலுத்தி சொதப்ப, அடுத்த போட்டியில் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்தி சொதப்ப, கடைசியில் இந்தப் போட்டியில் இரண்டிலுமே சொதப்பி ஏமாற்றமளித்திருக்கிறது சென்னையின் FC.

ISL: இணைந்த கைகளாக அசத்திய சேத்ரி - உதாண்டா... சமநிலை தவறி சொதப்பிய சென்னையின் FC!

ஒரு போட்டியில் டிஃபன்ஸில் அதிக கவனம் செலுத்தி சொதப்ப, அடுத்த போட்டியில் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்தி சொதப்ப, கடைசியில் இந்தப் போட்டியில் இரண்டிலுமே சொதப்பி ஏமாற்றமளித்திருக்கிறது சென்னையின் FC.

Published:Updated:
Udanda ( ISL )
இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8 இன் 72 வது லீக் போட்டியில் சென்னையின் FC அணி பெங்களூருவை நேற்று எதிர்க்கொண்டிருந்தது. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 3-0 என வென்றிருக்கிறது. டிஃபன்ஸிவ்வில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக விமர்சிக்கப்பட்ட சென்னை அணி டிஃபன்ஸ்-அட்டாக்கிங் என இரண்டிலுமே கோட்டைவிட்டு தோல்வியை தழுவியிருக்கிறது.

அதே வழக்கமான 3-5-2 ஃபார்மேஷனுடனே சென்னையின் FC அணி களமிறங்கியிருந்தது. பெங்களூர் அணி 4-3-3 ஃபார்மேஷனோடு களமிறங்கியிருந்தது. உடல்நலக்குறைவால் சென்னை அணியின் கேப்டன் அனிருத் தாப்பா இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் விளாடிமிர் கோமன் கேப்டனாகச் செயல்பட்டிருந்தார். கடந்த போட்டியில் தொடக்க லெவனில் ஃபார்வர்டுகளாக ரஹீமும் வால்ஸ்கிஸும் இடம்பெற்றிருந்தனர். இந்தப் போட்டியில் அவர்களுக்குப் பதிலாக மீண்டும் மிர்லான் முர்சேவ் மற்றும் லூகாஸை இறக்கியிருந்தார் பயிற்சியாளர் பேண்டோவிச்.

பெங்களூரு அணி இந்தப் போட்டியில் மூன்று கோல்களை அடித்திருந்தது. சென்னை அணி பதிலுக்கு ஒரு கோலை கூட அடிக்கவில்லை. ஆனால், பெங்களூரு அணியின் மூன்று கோல்களுக்குமே சென்னையின் FC வீரர்கள் செய்திருந்த தவறே மூலதனமாக அமைந்திருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே எட்வின் மூலம் சுனில் சேத்ரி ஒரு ஃபவுலை பெற்றுக்கொடுக்க, அதில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இமான் 12வது நிமிடத்தில் முதல் கோலை அடித்திருந்தார்.

இமான்
இமான்
ISL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெங்களூரு அணியின் செட் பீஸ் வாய்ப்புகளைக் கூடுதல் கவனத்தோடு டிஃபண்ட் செய்ய வேண்டும். செட் பீஸ்களை கோலாக மாற்றுவதில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
பேண்டோவிச்

என இந்த போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னையின் பயிற்சியாளர் பேண்டோவிச் பேசியிருந்தார். ஆனால், இங்கே முதல் கோலே செட் பீஸ் மூலம்தான் கிடைத்திருந்தது. இமான் இடதுபக்க போஸ்ட்டை குறிவைத்து ஷாட் எடுக்க அதை சரியாகக் கணிக்காமல் வலதுபக்கமாக பாய்ந்து சென்னையின் பெரும்நம்பிக்கையான கோல் கீப்பர் தேப்ஜித் மஜூம்தாரே சொதப்பியிருந்தார். பெங்களூரு அணி 1-0 என முன்னிலையை பெற்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெங்களூரு அணியின் இரண்டாவது கோல் 42 வது நிமிடத்தில் வந்திருந்தது. கேப்டன் சுனில் சேத்ரியும் உதாண்டாவும் இணைந்து அட்டகாசமாக இந்த கோலை அடித்திருந்தனர். இங்கேயும் எட்வினே தவறு செய்திருந்தார். மிட் ஃபீல்டில் அவர் செய்த மிஸ் பாஸை பயன்படுத்தி உதாண்டா ட்ரிப்பிள் செய்து இறங்கி ஆடினார். அவரிடமிருந்து சுனில் சேத்ரி பாஸை பெற்று இருவரும் கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறினர். இந்த சமயத்தில் சஜித், டேம்ஜோவிச், நாரயண் தாஸ், எட்வின் என சென்னை அணியின் நான்கு டிஃபண்டர்கள் சேத்ரியை சுற்றி வளைத்தனர். ஆனால், அந்த நான்கு பேரையுமே லாகவமாக ஏமாற்றி ட்ரிப்பிள் செய்து உதாண்டாவிடம் சேத்ரி பாஸ் செய்ய தடுப்பதற்கு டிஃபண்டர்களே இல்லாத நிலையில் உதாண்டா அட்டகாசமாக கோலை அடித்தார். பெங்களூரு 2-0 என முன்னிலையை பெற்றது.

11 போட்டிகளாக கோல் அடிக்காமல் கடந்த போட்டியில் கோல் அடித்த சேத்ரி, இந்தப் போட்டியில் சீசனின் சிறந்த அசிஸ்ட்களில் ஒன்றை செய்து அசத்தியிருந்தார்.
Chethri & Udanda
Chethri & Udanda
ISL

பெங்களூரு அணியின் மூன்றாவது கோல் 52 வது நிமிடத்தில் வந்திருந்தது. இதையும் உதாண்டாவே அடித்திருந்தார். இடது ஓரத்திலிருந்து பாஸை பெற்றுக்கொண்டு பாக்ஸை நோக்கி முன்னேறிய உதாண்டாவை டிஃபண்டரான சஜித் குறுக்கே புகுந்து தடுக்க முயன்றிருப்பார். ஆனால், அவர் சரியாக டிஃபண்ட் செய்யாமல் ஸ்லிப் ஆகவே உதாண்டா எந்த சிரமமும் இன்றி இரண்டாவது கோலை அடித்தார். பெங்களூரு 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

பெங்களூரு அடித்த இந்த மூன்று கோல்களுக்குமே எதோ ஒரு விதத்தில் சென்னையின் வீரர்கள் செய்த தவறே மிகமுக்கிய காரணமாக இருந்தது. வழக்கமாக சிறப்பாக செய்யும் டிஃபன்ஸிலேயே இப்படி என்றால் அட்டாக்கில் சொல்லவா வேண்டும்? அங்கேயும் சொதப்பல்களைத் தொடர்ந்தார்கள். 9 வது நிமிடத்தில் கோல் போஸ்ட்டின் அருகே சென்னை அணிக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. வலது ஓரத்திலிருந்து கிடைத்த க்ராஸை சரியாக வாங்கி அடித்திருந்தால் சென்னை அணியே போட்டியின் முதல் கோலை அடித்திருக்கும். ஆனால் லூகாஸ், முர்சேவ் இருவருமே இந்த வாய்ப்பை கோட்டை விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

க்ராஸை இடதுகாலால் கோல் போஸ்ட்டிற்குள் தள்ள முயன்ற லூகாஸ் அதை சரியாக செய்யாமல் போக பந்து போஸ்ட்டில் பட்டு ஜஸ்ட் மிஸ் ஆனது. அந்தப் பந்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்து இன்னொரு முறை முயலும் வாய்ப்பு முர்சேவுக்கு கிடைத்தது. ஆனால், அவரும் அதை கோட்டைவிட்டார். அட்டாக்கிங் தேர்டில் சென்னை அணி சொதப்புவதை வாடிக்கையாகவே இருக்கிறது. டிஃபன்ஸிவ் மனநிலையில் ஆடுவதால் அட்டாக் செய்து இறங்கி ஆடும்போது கூட பாக்ஸிற்குள் பெரிய சப்போர்ட் கிடைப்பதே இல்லை. இதனால் கோமன் மாதிரியான வீரர்கள் பாக்ஸிற்கு வெளியே இருந்தே லாங் ரேஞ்ச் ஷாட்களை அதிகம் முயற்சிக்கிறார்கள். இந்தப் போட்டி என்றில்லை பல போட்டிகளாகவே அட்டாக்கில் ஒரு திட்டமே இன்றிதான் சென்னை அணி களமிறங்குகிறது. பெங்களூருவிற்கு எதிரான இந்த போட்டியில் அட்டாக்கோடு சேர்ந்து டிஃபன்ஸுமே பரிதாபமாக மாறியிருந்தது.

சென்னை அணியின் பயிற்சியாளராக பேண்டோவிச் பொறுப்பேற்றவுடன் கொடுத்த முதல் பேட்டியில்...

Mursev
Mursev
ISL
டிஃபண்ஸ் மற்றும் அட்டாக் இரண்டிலுமே சீராக சமநிலையுடன் ஆடும் அணியே ஒரு தொடரை வெல்ல முடியும். அப்படி ஒரு அணியைத்தான் கட்டமைக்க வேண்டும்.
பேண்டோவிச்

எனப் பேசியிருந்தார். ஆனால், சென்னையின் FC அப்படியிருப்பதாகவே தெரியவில்லை. ஒரு போட்டியில் டிஃபன்ஸில் அதிக கவனம் செலுத்தி சொதப்ப, அடுத்த போட்டியில் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்தி சொதப்ப, கடைசியில் இந்தப் போட்டியில் இரண்டிலுமே சொதப்பி ஏமாற்றமளித்திருக்கிறது. பேண்டோவிச் சொன்ன அந்த சமநிலையை சென்னை எப்போதுதான் அடையப்போகிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism