Published:Updated:

UCL: பென்சிமா ஹாட்ரிக்கால் கம்பேக் கொடுத்த ரியல் மாட்ரிட்... மீண்டும் சொதப்பியது பி.எஸ்.ஜி!

UCL ( Manu Fernandez )

60 நிமிடம் வரை ஆட்டம் 1-0 என்றுதான் இருந்தது. 2-0 என முன்னிலை பெற்றிருந்தது பி.எஸ்.ஜி. இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், அதை மாற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு 18 நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.

UCL: பென்சிமா ஹாட்ரிக்கால் கம்பேக் கொடுத்த ரியல் மாட்ரிட்... மீண்டும் சொதப்பியது பி.எஸ்.ஜி!

60 நிமிடம் வரை ஆட்டம் 1-0 என்றுதான் இருந்தது. 2-0 என முன்னிலை பெற்றிருந்தது பி.எஸ்.ஜி. இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், அதை மாற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு 18 நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.

Published:Updated:
UCL ( Manu Fernandez )
சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட். 2 கோல்கள் பின்தங்கியிருந்த அந்த அணி, கடைசி 45 நிமிடங்களில் சிறப்பான கம்பேக்கை நிகழ்த்தி வெற்றியை வசமாக்கியிருக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மாட்ரிட் vs பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் ஆட்டம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களையும் ரசிகர்களுக்குக் கொடுத்தது. பாரிஸில் நடந்த முதல் போட்டியில் எம்பாப்பே அடித்த கோலால் 1-0 என்ற முன்னிலையுடன் இந்த ஆட்டத்தைத் தொடங்கியது பி.எஸ்.ஜி. அதே உத்வேகத்தில் முதல் பாதியிலும் சிறப்பாக விளையாடியது அந்த அணி. இடது பக்கமிருந்து எம்பாப்பே தொடர்ந்து அட்டாக் செய்ய, எளிதில் முதல் கோலை அடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் கோர்ட்வா கஷ்டப்பட்டு போராடி எம்பாப்பேவின் முயற்சிகளைத் தடுத்துக்கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவ்வப்போது மட்டுமே ரியல் மாட்ரிட் அணி பி.எஸ்.ஜி பாக்ஸை முற்றுகையிட்டது. பென்சிமா மேற்கொண்ட ஒன்றிரண்டு முயற்சிகளையும் சிறப்பாகக் கையாண்டுகொண்டிருந்தார் கியான்லூயி டொன்னரும்மா. 34-வது நிமிடத்தில் அட்டகாசமான கவுன்ட்டர் அட்டாக் மூலம் கோலடித்தார் எம்பாப்பே. ஆனால், அவருக்கு பாஸ் கொடுத்த நூனோ மெண்டஸ் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்ததால், அந்த கோல் மறுக்கப்பட்டது. இருந்தாலும் அடுத்த நான்கே நிமிடங்களில் பி.எஸ்.ஜி-க்கு அந்த கோலை அடித்துக்கொடுத்தார் எம்பாப்பே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில நிமிடங்களாக பந்தை வசப்படுத்தியிருந்த ரியல் மாட்ரிட், 39-வது நிமிடம் பி.எஸ்.ஜி ஏரியாவுக்குள் பந்தை இழந்தது. கர்வகால் பந்தை இழக்க, அதைப் பெற்ற நெய்மர், எம்பாப்பேவுக்கு த்ரூ பால் ஒன்றைப் போட்டார். மிட் லைனுக்கு அந்தப் பக்கம் இருந்த எம்பாப்பே புயல் வேகத்தில் பறந்து பந்தை கன்ட்ரோல் செய்து கோலாக்கினார். போட்டியின் முதல் கோலாக இருந்தாலும், முதல் சுற்றில் அடித்த கோலால், 2 கோல்கள் முன்னிலை பெற்றது பி.எஸ்.ஜி.

Kylian Mbappe
Kylian Mbappe
AP

முதல் பாதியில் ரியல் மாட்ரிட் மேற்கொண்ட முயற்சிகள் பலன் கொடுக்காமல் போக, 1-0 என முடிந்தது. இரண்டாவது பாதியில் அதிகமாக 'பிரஸ்' செய்யத் தொடங்கியது. நம்பிக்கையாக இரண்டாவது பாதியைத் தொடங்கினாலும், ஆட்டத்தின் இரண்டாவது கோலை அடித்தது என்னவோ பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிதான். ஆனால், 54-வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த கோல் மீண்டும் 'ஆஃப் சைட்' என்று மறுக்கப்பட்டது. ஒருவேளை அந்த கோல் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஆட்டமே வேறு மாதிரி மாறியிருக்கும்.

60 நிமிடம் வரை ஆட்டம் 1-0 என்றுதான் இருந்தது. 2-0 என முன்னிலை பெற்றிருந்தது பி.எஸ்.ஜி. இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், அந்த 30 நிமிடம் ரியல் மாட்ரிட் அணிக்கு போதுமானதாக இருந்தது. ஆட்டத்தை மொத்தமாக மாற்றியது கார்லோ ஆன்சலோடியின் அணி.
Karim Benzema
Karim Benzema
AP

61-வது நிமிடத்தில், தனக்குக் கொடுக்கப்பட்ட பாஸை கிளியர் செய்யாமல் தன்வசமே வைத்திருந்தார். பென்சிமா வேகமாக பிரஸ் செய்ய, அதை மோசமாக பாஸ் செய்தார். பாக்சுக்குள் அதைப் பெற்ற வினிசியஸ் ஜூனியர், பெனால்டி ஏரியாவுக்குப் பந்தை அனுப்ப, அங்கு நின்றிருந்த பென்சிமா எளிதாக அதை கோலாக்கினார். 1-1. இந்த யுத்தம் 2-1 என்றானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த கோல் சான்டியாகோ போர்னபோ மைதானத்திலிருந்த ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்த, அவர்களின் கோஷத்துக்கு நடுவே இன்னும் சிறப்பாக விளையாடத் தொடங்கியது ரியல். 76-வது நிமிடத்தில் தங்கள் ஏரியாவில் பந்தைப் பெற்ற லூகா மோட்ரிச், சிறப்பாக முன்னேறினார். வினிசியஸுக்கு த்ரூ பாஸ் கொடுக்க, வேகமாக பி.எஸ்.ஜி பாக்சுக்குள் நுழைந்தார் வினிசியஸ். ஆனால், டார்கெட் செய்வதற்கான சரியான கோணம் அமையாததால், மீண்டும் பின்வாங்கி பந்தை ரொடேட் செய்தார். மோட்ரிச் வசம் பந்து செல்ல, சூப்பரான பாஸ் மூலம் பாக்சுக்குள் இருந்த பென்சிமாவுக்கு பந்தை அனுப்பினார் மோட்ரிச். அதை கோலாக்கி, போட்டியை சமனாக்கினார் பென்சிமா.

Lionel Messi
Lionel Messi
AP

இரண்டாவது கோல் போன விரக்தியில் அடுத்த நிமிடமே இன்னொரு தவறை செய்தது பி.எஸ்.ஜி. இரண்டாவது கோல் விழுந்ததும், ரீ ஸ்டார்ட் செய்யப்பட்டபோது சிறப்பாக பிரஸ் செய்து மீண்டும் பந்தைக் கைப்பற்றினர் ரியல் மாட்ரிட் வீரர்கள். மீண்டும் வினிசியஸ் பக்கம் பந்து செல்ல, அவரை கவர் செய்த மார்கினோஸ், பந்தை பக்கத்திலிருந்த வீரருக்குத் தள்ள நினைத்தார். ஆனால், பந்து பி.எஸ்.ஜி வீரரை அடையும் முன்பே அந்த இடத்துக்கு வந்து கோல் நோக்கி அதைச் செலுத்தினார் பென்சிமா. மூன்றாவது கோலும் அடிக்கப்பட, அவர் ஹாட்ரிக் நிறைவடைந்தது. ரியல் மாட்ரிட் அணியின் கம்பேக்கும் நிறைவடைந்தது.

அதன்பிறகும் ரியல் மாட்ரிட் அணி பந்தை தங்கள் வசம் வைத்திருந்ததால், பி.எஸ்.ஜி வீரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 90-வது நிமிடத்தில் ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெஸ்ஸி அடித்த ஷாட், போஸ்ட்டுக்கு சற்று மேலே சென்றுவிட அந்த கோல் கிடைக்கவில்லை. டி மரியா, டிராக்ஸ்லர் போன்றவர்களை பொச்சடினோ இறக்கிப் பார்த்தும் அந்த கோல் கிடைக்கவில்லை.

இறுதியில் 3-2 என தோல்வியடைந்தது பி.எஸ்.ஜி. மீண்டும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பை இழந்தது அந்த அணி. பென்சிமா, மோட்ரிச் போன்ற மாட்ரிட் சீனியர்களின் ஆட்டம் பாராட்டப்பட, மெஸ்ஸ், நெய்மர் போன்ற பி.எஸ்.ஜி நட்சத்திரங்கள் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism