Published:Updated:

Premier League: பெனால்டியைத் தவறவிட்ட முகமது சலா... லிவர்பூல் அதிர்ச்சித் தோல்வி!

Kasper Schmeichel saving Salah's penalty ( AP )

உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் சலா, அந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். அவர் அடித்த ஷாட்டை சிறப்பாகத் தடுத்தார் லெஸ்டர் கேப்டன் கேஸ்பர் ஸ்மெய்கல். பந்தோ ரீபௌண்ட் ஆகி மீண்டும் சலாவிடமே சென்றது. ஆனால், அவர் செய்த ஹெட்டர் கிராஸ் பாரில் பட்டுத் திரும்ப...

Premier League: பெனால்டியைத் தவறவிட்ட முகமது சலா... லிவர்பூல் அதிர்ச்சித் தோல்வி!

உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் சலா, அந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். அவர் அடித்த ஷாட்டை சிறப்பாகத் தடுத்தார் லெஸ்டர் கேப்டன் கேஸ்பர் ஸ்மெய்கல். பந்தோ ரீபௌண்ட் ஆகி மீண்டும் சலாவிடமே சென்றது. ஆனால், அவர் செய்த ஹெட்டர் கிராஸ் பாரில் பட்டுத் திரும்ப...

Published:Updated:
Kasper Schmeichel saving Salah's penalty ( AP )

தொடர்ந்து 7 பிரீமியர் லீக் போட்டிகளாக தோல்வியடையாமல் இருந்துவந்த லிவர்பூலுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது லெஸ்டர் சிட்டி. சௌதாம்ப்டன் அணியுடனான போட்டியில் 1-1 என டிரா செய்திருக்கிறது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். இதன்மூலம் அந்த அணியின் வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியடையாத முதல் பயிற்சியாளர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ஆன்டோனியோ கான்டே.

பிரீமியர் லீகின் மிகவும் முக்கியமான, அதே நேரம் மிகவும் கடுமையான காலகட்டம் டிசம்பர் மாதம். மற்ற லீகெல்லாம் வின்டர் பிரேக்கில் இருக்கும்போது, இங்கு மட்டும் போட்டிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். வழக்கத்தைவிட அதிகமான போட்டிகள் நடக்கும். தொடர்ந்து போட்டிகள் நடப்பதால், வீரர்கள் சோர்வடைவார்கள். ஒருசில போட்டிகளில் முக்கிய வீரர்களுக்கும் ஓய்வு தரவேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில்தான் பல அணிகள் புள்ளிகளை இழக்கும். நேற்று இரவு நடந்த போட்டிகளில் முன்னணி அணிகளான லிவர்பூல், டாட்டன்ஹாம் புள்ளிகளை இழந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிங் பவர் ஸ்டேடியத்தில் லிவர்பூலை எதிர்கொண்டது லெஸ்டர் சிட்டி. இந்த சீசனில் மிகவும் சுமாராக விளையாடிக்கொண்டிருக்கிறது அந்த அணி. முந்தைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக 6 கோல்கள் வாங்கியிருந்தது அந்த அணி. அந்த அளவுக்கு அவர்களின் டிஃபன்ஸ் படுமோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த 20 போட்டிகளில் இரண்டில் மட்டுமே கிளீன் ஷீட் வைத்திருந்தது. அதனால், அட்டகாசமான அட்டாக் கொண்டிருக்கும் லிவர்பூலுக்கு எதிராக பல கோல்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாம் நேர் மாறாக நடந்தது.

Trent Alexander Arnold
Trent Alexander Arnold
AP

நடுகள வீரர் எண்டின் மீண்டும் சென்டர்பேக் ரோலில் களமிறக்கப்பட்டார். ஆனால், 15-வது நிமிடத்தில் அவரும் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். சலாவை பாக்சுக்குள் தள்ளி லிவர்பூலுக்கு பெனால்டியைப் பரிசாகக் கொடுத்தார். ஆனால், உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் சலா, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். அவர் அடித்த பெனால்டியை சிறப்பாகத் தடுத்தார் லெஸ்டர் கேப்டன் கேஸ்பர் ஸ்மெய்கல். பந்தோ ரீபௌண்ட் ஆகி மீண்டும் சலாவிடமே சென்றது. ஆனால், அவர் செய்த ஹெட்டர் கிராஸ் பாரில் பட்டுத் திரும்ப, அதை லெஸ்டர் வீரர்கள் எப்படியோ கிளியர் செய்துவிட்டனர்.

வழக்கமாக, பல வாய்ப்புகளை உருவாக்கும் லிவர்பூல் அணி, இந்தப் போட்டியிலும் நிறைய வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அந்த பெனால்டி வாய்ப்பைப்போல் எதுவும் அமையவில்லை. அவர்களால் இரு கோல் கூட அடிக்க முடியவில்லை. கோல் நோக்கி வந்த 4 ஷாட்களையும் மிகச் சிறப்பாகத் தடுத்தார் ஸ்மெய்கல். லிவர்பூலின் கோல் வாய்ப்புகள் கோலாகாமல் சென்றுகொண்டிருக்க, கோல் நோக்கி லெஸ்டர் அடித்த ஒரேயொரு ஷாட்டும் கோலானது.

களமிறங்கிய மூன்றே நிமிடங்களில் அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் அடோமெலா லுக்மேன். இடது விங்கில் இருந்து ஒரு அட்டகாசமான கவுன்ட்டர் அட்டாக் தொடங்கப்பட்டது. கீரன் டியூஸ்பெரு-ஹால் பாக்சுக்குள் அனுப்பிய பந்தை, சிறப்பாக கோலாக்கினார் லுக்மேன். இந்தப் போட்டியின் ஒரேயொரு கோலாக இது மாறியது. இதன்மூலமிந்த சீசனின் ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது அந்த அணி. இரண்டாவது தோல்பியைச் சந்தித்திருக்கும் லிவர்பூல் 41 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. செல்சீயும் அதே புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், கோல் வித்யாச அடிப்படையில் லிவர்பூல் முன்னிலை பெற்றிருக்கிறது.

சௌதாம்ப்டன், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதிய போட்டி 1-1 என டிரா ஆனது. சிறந்த ஃபார்மில் இருந்த ஸ்பர்ஸ் இந்தப் போட்டியில் வெற்று பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு புள்ளியைப் பெறுவதற்கே போராடவேண்டியிருந்தது. ஆட்டத்தின் 25-வது நிமிடத்திலேயே கோலடித்து சௌதாம்ப்டன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் அந்த அணியின் கேப்டன் ஜேம்ஸ் வார்ட்பிரௌஸ். முகமது சலிஸு வீசிய லாங் துரோவை ஸ்பர்ஸ் வீரர்கள் சரியாக டீல் செய்யாமல் போக, அதை அட்டகாசமாக கோலாக்கினார் அவர்.

ஆனால், அந்த அணிக்கு சலிஸுவே வில்லனாகவும் அமைந்தார். 39-வது நிமிடத்தில், ஹியூங் மின் சன்னை பாக்சுக்குள் ஃபவுல் செய்து பெனால்டியைக் கொடுத்தார் அவர். அதுமட்டுமல்லாமல், இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். கிடைத்த பெனால்டியை ஹேரி கேன் கோலாக்க, ஆட்டம் 1-1 என டிரா ஆனது. 10 பேர் கொண்ட அணிக்கெதிராக ஒரு பாதியை முழுதாக ஆடியும் கூட, ஸ்பர்ஸால் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த அந்த அணி, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இருந்தாலும், அந்த இடத்திலிருக்கும் வெஸ்ட் ஹாமைவிட 2 ஆட்டங்கள் குறைவாகவே விளையாடியிருக்கிறது.

Antonio Conte
Antonio Conte
AP

அந்த அணியின் வரலாற்றில் எந்த மேனேஜருமே முதல் 7 பிரீமியர் லீக் போட்டிகளில் தோற்காமல் இருந்ததில்லை. அதை மாற்றியிருக்கிறார் தற்போதைய மேனேஜரான ஆன்டோனியோ கான்டே. அதற்கு முன் நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் அணியும் நியூகாசிலுக்கு எதிராக வெற்றி பெறத் தவறியது. 1-1 என டிரா செய்து ஒரு புள்ளியோடு திருப்திபட்டுக்கொண்டது அந்த அணி. மற்ற போட்டிகளில், கிறிஸ்டல் பேலஸ் 3-0 என நார்விச் சிட்டியை, வெஸ்ட் ஹாம் யுனைடட் 4-1 என வாட்ஃபோர்டையும் விழ்த்தின.