Published:Updated:

ஒரேயொரு மேஜிக் மொமன்ட்... 3 புள்ளிகளையும் சாம்பியன் வாய்ப்பையும் இழக்கிறது டார்ட்மண்ட்! #Bundesliga

Bayern Munich ( AP )

இரண்டாம் பாதியில் எம்ரே சேன், ஜேடன் சான்சோ, கோட்சே என அனைவரையும் முயற்சி செய்து பார்த்தார் டார்ட்மண்ட் பயிற்சியாளர் லூசியான் ஃபாவ்ரே. ஆனால், அவர்களால் நூயரை ஏமாற்ற முடியவில்லை.

ஒரேயொரு மேஜிக் மொமன்ட்... 3 புள்ளிகளையும் சாம்பியன் வாய்ப்பையும் இழக்கிறது டார்ட்மண்ட்! #Bundesliga

இரண்டாம் பாதியில் எம்ரே சேன், ஜேடன் சான்சோ, கோட்சே என அனைவரையும் முயற்சி செய்து பார்த்தார் டார்ட்மண்ட் பயிற்சியாளர் லூசியான் ஃபாவ்ரே. ஆனால், அவர்களால் நூயரை ஏமாற்ற முடியவில்லை.

Published:Updated:
Bayern Munich ( AP )

2019-20 புண்டஸ்லிகா சீசனின் சாம்பியன் பட்டத்தை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்துவைத்திருக்கிறது பேயர்ன் மூனிச். நேற்றிரவு பொருஷியா டார்ட்மண்ட் அணியுடன் நடந்த போட்டியில் 1-0 என வென்று, அந்த அணியைவிட 7 புள்ளிகள் முன்னிலை பெற்றிருக்கிறது. இன்னும் 6 சுற்றுகளே மீதமிருக்கும் நிலையில், தொடர்ந்து எட்டாவது சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது பேயர்ன்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிக்னல் இடுனா பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டி, கடைசி நிமிடம் வரை பரபரப்பாகவே இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும் மாறி மாறி பொசஷன் வைத்திருந்தன. பேயர்ன் ஒரு அட்டாக்கை முன்னெடுத்தால், அடுத்த சில நிமிடங்களில் நூயருக்கு சவால் விடுத்தது டார்ட்மண்ட். ஆனால், இந்த 50-50 கேம் முதல் அரை மணி நேரம் மட்டும்தான் நீடித்தது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஜெர்மனியின் நடப்பு சாம்பியன்.

Mo Dahoud
Mo Dahoud
AP

பேயர்னின் பல அட்டகாசமான மூவ்களை அரணாக நின்று தடுத்தது டார்ட்மண்ட். ஹம்மல்ஸ், அகஞ்சி, பிஸ்சக் அடங்கிய சென்டர்பேக் கூட்டணி, மிகவும் திடமாக நின்றது. குறிப்பாக, கேப்டன் பிஸ்செக் மிகச் சிறப்பாக ஆட பேயர்ன் வீரர்களின் பல முயற்சிகளைத் தடுத்தார். அதிலும், நேப்ரியின் ஷாட்டை கோல் லைனில் கிளியர் செய்து மிரட்டினார். ஆனால், எதிர்பாராத ஒரு ஷாட்… டார்ட்மண்டின் அரணை உடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டார்ட்மண்ட் பாக்ஸுக்கு வெளியே, அவர்களின் டிஃபன்ஸை உடைக்க முயற்சி செய்துகொண்டிருந்தது பேயர்ன். அல்ஃபோன்ஸா டேவிஸ், லெவண்டோஸ்கி, முல்லர், கோமன், கொரேட்ஸ்கா, கிம்மிச் என அனைவரும் பாக்ஸுக்கு அருகிலேயே ஆடிக்கொண்டிருந்தனர். பந்தை கிளியர் செய்யத் தவறிய டார்ட்மண்ட் வீரர்கள், எதிரணி வீரர்களை மார்க் செய்யவும் தவறினார்கள். விளைவு, ரீபௌண்ட்கள் ஒவ்வொன்றும் பேயர்ன் வீரர்களின் கால்களுக்கே சென்றுகொண்டிருந்தன. கடைசியாக கிம்மிச்சிடம் சிக்கியது. ஃபர்ஸ்ட் போஸ்ட்டை டார்கெட் செய்வாரோ என கோல்கீப்பர் புர்கி, அதை எதிர்பார்த்து முன்னாலேயே நிற்க, எதிர்பாராத வகையில் ஃபார் போஸ்ட்டுக்குப் பந்தை ‘சிப்’ செய்தார் கிம்மிச். பபின்னால் டைவ் அடித்து, பந்தை போஸ்ட்டுக்கு வெளியே தள்ள நினைத்தார் புர்கி. ஆனால், அவர் கைகளில் பட்டு கோலுக்குள் விழுந்தது கிம்மிச்சின் சிப். அந்த ஒரு மேஜிக் மொமன்ட், ஆட்டத்தை நிர்ணயித்தது. சொல்லப்போனால், அதுதான் இப்போது இந்த சீசனை நிர்ணயிக்கப்போகிறது!

Hakimi and Muller
Hakimi and Muller
AP

இரண்டாம் பாதியில் எம்ரே சேன், ஜேடன் சான்சோ, கோட்சே என அனைவரையும் முயற்சி செய்து பார்த்தார் டார்ட்மண்ட் பயிற்சியாளர் லூசியான் ஃபாவ்ரே. ஆனால், அவர்களால் நூயரை ஏமாற்ற முடியவில்லை. அது போதாதென்று ஹாலண்ட் காயத்தால் வெளியேறினார். குரேரோ, தஹூத் போன்றவர்களின் ஷாட்கள் தடுக்கப்பட்டன. அவ்வப்போது சில தவறுகள் செய்யும் பேயர்னின் பின்களத்தை அந்த அணி சோதிக்கத் தவறிவிட்டது. ஆரம்பத்திலிருந்து ஓரளவு நெருக்கடி கொடுத்திருந்தால், ஒரு இடத்திலாவது பேயர்ன் டிஃபண்டர்கள் தவறிழைத்திருப்பார்கள். ஆனால், அப்படி ஒரு சூழலை ஏற்படுத்தத் தவறியது பி.வி.பி.

வழக்கமாக முழு அட்டாக்கில் ஈடுபடும் டார்ட்மண்ட், நேற்று கொஞ்சம் டிஃபன்ஸிவ் மனநிலையில் ஆடியது. 3-4-3 என்ற ஃபார்மேஷனில் ஆடிக்கொண்டிருந்த அந்த அணி, நேற்று பொசஷன் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி 5-4-1 என்ற செட் அப்பில்தான் ஆடினார்கள். அட்டாக்கில் அதகளம் செய்து கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் 3 கோல்கள் அடித்த ரஃபேல் குரேரோ, இந்த முறை தடுப்பாட்டத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தினார். எதிர்ப்பக்கம் ஆடிய ஹகிமியும் அப்படியே! தோர்கன் ஹசார்ட், ஜூலியன் பிராண்ட் இருவரும்கூட அட்டாக்கிங் தேர்டில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஹாலண்ட் பெரும்பாலான நேரங்களில் தனித்தே விடப்பட்டார். பொசஷன் இல்லாத நேரங்களில், அவரும் நடுகளத்துக்கு இறங்கி வந்து டிஃபண்ட் செய்யவேண்டியிருந்தது. மூனிச்சின் அட்டாக்கிங் ஆட்டத்துக்கு ஏற்ப டார்ட்மண்ட் திட்டம் வகுத்திருந்தது. ஆனால், அதுவே எதிரணிக்கு அதீத இடம் கொடுத்துவிட்டது.

Kimmich goal
Kimmich goal
AP

தங்களின் வழக்கமான பாணியில் ஆடாமல், மிகவும் டிஃபன்ஸிவாக ஆடியது ஒட்டுமொத்தமாக அவர்களைப் பாதித்தது. கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. மிகச் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜூலியன் பிராண்ட், கிராஸ், பாஸ் என அனைத்திலும் சொதப்பினார். ஹசார்டின் முடிவுகள் மோசமாக இருந்தன. தனியாகப் போராடிய ஹாலண்டால் கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

இப்போது இரண்டு அணிகளுக்குமான இடைவெளி 7 புள்ளிகளாக அதிகரித்துவிட்டது. பேயர்னுக்குச் சில கடினமான போட்டிகள் இருந்தாலும், மீதமிருக்கும் 6 போட்டிகளில் 11 புள்ளிகள் எடுத்தாலே அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுவிடும். டார்ட்மண்ட், லெய்ப்சிக் அணிகள் இழக்கும் ஒவ்வொரு புள்ளியும், அவர்களுக்கு இன்னும் சாதகமாக அமைந்துவிடும். பேயர்னை எதிர்த்து ஆடவிருக்கும் லெவர்குசான், வோல்ஸ்பெர்க், மொன்சன்கிளாட்பேச் போன்ற அணிகள் ஏதேனும் மாயாஜாலம் நிகழ்த்தினால் மட்டும்தான் அவர்களைத் தடுக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism