Published:Updated:

`2009,2010,2011,2012,2015,2019'- 6-வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி

Messi with family in The Best Player Award
Messi with family in The Best Player Award ( AP )

பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி, கடந்த 5 ஆண்டுகளில் பார்சிலோனா அணி 4 முறை கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகச் செயல்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லியோனல் மெஸ்ஸி! விளையாடும் நாடு, க்ளப் முதலியவற்றைக் கடந்து, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட வீரர். கால்பந்து விளையாட்டில் முன்னேற்றம் காண வேண்டிய இந்தியாவிலும் மெஸ்ஸிக்கும் ரெனால்டோவுக்கும் பெரும் ரசிகர் படையே உள்ளது.

Messi
Messi
AP

மெஸ்ஸி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, ஃபிஃபா விருது வழங்கும் விழா நடந்து முடிந்துள்ளது. மிலன் நகரில் நடைபெற்ற விழாவில், லிவர்பூல் அணியின் விர்ஜின் வேன் மற்றும் யுவண்டாஸ் அணியின் கிறிஸ்டியானோ ரெனால்டோ ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, 6-வது முறையாக ஃபிஃபா-வின் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி, கடந்த 5 ஆண்டுகளில் பார்சிலோனா அணி 4 முறை கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகச் செயல்பட்டுள்ளார். 32 வயதான மெஸ்ஸி, 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

`2009,2010,2011,2012,2015,2019'-      
 6-வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி

பெரும்பாலானவர்கள், விர்ஜின் வேன் தான் விருதைப் பெறுவார் என நினைத்திருந்த வேளையில், 46 புள்ளிகளுடன் சிறந்த வீரருக்கான விருதைக் கைப்பற்றினார் மெஸ்ஸி. விர்ஜின் வேன் 38 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், 36 புள்ளிகளுடன் ரெனால்டோ 3-வது இடத்தையும் பிடித்தனர். மெஸ்ஸி, ரெனால்டோ தலா 5 முறை வென்றிருந்த நிலையில், இந்த முறை மெஸ்ஸி விருதை கைப்பற்றி 6-வது முறையாகச் சிறந்த வீரருக்கான விருது என்ற சாதனையைச் செய்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு