Published:Updated:

LaLiga Madrid Derby: அத்லெடிகோவை வீழ்த்தி அசத்திய ரியல் மாட்ரிட்... தொடர்ந்து பத்தாவது வெற்றி!

Karim Benzema - The man on fire ( AP )

கடைசியாக விளையாடிய 10 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசுர ஃபார்மில் இருக்கிறது ரியல் மாட்ரிட். தொடர்ந்து 13 போட்டிகளாக தோல்வியே சந்திக்காமல் இருக்கிறது.

LaLiga Madrid Derby: அத்லெடிகோவை வீழ்த்தி அசத்திய ரியல் மாட்ரிட்... தொடர்ந்து பத்தாவது வெற்றி!

கடைசியாக விளையாடிய 10 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசுர ஃபார்மில் இருக்கிறது ரியல் மாட்ரிட். தொடர்ந்து 13 போட்டிகளாக தோல்வியே சந்திக்காமல் இருக்கிறது.

Published:Updated:
Karim Benzema - The man on fire ( AP )
லா லிகா ரேஸில் எந்தவித போட்டியுமின்றி முன்னணியில் இருக்கிறது ரியல் மாட்ரிட். மற்ற அணிகள் சொதப்பினாலும், எந்த தடுமாற்றமும் இல்லாமல் விளையாடி வரும் ரியல், 'மாட்ரிட் டெர்பி' போட்டியையும் வென்றுள்ளது. கரிம் பென்சிமா, மார்கோ அசான்சியோ இருவரும் கோலடிக்க, நடப்பு சாம்பியன் அத்லெடிகோ மாட்ரிட்டை 2-0 என வீழ்த்தியுள்ளது ரியல் மாட்ரிட்.

ஸ்பெய்னின் முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட், கடந்த சீசனில் கோப்பைகள் வெல்லத் தவறியது. லா லிகா, சாம்பியன்ஸ் லிக் என எந்தத் தொடரிலும் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. சீசன் முடிந்ததும் பயிற்சியாளர் ஜிடேனும் கிளம்பிவிட்டார். அவர் இடத்தை நிரப்ப, லைம்லைட்டில் இருக்கும் இளம் பயிற்சியாளர்கள் யாரையேனும் வாங்க முயற்சி செய்வார்கள் என்று நினைத்தபோது, முன்னாள் பயிற்சியாளர் கார்லோ ஆன்சலோடியையே மீண்டும் அழைத்தது அந்த அணி. எவர்டன் அணியில் இருந்தவரை மீண்டும் மாட்ரிட்டுக்கு அழைக்க, அணியின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்சிலோனா ஒரு பக்கம் தொடர்ந்து தடுமாற, அத்லெடிகோ மாட்ரிட் நிலையில்லாத பெர்ஃபாமன்ஸைக் கொடுத்துக்கொண்டிருக்க, பெரிய போட்டியே இல்லாமல் லா லிகா புள்ளிப் பட்டியலில் முன்னேறியது ரியல் மாட்ரிட். சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. செப்டம்பர் கடைசியில் ஷெரிஃப் அணியுடனான சாம்பியன்ஸ் லீக் போட்டியையும், அடுத்த நான்கு நாள்களில் எஸ்பானியோல் அணிக்கெதிரான லா லிகா போட்டியிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்தது அந்த அணி. அதைத் தவிர்த்து இந்த சீசனில் வேறு போட்டிகளை அந்த அணி தோற்கவே இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கடைசியாக விளையாடிய 10 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசுர ஃபார்மில் இருக்கிறது ரியல் மாட்ரிட். தொடர்ந்து 13 போட்டிகளாக தோல்வியே சந்திக்காமல் இருக்கிறது.

சமீப காலமாக அந்த அணியின் பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு விளையாட முடியாத நிலை ஏற்படும். ஆனால், இப்போது அந்த சிக்கல்கள் இல்லை. ஈடன் ஹசார்ட் முதல் கரத் பேல் வரை அனைவருமே விளையாடத் தயாரகாவே இருக்கின்றனர். மோட்ரிச், கஸமிரோ, குரூஸ் அடங்கிய நடுகளம் முன்பைப் போல் ஆட்டத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 36 வயது மோட்ரிச்சுக்கு, இன்னொரு சீசன் கூடுதல் ஒப்பந்தம் கொடுக்கலாம் என்று அந்த அணி முடிவு செய்திருக்கிறது.

Karim Benzema
Karim Benzema

அந்த அணியின் இந்த ஃபார்முக்கான மைய காரணம் கரிம் பென்சிமா - வினிசியஸ் ஜூனியர் கூட்டணி. இவர்கள் இருவரின் காம்பினேஷன் எதிரணிகளைத் துளைத்து எடுத்துக்கொண்டிருக்கிறது. இடது விங்கில் வினிசியஸ் காட்டும் வித்தையும், பென்சிமாவின் அனுபவமும் சேர்வதால், கோல்கள் எப்படியும் கிடைத்துவிடுகின்றன. இது கால்பந்து உலகின் டிரெண்டிங் கூட்டணியாக மாறியிருக்கிறது!

கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியிலிருந்து விலகிய பிறகு அவர் இடத்தை அட்டகாசமாக நிரப்பிக்கொண்டிருக்கிறார் பென்சிமா. முந்தைய சீசன்களில் அந்த அணி தடுமாறியபோது தன் கோல்களால் காப்பாற்றினார். இப்போது அந்த ஃபார்மைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் ஓட்டுப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்திருந்தார் பென்சிமா. அவருடைய ஃபார்ம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. வினிசியஸும் தன்னிடம் எதிர்பார்த்தை இந்த சீசனில் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறார்.

Vinicius Jr
Vinicius Jr
AP

அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிரான போட்டியில் பென்சிமா, வினிசியஸ் இருவரும் இணைந்து ரியல் மாட்ரிட் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆட்டத்தின் 16-வது நிமிடம், அத்லெடிகோ மாட்ரிட் டிஃபண்டர் ஹெர்மோசா, பந்தைத் தவறவிட, அது வினிசியஸ் காலுக்கு அனுப்பப்பட்டது. வலது விங்கில் இருந்தவர் கிராஸ் செய்ய, அதை அப்படியே வாலியின் மூலம் கோலாக்கினார் பென்சிமா. 1-0. அதேபோல், 57-வது நிமிடத்தில் வலது பக்கமிருந்து ஒரு பாஸ். இம்முறை அதை கோலாக்கியது மார்கோ அசான்ஸியோ. 2-0.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 17 போட்டிகளில் 42 புள்ளிகள் பெற்றிருக்கிறது ரியல் மாட்ரிட். அத்லெடிகோ மாட்ரிட் 16 போட்டிகளில் 29 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் பின்தங்கியிருக்கிறது. பார்சிலோனாவோ 24 புள்ளிகளுடன் (16 போட்டிகள்) எட்டாவது இடத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ரியல் மாட்ரிட்டை விட ஒரு போட்டி குறைவாக ஆடியிருக்கும் செவியா 8 புள்ளிகள் குறைவாக எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 33 புள்ளிகளுடன் (17 போட்டிகள்) மூன்றாவது இடத்தில் இருக்கிறது ரியல் பெடிஸ் அணி.

Carlo Ancelloti
Carlo Ancelloti
AP

லா லிகாவில் மட்டுமல்லாது, சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ரியல் மாட்ரிட். விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வென்று தங்கள் குரூப்பில் முதலிடம் பிடித்திருக்கிறது. லீக் சுற்றில் மொத்தம் 3 கோல்கள் மட்டுமே விட்டிருக்கும் அந்த அணி, 14 கோல்கள் அடித்திருக்கிறது. ஆன்சலோடியின் தலைமையில் மீண்டும் கோப்பைகள் மாட்ரிட்டுக்குப் படையெடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்!