Published:Updated:

`10 வருடங்களில் இது 6 -வது முறை!’- தி பாலோன் டி’ஒர் விருது மன்னன் மெஸ்ஸி

இந்த விருதுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்டதும் மெஸ்ஸிதான். இதுவரை 12 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விருதுகளுடன் மெஸ்ஸி
விருதுகளுடன் மெஸ்ஸி

தி பாலோன் டி’ஒர் (கோல்டன் பால்) ஆண்டுதோறும் பிரான்ஸ் கால்பந்து அமைப்பால் வழங்கப்படும் விருது. இது 1956 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 2010 மற்றும் 2015-க்கு இடையில், ஃபிஃபாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் ஃபிஃபா பாலோன் டி’ஒர் என்று வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் 2016-ல் முடிவடைந்தது. இந்த விருது பழைய நிலையான பாலோன் டி’ஒருக்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் ஃபிஃபா தனது சொந்த வருடாந்திர விருதுக்குத் திரும்பியது.

மெஸ்ஸி
மெஸ்ஸி

இந்த ஆண்டுக்கான பாலோன் டி’ஒர் விருது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மெஸ்ஸி வாங்குவது ஆறாவது முறையாகும். இந்த விருதுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்டது இவர்தான். இதுவரை 12 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெற்ற பின் மெஸ்ஸி, ``10 வருடங்களுக்குமுன் என் சகோதரர்கள் முன்னிலையில் முதல் முறையாக இந்த விருதைப் பெற்றேன். இப்போது என் மனைவி மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் பெறுகிறேன்" என நெகிழ்ந்தார்.

`2009,2010,2011,2012,2015,2019'-      
 6-வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி

இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது இடத்தையும் விர்கில் வான் டிஸ்க் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். விர்கில் வான், ``எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. எனக்குப் போட்டியாக இருக்கும் இந்த இரண்டு வீரர்களும் அசாத்தியமானவர்கள். இவர்கள் இருக்கும்போது இந்த விருதைப் பெறுவது கஷ்டம்தான்" என்றார்.

2018-ம் ஆண்டுக்கு முன்புவரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் மட்டுமே இந்த விருதைப் பெற்று வந்தனர். லிவர்பூல் அணியைச் சேர்ந்த அல்லிசனுக்கு சிறந்த கோல் கீப்பர்க்கான விருது வழங்கப்பட்டது.

குடும்பத்தினருடன்  மெஸ்ஸி
குடும்பத்தினருடன் மெஸ்ஸி

பெண்களுக்கான இந்த விருதை மேகன் ராபினோ தொடர்ந்து நான்காவது முறை வென்றுள்ளார். அமெரிக்காவை முன்னெடுத்துச் சென்ற வீராங்கனை இவர்தான். 34 வயதாகும் இவர் மிட்பீல்டு பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது. விருதைப் பெறுவதற்கு இவர் வரவில்லை.

மேகன் ராபினோ கூறியதாவது, ``இன்று இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது. என்னுடன் சேர்ந்து பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள். இந்த விருதை வெல்வேன் என்று நான் நம்பவே இல்லை. இந்த வருடம் எனக்கு நம்ப முடியாததாக உள்ளது. மேலும், என் சக வீராங்கனைகளுக்கும் அமெரிக்க பெடரேஷனுக்கும் எனது நன்றிகள்” என்றார் நெகிழ்ச்சியான குரலில்.