Published:Updated:

சாம்பியன்ஸ் லீக்: 12 நிமிடங்களில் 3 கோல்கள்... வெளியேறியது யுவன்டஸ்!

Juventus vs Villarreal ( AP )

ஆட்டத்தின் 75-வது நேரம் வரை போட்டி 0-0 என்று சமநிலையில் தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு எல்லாமே மாறத் தொடங்கியது.

சாம்பியன்ஸ் லீக்: 12 நிமிடங்களில் 3 கோல்கள்... வெளியேறியது யுவன்டஸ்!

ஆட்டத்தின் 75-வது நேரம் வரை போட்டி 0-0 என்று சமநிலையில் தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு எல்லாமே மாறத் தொடங்கியது.

Published:Updated:
Juventus vs Villarreal ( AP )

சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வியரல் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியிருக்கிறது யுவன்டஸ். கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் சரிவைச் சந்தித்து வரும் யுவன்டஸ் அணிக்கு இது இன்னும் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரம் நடந்த போட்டிகளில் பேயர்ன் மூனிச் அணி சால்ஸ்பெர்க்கையும், ரியல் மாட்ரிட், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியையும் வீழ்த்தி காலிறுதுக்கு முன்னேறின. இன்டர் மிலன் அணிக்கெதிராகத் தோற்றிருந்தாலும் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் காலிறுதிக்கு முன்னேறியது லிவர்பூல். மான்செஸ்டர் சிட்டி, ஸ்போர்ட்டிங்கோடு டிரா செய்திருந்தாலும், 5 கோல் முன்னிலை பெற்றிருந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த வாரத்துக்கான போட்டிகள் நேற்று அதிகாலை தொடங்கின. டார்வின் நுனெஸ் அடித்த கோலால், அயாக்ஸ் அணியை 1-0 என வென்றது பென்ஃபிகா. அந்த அணிகள் விளையாடிய முதல் லெக் போட்டி 2-2 என முடிந்திருந்தது. அதனால் 3-2 என்ற கோல் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பென்ஃபிகா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடட் vs அத்லெடிகோ மாட்ரிட் ஆட்டம் கடைசி நிமிடம் வரை பரபரப்பாகவே சென்றது. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரெனான் லோடி அடித்த கோல் அத்லெடிகோ மாட்ரிட்டுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தது. முதல் லெக் போட்டி 1-1 என முடிந்திருந்ததால், இந்த கோல் யுனைடடுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. அதனால், தொடர்ந்து அட்டாக் செய்துகொண்டிருந்தது அந்த அணி. ஆனால், வழக்கமாகவே தடுப்பாட்டத்தில் பட்டையைக் கிளப்பும் அத்லெடிகோ மாட்ரிட், இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்படும்! ஒரு அரணை உருவாக்கி தடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

மான்செஸ்டர் யுனைடட் மேனேஜர் ரால்ஃப் ராக்னிக் பல வீரர்களை மாற்றிப் பார்த்தும் அத்லெடிகோவின் அரணை உடைக்க முடியவில்லை. கேப்டன் ஹாரி மகுயரை வெளியே எடுத்து மாடாவைக் கூட களமிறக்கிப் பார்த்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை. இதனால் இந்தப் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது அத்லெடிகோ மாட்ரிட்.

Manchester United vs Atletico Madrid
Manchester United vs Atletico Madrid
AP

கடந்த வாரம் லயோனல் மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெளியேறிய நிலையில், இப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மான்செஸ்ட யுனைடட் அணியும் வெளியேறியிருக்கிறது. கால்பந்து உலகின் இந்த இரண்டு ஜாம்பவான்களும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றோடு வெளியேறியிருப்பது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று அதிகாலை லீல் மற்றும் செல்சீ அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், செல்சீ 2-1 என வென்றது. முதல் லெக் போட்டியையும் 2-0 என அந்த அணியே வென்றிருந்ததால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் காலிறுதிக்கு முன்னேறியது செல்சீ.

டுரினில் நடந்த போட்டியில் யுவன்டஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் லெக் போட்டி 1-1 என முடிந்திருந்ததால், இந்தப் போட்டியின் வெற்றி இரண்டு அணிகளுக்கும் அவசியமானது. ஆட்டத்தின் தொடக்கத்தில் யுவன்டஸ் ஆதிக்கம் செலுத்தியது. பல ஷாட்கள் எடுத்தனர். ஆனால், அவர்களால் அதை எதையும் கோலாக மாற்ற முடியவில்லை. அடித்த 5 ஷாட்களுமே வியரல் கோல்கீப்பர் ஜெரினிமோ ரூல்லியால் தடுக்கப்பட்டது.

Vilarreal
Vilarreal
AP

ஆட்டத்தின் 75-வது நேரம்வரை போட்டி 0-0 என்று சமநிலையில் தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு எல்லாமே மாறத் தொடங்கியது. 75-வது நிமிடத்தில் வியரல் டிஃபண்டர் ஃபிரான்சிஸ் காக்லினை, டேனியல் ருகானி பாக்ஸுக்குள் தள்ளிவிட, வியரல் அணிக்கு பெனால்டி கிடைத்தது. VAR மூலம் பெனால்டி உறுதி செய்யப்பட, அதை கோலாக்கினார் ஜெரார்ட் மொரேனோ.

போட்டியில் திரும்ப வர 12 நிமிடமே இருந்ததால், அட்டாக்கிங் மாற்றங்களை செய்தது யுவன்டஸ். ஆனால், அது வியரலுக்கு இன்னும் சாதகமானது. 84-வது நிமிடத்தில் கிடைத்த கார்னரை வியரல் டிஃபண்டர் செர்ஜ் ஆரியர் ஹெட்டர் செய்ய, நடுவே வந்த பந்தை மற்றொரு டிஃபண்டர் பௌ டாரஸ் கோலாக மாற்றினார். இரண்டு கோல்கள் போதாது என போட்டி முடியும் தருணத்தில் மூன்றாவது கோலும் கிடைத்தது.

Juventus vs Villarreal
Juventus vs Villarreal
AP

89-வது நிமிடத்தில் மதியஸ் டி லிட் பெனால்டி ஏரியாவில் ஹேண்ட் பால் செய்ய, அதை கோலாக மாற்றினார் ஆர்னார் டஞ்சுமா. அதனால் 3-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது அந்த அணி. சீரி ஆ தொடரில் நான்காவது இடத்தில் இருக்கும் யுவன்டஸ் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறுமா என்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அடலான்டா அல்லது லேசியோ போன்ற அணிகள் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, யுவன்டஸ் புள்ளிகளை இழந்தால், சாம்பியன்ஸ் லீகுக்கு முன்னேறும் வாய்ப்பை அந்த அணி இழக்கக்கூடும். பல முன்னணி வீரர்களின் ஒப்பந்தம் முடியும் நிலையில் வேறு இருப்பதால், யுவன்டஸ் அணி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது கடினம் என்றே கருதப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism