Published:Updated:

எல் கிளாசிகோ: எக்ஸ்டிரா டைமில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்!

El Clasico ( AP )

தொடர்ந்து ஐந்தாவது முறையாக எல் கிளாசிகோ போட்டியை வென்றிருக்கிறது ரியல் மாட்ரிட். ஆனால், கடந்த போட்டிகளை விட இந்த முறை அதிகம் மெனக்கிட்டிருக்கிறது!

எல் கிளாசிகோ: எக்ஸ்டிரா டைமில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்!

தொடர்ந்து ஐந்தாவது முறையாக எல் கிளாசிகோ போட்டியை வென்றிருக்கிறது ரியல் மாட்ரிட். ஆனால், கடந்த போட்டிகளை விட இந்த முறை அதிகம் மெனக்கிட்டிருக்கிறது!

Published:Updated:
El Clasico ( AP )

ஸ்பானிஷ் சூப்பர் கப் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட். கடைசி சில போட்டிகளில் எல் கிளாசிகோவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ரியல் மாட்ரிட், கூடுதல் நேரத்தில் வெற்றிக்கான கோலை அடித்தது. அதேபோல், இங்கிலாந்தில் நடந்த கரபோவா கப் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரை வீழ்த்தியது செல்சீ.

ஸ்பெய்னில் அடித்து நொறிக்கிக்கொண்டிருக்கும் பென்சிமா - வினிசியஸ் ஜூனியர் கூட்டணியால் இந்தப் போட்டியில் முன்னிலை பெற்றது ரியல் மாட்ரிட். 25-வது நிமிடத்தில், பார்சிலோனா வீரர்களிடம் பந்தைப் பறித்து மோட்ரிச்சிடம் கொடுத்தார் பென்சிமா. மோட்ரிச் அதை மீண்டும் பென்சிமாவிற்கே அனுப்ப, இப்போது வினிசியஸுக்கு பாஸ் செய்தார் அந்த பிரான்ஸ் ஃபார்வேர்ட். உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் வினிசியஸ் அதை கோலாக்கி, மாட்ரிட்டுக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

41-வது நிமிடத்தில் எதிர்பாராத விதமாக பார்சிலோனா ஒரு கோல் போட்டது. இடது விங்கில் இருந்து ஓஸ்மான் டெம்பெளே அனுப்பிய கிராஸை கிளியர் செய்ய முற்பட்டார் எடர் மிலிடாவோ. அவர் கிளியர் செய்த பந்து அங்கு நின்றிருந்த லூக் டி யாங் மேல் பட்டு கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது. கோர்ட்வா முயற்சி செய்தும் அதைத் தடுக்க முடியாமல் போனது. முதல் பாதி 1-1 என டிராவில் முடிவடைந்தது.

Real Madrid
Real Madrid
AP

இரண்டாவது பாதி தொடங்கியபோதே இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது பார்சா. 66-வது நிமிடத்தில் மூன்றாவது மாற்றம் செய்த பார்சிலோனா பயிற்சியாளர் ஜாவி, காயத்திலிருந்து மீண்டு வந்த அன்சு ஃபடியைக் களமிறக்கினார். கடைசியாக நவம்பர் 6 தேதி விளையாடிய ஃபடி, அதன்பிறகு இப்போதுதான் முதல் முறையாக களமிறங்கினார். ஆனால், 20 நிமிடத்திற்குள்ளாகவே தன் கோல் கணக்கைத் தொடர்ந்தார். அதற்கு 10 நிமிடங்கள் முன்பு கரிம் பென்சிமா கோலடித்திருந்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலை அடைந்தது. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், அந்த சமநிலை தொடர்ந்ததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

98-வது நிமிடத்தில் கவுன்ட்டர் அட்டாக் மூலம் மூன்றாவது கோலை அடித்தது ரியல் மாட்ரிட். இளம் வீரர் ராட்ரிகோவை, கஸமிரோ வலது விங்கில் ரிலீஸ் செய்தார். அந்தப் பந்தை அற்புதமாக பாக்சுக்கு அனுப்பினார். இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட ஃபெடரிகோ வெல்வெர்டே சிறப்பாக ஃபினிஷ் செய்து கோலாக்கினார். அதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் 3-2 என முடிந்தது.

14-ம் தேதி நடக்கும் அத்லெடிகோ மாட்ரிட், அத்லெடிகோ பில்பாவோ அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் அணி, 17-ம் தேதி நடக்கும் ஃபைனலில் ரியல் மாட்ரிட்டுடன் மோதும்.

இங்கிலாந்தில் நடந்த லண்டன் டெர்பி போட்டியில் செல்சீ அணி ஸ்பர்ஸை வீழ்த்தியது. கரபோவா கப் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானத்தில் நடந்தது. ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் நடந்த முதல் சுற்றில் 2-0 என வெற்றி பெற்றது செல்சீ. கை ஹாவர்ட்ஸ் கோலடிக்க, பென் டேவிஸ் ஒரு ஓன் கோல் அடித்திருந்தார். இந்நிலையில், இரண்டாவது சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது ஸ்பர்ஸ். ஆனால், செல்சீயின் டிஃபன்ஸிவ் அரனை உடைக்க முடியவில்லை.

Ansu Fati is back!
Ansu Fati is back!
AP

18-வது நிமிடத்தில் செல்சீக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பு முதல் கோலையும் உருவாக்கிக்கொடுத்தது. மேசன் மௌன்ட் அந்த கார்னரை எடுக்க, அதை ஹெடர் மூலம் கோலாக்கினார் டிஃபண்டர் ஆன்டோனியோ ருடிகர். இறுதி வரை வேறு கோல்கள் அடிக்கப்படாததால், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது செல்சீ. இன்னொரு அரையிறுதியில் லிவர்பூல், ஆர்செனல் அணிகள் மோதுகின்றன.