Published:Updated:

பிரீமியர் லீகை அதிரவைக்கும் லிவர்பூல்! எப்படி சாத்தியப்படுத்துகிறது கிளாப் அண்ட் கோ? #PremierLeague

Jurgen Klopp ( AP )

லிவர்பூல் கிளப், இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. 8 முறை வென்ற லீக் கோப்பைக்காக (அதிக முறை வென்ற அணி) இதுவரை வெல்லாத ஒரு கோப்பையைத் தாரைவார்க்க வேண்டாம் என்பதைத் தீர்க்கமாக முடிவுசெய்தது அந்த அணி.

பிரீமியர் லீகை அதிரவைக்கும் லிவர்பூல்! எப்படி சாத்தியப்படுத்துகிறது கிளாப் அண்ட் கோ? #PremierLeague

லிவர்பூல் கிளப், இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. 8 முறை வென்ற லீக் கோப்பைக்காக (அதிக முறை வென்ற அணி) இதுவரை வெல்லாத ஒரு கோப்பையைத் தாரைவார்க்க வேண்டாம் என்பதைத் தீர்க்கமாக முடிவுசெய்தது அந்த அணி.

Published:Updated:
Jurgen Klopp ( AP )

பிரீமியர் லீக், எப்போதும் கடைசி வரை பரபரப்பாக நடக்கும். 38 போட்டிகள் கொண்ட சீசனில், பெரும்பாலும் 32, 33 போட்டிகள் முடியும்வரைகூட இந்த அணிதான் சாம்பியன் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில சீசன்களில், கடைசி போட்டி வரைகூட பரபரப்பாக நடக்கும். எப்போதாவது ஒருமுறைதான் ஒரு குறிப்பிட்ட அணி அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தும். இந்த சீசன், அப்படிப்பட்டது. டிசம்பரிலேயே சாம்பியன் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லிவர்பூல், கடந்த முறை ஒற்றைப் புள்ளியில் பட்டத்தைத் தவறவிட்டவர்கள், இப்போது யாரும் தொட முடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தங்களின் முதல் பிரீமியர் லீக் கோப்பையில் முத்தமிடக் காத்திருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள லிவர்பூல், 18 வெற்றி, 1 டிரா என 55 புள்ளிகளுடன் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது. ஒரு போட்டி அதிகமாக ஆடி இரண்டாமிடத்திலிருக்கும் லீசெஸ்டரை விட 13 புள்ளிகள் அதிகம். நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியைவிட 14 புள்ளிகள் அதிகம். இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில்கூட தோற்காமல், ‘இன்வின்சிபிள்’ சீசனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது, இந்த ஆன்ஃபீல்ட் கிளப். ஒரு பிரீமியர் லீக் சீசனில் இப்படியான ஆதிக்கம் செலுத்துவது சாதாரண காரியமில்லை. லீக் கப், FA கப், சாம்பியன்ஸ் லீக் போன்ற தொடர்களிலும் தொடர்ந்து பங்கேற்றுக்கொண்டு, கடினமான பிரீமியர் லீக் அணிகளைச் சமாளிப்பது எளிதல்ல.

Sadio Mane
Sadio Mane
AP

இந்தக் கடினமான காரியத்தை சிறப்பாகக் கையாண்டுகொண்டிருக்கிறது லிவர்பூல். சிறப்பாகக் கையாண்டுகொண்டிருக்கிறார் ஜார்ஜன் கிளாப்! இந்த சீசனில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். உதாரணமாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு மிகவும் கடினமான சூழ்நிலை எழுந்தது. டிசம்பர் 18… லீக் கப்பில் ஆஸ்டன் விலா அணியை இங்கிலாந்தில் எதிர்கொள்ள வேண்டும். அடுத்த 19 மணி நேரத்தில், கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பையில், கிளாப் பங்கேற்க வேண்டும். இரண்டு போட்டிகளிலும் ஒரே அணி பங்கேற்பது சாத்தியமில்லை. கிளாப், தன் முடிவில் தெளிவாக இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை லிவர்பூல் கிளாப் உலகக் கோப்பையை வென்றதில்லை. 8 முறை வென்ற லீக் கோப்பைக்காக (அதிக முறை வென்ற அணி) இதுவரை வெல்லாத ஒரு கோப்பையைத் தாரைவார்க்க வேண்டாம் என்பதைத் தீர்க்கமாக முடிவுசெய்தது அந்த அணி. லீக் கோப்பையை அகாடெமி இளைஞர்களைக் களமிறக்கிவிட்டு, முழு பலம் கொண்ட அணியுடன் கத்தார் கிளம்பினார், கிளாப். 5-0 என லீக் கோப்பையில் தோற்றது அந்த அணி. ஆனால், உலகத்தின் சாம்பியனாக இங்கிலாந்து திரும்பியது.

Liverpool FC
Liverpool FC
AP

அதேபோல், அக்டோபர் 31 அர்செனலுடன் லீக் கோப்பைப் போட்டி. நவம்பர் 2, ஆஸ்டன் விலாவுடன் பிரீமியர் லீக் ஆட்டம். லீக் கோப்பையின்போது, சில முன்னணி வீரர்களுக்கு அனைத்து அணிகளுமே ஓய்வளிக்கும். அர்செனல்கூட ஒரு சில வீரர்களுக்கு ஓய்வளித்திருந்தது. ஆனால், கிளாப் அனைத்து முன்னணி வீரர்களுக்கும் ஓய்வளித்தார். ஒரு பெரிய அணிக்கெதிராக அவர் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. 3 நாள்களுக்கு முன் ஸ்பர்ஸை எதிரான போட்டியின் ஸ்டார்டிங் லெவனில் இருந்த 11 பேருக்குமே ஓய்வளித்தார். ஏனெனில், அதுவரை வெல்லாத பிரீமியர் லீக் என்ற மிகப்பெரிய தொடரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

குறுகிய இடைவெளியில் போட்டிகள் நடக்கும்போது, பிரீமியர் லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நவம்பர் 28… நெபோலியுடனான சாம்பியன்ஸ் லீக் போட்டி. மிகவும் முக்கியமான, கடினமான போட்டியென்றாலும், டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட், விய்னால்டம் ஆகியோருக்கு ஓய்வளித்தார், கிளாப். காரணம், அடுத்த இரண்டே நாள்களில் பிரிட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியானுடன் பிரீமியர் லீகில் மோத வேண்டும். முக்கியமான வீரர்களை அந்தப் போட்டியில் களமிறக்க வேண்டுமென்பதற்காக அவர்களைக் கடினமான நெபோலி போட்டியில்கூட பெஞ்சில் அமர்த்தினார்.

Jordan henderson
Jordan henderson
AP

இவ்வளவு ஏன், இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, லிவர்பூல் ரசிகர்கள் மிகமுக்கியமாகக் கருதும் எவர்டன் அணியுடனான டெர்பி போட்டியில் சலா, ஃபிர்மினியோ போன்ற மிகமுக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து, தன் ரொடேஷனைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். எந்த இடத்திலும் பிரீமியர் லீகில் ரிஸ்க் எடுக்க கிளாப் தயாராக இல்லை. இந்த சீசனில் அதை வென்றாக வேண்டும் என்பதில் அவ்வளவு தீர்க்கமாக இருக்கிறார். தங்கள் அணியின் அந்த தீரா தாகத்தைத் தனிக்க, மற்ற கோப்பைகளைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார். அந்த மனநிலைதான், அவர்களுக்கு இந்த அசைக்க முடியாத முன்னிலையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

கிளாப்பின் இந்த அட்டகாச நிர்வாகத்தோடு, வீரர்களும் அதற்கு ஏற்றார்ப்போல் அணியின் தேவைகளை சரியாகப் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த சீசனின் முதல் பிரீமியர் லீக் போட்டியிலேயே அடிபட்டு வெளியேறினார், அணியின் தூணான கோல்கீப்பர் ஆலிசன். அவருக்கு மாற்றாக இருந்தது, 32 வயது ஆட்ரியன். ஆலிசனின் இடத்தை நிரப்ப முடியாவிட்டாலும், தன்னால் முடிந்த அளவுக்கு உழைத்தார். ஆலிசனுக்கும் சேர்ந்து உழைத்தது அந்த அணியின் டிஃபன்ஸ். அந்த அரணைப் பலப்படுத்த, பெரும்பாலான நேரங்களில் டிஃபன்ஸுடன் இணைந்தார் ஃபெபினியோ.

Jurgen Klopp
Jurgen Klopp
AP

அதிக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், களமிறக்கப்பட்டபோதெல்லாம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தினார், டிவாக் ஆரிஜி. ஹெண்டர்சன், விய்னால்டம், நெபி கீடா, மில்னர் போன்ற நடுகள வீரர்கள் தொடர்ந்து ரொடேட் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் தங்களின் 100 சதவிகிதத்தைக் கொடுத்தனர். இதற்கெல்லாம் மேல், அணியின் மிக முக்கியமான முன்கள வீரர்கள் சலா, மனே, ஃபிர்மினியோ, தொடர்ந்து டாப் ஃபார்மில் செயல்படுவதும், அவர்கள் காயமடையாமல் தொடர்ந்து விளையாடுமளவுக்கு அவர்களின் ஃபிட்னஸைத் தொடர்வதற்கும், லிவர்பூலின் கோச்சிங் டீமை கட்டாயம் பாராட்டியாக வேண்டும். அவர்களின் உழைப்பும் அசாத்தியமானது.

5 ஆண்டுகளுக்கு முன், ஜாம்பவான் ஜெரார்டின் ஒரு ஸ்லிப், அவர்களின் பிரீமியர் லீக் கோப்பை கனவைத் தகர்த்தது. கடந்த ஆண்டு, ஒற்றைப்புள்ளி அவர்களின் எதிர்பார்ப்புகளை நொறுக்கியது. ஆனால், இந்த முறை அப்படியான எந்தத் தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறது அந்த அணி. அதை சிறப்பாகச் செயல்படுத்தி, மிகச் சிறந்த சீசனை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மான்செஸ்டர் சிட்டி செய்த சாதனையை உடைத்து, 100 புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு மகத்தான சாதனையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது லிவர்பூல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism