Published:Updated:

ஸூம் மூலம் மைதானத்துக்குள் ரசிகர்கள்... ஃபுட்பால்ல என்னலாம் நடக்குது தெரியுமா?

Denmark Football

இங்கிலாந்தின் பழைமையான கால்பந்து தொடரான FA கோப்பை, ஜூன் 27 மீண்டும் தொடங்கயிருக்கிறது. ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நான்கு காலிறுதிப்போட்டிகளும் நடக்கவிருக்கின்றன.

ஸூம் மூலம் மைதானத்துக்குள் ரசிகர்கள்... ஃபுட்பால்ல என்னலாம் நடக்குது தெரியுமா?

இங்கிலாந்தின் பழைமையான கால்பந்து தொடரான FA கோப்பை, ஜூன் 27 மீண்டும் தொடங்கயிருக்கிறது. ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நான்கு காலிறுதிப்போட்டிகளும் நடக்கவிருக்கின்றன.

Published:Updated:
Denmark Football

கொஞ்சம் கொஞ்சமாக லாக் டௌனிலிருந்து கால்பந்து உலகம் மீண்டுகொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக புண்டஸ்லிகா தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், பிரீமியர் லீக், சீரி-ஏ போன்ற தொடர்கள் திரும்பத் தொடங்குவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் முக்கியக் கால்பந்துத் தொடர்கள் தொடர்பான சில அப்டேட்கள் இங்கே…

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியர் லீக், ஜூன் 17 முதல் மீண்டும் தொடரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் வார இறுதிகள் மட்டுமல்லாமல், வாரத்தின் அனைத்து நாள்களிலுமே போட்டி நடக்கும் என்று தெரிகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 4 போட்டிகள் வரை நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் பல புரொமோஷனல் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Premier League
Premier League
AP

இங்கிலாந்தின் பழைமையான கப் தொடரான FA கோப்பை, ஜூன் 27 மீண்டும் தொடரவிருக்கிறது. ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நான்கு காலிறுதிப்போட்டிகளும் நடக்கவிருக்கின்றன. இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாவின் பாதிப்பால் பயிற்சிக்கு வர விரும்பவில்லை என்று சொல்லியிருந்த வாட்ஃபோர்ட் கேப்டன் டிராய் டீனி, மீண்டும் களமிறங்க ஒப்புக்கொண்டிருக்கிறார். “எனக்கு சமீபத்தில்தான் மகன் பிறந்திருக்கிறான். கால்பந்துக்காக, இந்தச் சூழலில் களமிறங்கி என் மகனைச் சிக்கலுக்குள்ளாக்க விரும்பவில்லை” என்று கூறியிருந்தார் டீனி. அதனால், அவரையும் அவர் குடும்பத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பலரும் பேசியிருக்கிறார்கள். ஒருசிலர், “உன் மகனுக்குக் கொரோனா வரட்டும்” என்றெல்லாம்கூட மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். இதைப் பற்றி வருத்தத்துடன் கூறிய டீனி, அடுத்த வாரம் முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்.

Troy Deeney
Troy Deeney

டீனியைப் போல் செல்சீ நடுகள வீரர் என்கோலோ கான்டேவும் அணியினரோடு பயிற்சி செய்யாமல் விலகியிருந்தார். ஆனால், அவர் மீண்டும் விளையாட எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியின்போது களத்தில் மயங்கி விழுந்தார் கான்டே. அதே ஆண்டு அவரது சகோதரர் மாரடைப்பால் மரணமடைந்தார். அதனால், தன் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, வீரர்களோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபடாமல் தனியாக வீட்டிலேயே பயிற்சியெடுக்க விரும்பினார். அதை செல்சீ நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது. இப்போது போட்டி நெருங்கியிருக்கும் நிலையில், கான்டே செல்சீ வீரர்களோடு பயிற்சியில் இணைந்துள்ளார்.

இத்தாலியின் சீரி-ஏ தொடர் ஜூன் 20-ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. இத்தாலியின் விளையாட்டு அமைச்சர், இத்தாலியின் விளையாட்டு மருத்துவத் துறை மற்றும் சீரி-ஏ நிர்வாகிகள் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளனர். ஆனால், எந்த அணியைச் சேர்ந்த ஒரு நபரின் கோவிட் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்தாலும், அந்த மொத்த அணியும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படும் என்ற விதி அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Serie A
Serie A

லா லிகாவைப் பொறுத்தவரை, இன்னும் எந்த அதிகாரபூர்வமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால், ஜூன் 11 முதல் அந்தத் தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வார இறுதிகளில் இல்லாமல், அனைத்து நாள்களும் போட்டியை நடத்தும் முடிவை பிரீமியர் லீகுக்கே முன்பே லா லிகா நிர்வாகம்தான் எடுத்தது. இந்தத் தொடர் தொடங்கி, தொடர்ந்து 32 நாள்களுக்குப் போட்டிகள் நடக்கக்கூடும்.

மைதானங்களுக்கு ரசிகர்கள் வரமுடியாததால், டென்மார்க் கால்பந்து சங்கம் புதிய யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறது. ரசிகர்கள் தொலைக்காட்சியின் வழியாக எப்படியும் வீரர்களைப் பார்த்துவிடலாம். ஆனால், வீரர்கள் ரசிகர்களைப் பார்க்க முடியாதல்லவா. அதனால், கேலரியின் பெரிய ஸ்கிரீன்கள் வைத்து, அதை Zoom மூலம் கனெக்ட் செய்து, வீரர்களைக் களத்துக்குள் அழைத்துவந்துள்ளனர். கால்பந்து அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த முடிவை, மற்ற தொடர்களும் பின்பற்ற முடிவு செய்திருக்கின்றன.