Published:Updated:

மாறுமா மான்செஸ்டர் யுனைடட் பாதை?! இடைக்கால பயிற்சியாளராக ராங்னிக் வருகை

Ralf Rangnick ( AP )

தொடர்ந்து மோசமான முடிவுகளைக் கண்டுகொண்டிருந்த மான்செஸ்டர் யுனைடட் அணி சோல்ஷரை நீக்கிவிட்டு, இப்போது ரால்ஃப் ராங்னிக்கை இடைக்கால பயிற்சியாளராக நியமித்திருக்கிறது.

மாறுமா மான்செஸ்டர் யுனைடட் பாதை?! இடைக்கால பயிற்சியாளராக ராங்னிக் வருகை

தொடர்ந்து மோசமான முடிவுகளைக் கண்டுகொண்டிருந்த மான்செஸ்டர் யுனைடட் அணி சோல்ஷரை நீக்கிவிட்டு, இப்போது ரால்ஃப் ராங்னிக்கை இடைக்கால பயிற்சியாளராக நியமித்திருக்கிறது.

Published:Updated:
Ralf Rangnick ( AP )

மான்செஸ்டர் யுனைடட் அணி கடந்த இரண்டு வாரங்களாக அடுத்தடுத்து திருப்பங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த ஓலே குன்னர் சோல்ஷர் கடந்த நவம்பர் 21-ம் தேதி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 2020-21 பிரிமீயர் லீக் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே சோபிக்கத் தவறியபோதும், முன்னாள் வீரர் எனும் வகையில் கூடுதலான வாய்ப்புகளை அவருக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் கொடுத்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளத் தவறினார் அவர். வாட்ஃபோர்டு அணிக்கெதிராக 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

சோல்ஷர் நீக்கத்திற்குப் பிறகு தற்காலிக பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் மைக்கேல் கேரிக். அவர் தலைமையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வியரல் அணிக்கு எதிராக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடந்த பிரீமியர் லீக் போட்டியில் பலம் வாய்ந்த செல்சீ அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. செல்சீ அணிக்கு எதிரான போட்டியில் துவக்கத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோவை களமிறக்காமல், மாற்று வீரராக இறக்கி ஆச்சரியப்படுத்தினார் கேரிக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலையான பயிற்சியாளரைத் தேடிக்கொண்டிருந்த மான்செஸ்டர் யுனைடட் நிர்வாகம் ஜெர்மனியைச் சேர்ந்த ரால்ஃப் ராங்னிக்கை இடைக்கால பயிற்சியாளராக நியமனம் செய்து இருக்கிறது. லோகமோடிவ் மாஸ்கோ எனும் ரஷ்ய அணிக்கு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு மேலாளராக செயல்பட்டு கொண்டிருந்தவரை ஒப்பந்தம் செய்து இருக்கிறது மான்செஸ்டர் யுனைடட்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு முன் ராங்னிக் பல்வேறு ஜெர்மன் கிளப்களை வழிநடத்திய அனுபவமிக்கவர். முக்கியமாக ஷால்கே அணியை 2011 ஆண்டு ஜெர்மன் கோப்பை வெற்றியுடன் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி வரை அழைத்து வந்தார். 2019-ம் ஆண்டு ரெட்புல் லீப்ஸிக் அணியை ஜெர்மன் கோப்பை இறுதி வரை கொண்டு வந்தவர்.

Ole Gunnar Solskjær
Ole Gunnar Solskjær
AP

ராங்னிக் பற்றிய மிக முக்கிய விஷயம், இன்று கால்பந்து உலகம் வியந்து பார்க்கும் கெகென்பிரஸ் (gegenpress) எனும் விளையாட்டு உத்திக்கு பிதாமகன் இவர்தான். ஆட்டத்தில் அதிகம் press செய்வது, பந்தைப் பரிகொடுத்தால் இன்னும் உக்கிரமாக press செய்து possession மீட்பது - இதெல்லாம்தான் அதன் சாராம்சம். அந்த உத்தியை வளர்ச்சியடைய செய்தது ராங்னிக்தான். இந்த உத்தியின் அடிப்படையில்தான் லிவர்பூல் அணி ஜூர்கன் கிளாப் தலைமையில் விளையாடி பல்வேறு கோப்பைகளை வென்று வருகிறது. செல்சீ பயிற்சியாளர் தாமஸ் டுசெல் மற்றும் பெயர்ன் மூனிச் பயற்சியாளர் ஜூலியன் நகில்ஸ்மான் ஆகியோர் ராங்னிக் மீது தாக்கம் கொண்ட பல பயிற்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"நான் இந்த அணியில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொடரை வெற்றி நிறைந்ததாக முடிக்க முழு கவனத்தையும் செலுத்துவேன். அணி முழுவதும் திறமை வாய்ந்த இளம் வீரர்களும், அனுபவமிக்க வீரர்களும் இருக்கிறார்கள். வரும் ஆறு மாதங்களில் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர, நோக்கங்களை நிறைவேற்ற முயற்சி செய்வேன்" என்று கூறியிருக்கிறார் ராங்னிக். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அவர்.

ரால்ப் ராங்னிக்(Ralf Rangnick) நியமனம் பற்றி அணியின் இயக்குனர் ஜான் முர்டா கூறும் போது, "ரால்ஃப் உலகின் மரியாதைக்குரிய பயிற்சியாளர்களில் ஒருவர். ஐரோப்பிய கால்பந்து வளர்ச்சியில் முக்கியமானவர். இடைக்கால பயிற்சியாளராக நியமிக்க நிறைய பேர் இருந்தாலும், அனுபவமிக்க இவரே எங்களுடைய முதல் தேர்வாக இருந்தார். இவர் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

முன்னாள் மான்செஸ்டர் யுனைடட் நட்சத்திர வீரர் வெயின் ரூனி, "தடுமாற்றத்தில் உள்ள அணியை நிலைத்தன்மைக்கு திரும்ப செய்து, கோப்பைகளை வெல்லும் சூழலை உருவாக்கி கொடுப்பார்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். லிவர்பூல் அணி பயிற்சியாளர் குளோப், "எதிர்பாராத வகையில் ஒரு சிறந்த பயிற்சியாளர் இங்கிலாந்துக்கு வருகை தருகிறார், அதுவும் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு வருகிறார்" என ரால்ப் குறித்து புகழ்ந்துள்ளார்.

Ralf Rangnick
Ralf Rangnick
AP

இவ்வாறு பல தரப்பிலும் பாராட்ட பெரும் ரால்ஃப், ஆர்சனல் அணியுடன் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பயிற்சியாளராக தலைமை வகிக்க வாய்ப்பு அதிகம்.

போட்டிகளில் நிலைத்தன்மை இல்லாமல் வெற்றி தோல்விகளை சந்தித்து வரும் அணியை வெற்றி நோக்கி அழைத்து செல்வாரா, தடுமாற்றத்தில் உள்ள வீரர்களை ஜொலிக்க செய்வாரா, 3 ஆண்டு காலமாக கோப்பை வெல்லாமல் இருக்கும் அணிக்கு கோப்பைகளை வெல்வாரா என்பதை ஆறு மாதங்களுக்கு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism