Published:Updated:

இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்று சாதனைப் படைத்த மெஸ்ஸி - எத்தனை கோடி லைக்குகள் தெரியுமா?

மெஸ்ஸி

அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் அதிகமான லைக்குகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

Published:Updated:

இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்று சாதனைப் படைத்த மெஸ்ஸி - எத்தனை கோடி லைக்குகள் தெரியுமா?

அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் அதிகமான லைக்குகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

மெஸ்ஸி

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸை வீழ்த்திய அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக உச்சி முகர்ந்துள்ளது. அர்ஜெண்டினா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை வென்றதை ஒட்டுமொத்த அர்ஜெண்டினா மக்களும், உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மெஸ்ஸி கால்பந்தாட்ட உலகக்கோப்பையைத் தனது கையில் ஏந்தியபடி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படம் அதிக லைக்குகளைக் குவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மெஸ்ஸியின் அந்தப் புகைப்படத்தை இதுவரைக்கும் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் அதிகமானோர் லைக் செய்ததன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் World-record-egg என்ற பக்கத்தில் வெளியிட்ட  முட்டையின் புகைப்படமும், ஒன்றாக செஸ் விளையாடுவது போன்ற மெஸ்ஸி - ரொனால்டோவின் புகைப்படமும் அதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்திலிருந்தன. தற்போது புகைப்படத்துடன் கூடிய மெஸ்ஸியின் உலகக்கோப்பை வெற்றிப் பதிவு இவற்றை முறியடித்ததால், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற விளையாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.