Published:Updated:

Manchester City vs Liverpool: ஆட்டம் டிரா; சூடுபிடிக்கும் பிரீமியர் லீக் ரேஸ்!

Manchester City vs Liverpool ( AP )

முதல் பாதியில் சிட்டி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே கோலடித்தது லிவர்பூல். சலா கொடுத்த கிராஸை கோலாக்கி ஆட்டத்தை மீண்டும் சமனாக்கினார் சாடியோ மனே.

Manchester City vs Liverpool: ஆட்டம் டிரா; சூடுபிடிக்கும் பிரீமியர் லீக் ரேஸ்!

முதல் பாதியில் சிட்டி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே கோலடித்தது லிவர்பூல். சலா கொடுத்த கிராஸை கோலாக்கி ஆட்டத்தை மீண்டும் சமனாக்கினார் சாடியோ மனே.

Published:Updated:
Manchester City vs Liverpool ( AP )

2022 பிரீமியர் லீக் சீசனின் மிகவும் முக்கியமான போட்டியாகக் கருதப்பட்ட மான்செஸ்டர் சிட்டி vs லிவர்பூல் ஆட்டம் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசமாக இருந்த நிலையில் இந்தப் போட்டியால் அதை எந்த வகையிலும் மாற்ற முடியவில்லை. கெவின் டி புருய்னா, கேப்ரியல் ஜீசுஸ், டியாகோ ஜோடா, சாடியோ மனே ஆகியோர் கோலடிக்க, இந்தப் போட்டி 2-2 என முடிவுக்கு வந்தது. 2022 பிரீமியர் லீக் சீசன் இறுதி கட்டத்தை எட்டியிருகிறது. ஆரம்பத்தில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி, கடந்த சில மாதங்களில் புள்ளிகளை இழந்ததால், இரண்டாம் இடத்திலிருந்த லிவர்பூல் சிட்டியின் முன்னிலையைக் குறைத்தது. 30 போட்டிகளின் முடிவில், மான்செஸ்டர் சிட்டி 73 புள்ளியுடனும், லிவர்பூல் 72 புள்ளியுடனும் இருந்தன. இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் நேற்றிரவு எடிஹாட் ஸ்டேடியத்தில் மோதின.

வெற்றி பெறும் அணி முதலிடத்துக்கு முன்னேறிவிடும் என்பதால் இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே கோல் விழுந்தது. சிட்டி அணியின் சூப்பர் ஸ்டார் கெவின் டி புருய்னா, பாக்சுக்கு வெளியே இருந்த 'கர்லர்' ஷாட் ஆலிசனை ஏமாற்றி கோலானது. அந்த கோலுக்கு அடுத்த 8 நிமிடங்களில் பதில் கொடுத்தது லிவர்பூல். ஆண்டி ராபர்ட்சன் இடது விங்கில் இருந்து ஃபார் போஸ்ட்டுக்கு போட்ட கிராஸை, தன் அற்புதமான டச்சால் ஜோடாவுக்கு செட் செய்து கொடுக்க, அதை கோலாக்கினார் ஜோடா. ஆட்டம் 1-1 என டிரா ஆனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த 20 நிமிடங்களில் தொடர்ந்து பல அட்டாக்குகளை மேற்கொண்டது மான்செஸ்டர் சிட்டி. 16-வது நிமிடத்தில் ஜீசுஸ், 25-வது நிமிடத்தில் ரோட்ரி, 29-வது நிமிடத்தில் டி புருய்னா, 35-வது நிமிடத்தில் ஜோ கன்சலோ என வரிசையாக லிவர்பூல் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டனர். ஆனால், அந்த அணிக்கு கோல் எதுவும் விழவில்லை. இருந்தாலும், தொடர் முயற்சிகளுக்குப் பலனாக 36-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. ஜோ கன்சலோ கொடுத்த கிராஸைப் பெற்று முன்னேறிய ஜீசுஸ், அதை கோலாக்கி மான்செஸ்டர் சிட்டிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார்.

Gabriel Jesus
Gabriel Jesus
AP

அதன்பிறகும் மான்செஸ்டர் சிட்டி இரண்டு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அவை கோலாகவில்லை. அதனால், முதல் பாதி 2-1 என முடிவுக்கு வந்தது. முதல் பாதியில் சிட்டி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே கோலடித்தது லிவர்பூல். சலா கொடுத்த கிராஸை கோலாக்கி ஆட்டத்தை மீண்டும் சமனாக்கினார் சாடியோ மனே. அதன்பிறகு சலா, ஜீசுஸ் இருவருக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவர்களால் தங்கள் அணிக்கு மூன்றாவது கோலை அடிக்க முடியவில்லை. 63-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி மூன்றாவது கோல் அடித்தது. டி புருய்னா கொடுத்த பாஸை சிறப்பாக கோலாக்கினார் ரஹீம் ஸ்டெர்லிங். ஆனால், VAR சோதனைக்குப் பிறகு அந்த கோல் மறுக்கப்பட்டது. அதன்பிறகு சலா, ஜீசுஸ், மாரஸ் ஆகியோருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவர்கள் எல்லோரும் அந்த வாய்ப்புகளை தவறவிட, இந்த ஆட்டம் 2-2 என முடிவுக்கு வந்தது. இதனால், புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரீமியர் லீகில் நடந்த மற்ற போட்டிகளில் செல்சீ, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், லெஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன. ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் தோல்விக்கு பதில் சொல்லும் விதத்தில் இருந்தது அந்த அணியின் செயல்பாடு. ஆரம்பத்திலிருந்தே கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டுக்கொண்டிருந்த செல்சீ, எட்டாவது நிமிடத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கியது. மேசன் மௌன்ட் அற்புதமாகக் கொடுத்த பாஸை கோலாக்கினார் மார்கோஸ் அலோன்சோ. அடுத்த எட்டு நிமிடங்களில் இரண்டாவது கோலும் விழுந்தது. இம்முறை மவுன்ட் அவராகவே கோலடித்தார்.

Timo Werner
Timo Werner
AP

தொடர்ந்து போஸ்ட்டை, கிராஸ் பாரை அடித்துக்கொண்டிருந்த டிமோ வெர்னர், 21-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் கை ஹாவர்ட்ஸ் 31-வது நிமிடத்தில் கோலடிக்க, ஆட்டம் 4-0 என்றானது. இரண்டாவது பாதியிலும் செல்சீயின் அட்டாக் தொடர்ந்துகொண்டே இருந்தது. 49-வது நிமிடத்தில் வெர்னர் தன் இரண்டாவது கோலை அடிக்க, மேசன் மௌன்ட் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. 6-0 என முன்னிலை பெற்றது செல்சீ. அதன்பிறகு பல முயற்சிகள் மேற்கொண்டும் அடுத்த கோல் விழவில்லை. அதனால், 6 கோல்கல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது செல்சீ.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 4-0 என ஆஸ்டன் விலாவை வீழ்த்தியது. ஹியூங் மின் சன், ஹேரி கேன், டெஜான் குலுசெவ்ஸ்கி அடங்கிய அவர்களின் அட்டாகிங் கூட்டணி தொடர்ந்து பட்டையைக் கிளப்பியது. ஒருவருக்கு ஒருவர் கோலுக்கு அசிஸ்ட் செய்தனர். சன் ஹாட்ரிக் அடித்து அசத்த, குலுசெவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் லீக் பொசிஷனுக்கான இடத்தில் நீடிக்கிறது அந்த அணி. லெஸ்டர் அணி 2-1 என கிறிஸ்டல் பேலஸை வீழ்த்தியது. லீட்ஸ் 3-0 என வாட்ஃபோர்ட் அணியையும், நார்விச் 2-0 என பர்ன்லியையும், நியூகாசில் யுனைடட் 1-0 என வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியையும் வீழ்த்தின. தொடர்ந்து சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்திவரும் பிரென்ட்ஃபோர்ட், வெஸ்ட் ஹாம் அணியை 2-0 என தோற்கடித்தது.

Manchester United
Manchester United
AP

இந்த வாரம் இரண்டு முன்னணி அணிகள் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தன. ரிலகேஷன் பீதியில் இருக்கும் எவர்டன் அணியிடம் 0-1 என தோல்வியடைந்தது மான்செஸ்டர் யுனைடட். அதனால், அந்த அணியின் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அந்த இடத்துக்கு போட்டியிட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு அணியான ஆர்செனல் 1-2 என பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணியிடம் தோற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism