Published:Updated:

EURO 2020: ஸ்ட்ரைக்கர் இல்லாமல் விளையாடிய ஸ்பெயின்… பெனால்ட்டியில் அடித்து நொறுக்கிய இத்தாலி!

இன்று இரவு இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெல்லும் அணியோடு ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது இத்தாலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யூரோ கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது இத்தாலி. ஸ்பெயினை தோற்கடித்து பெற்றிருக்கும் இந்த வெற்றி வரலாற்று வெற்றி எனக் கொண்டாடுகிறார்கள் இத்தாலி ரசிகர்கள்.

நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான அரையிறுதி போட்டியை நம்பிக்கையோடு தொடங்கியது இத்தாலி. ஆரம்பமே அட்டாக்கிங் மோடில் இருந்ததால் ஸ்பெயின் கொஞ்சம் பதுங்கி பாய்ந்துகொண்டிருந்தது.

முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் முடிய, இரண்டாம் பாதியில் இத்தாலிக்கான முதல் கோலை அடித்தார் ஃபெட்ரிகோ சிசா. தனக்கு முன்னால் இருந்த முட்டைக்கட்டைகள் அனைத்தையும் உடைத்து கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறியவரின் அந்த வலது கால் ஷூட் மிகச்சரியாக கோல் போஸ்ட்டுக்குள் போய் விழுந்தது.

இத்தாலி
இத்தாலி
Laurence Griffiths

இத்தாலி 1-0 என முன்னேற உடனடியாக ஈக்குவலைசர் கோலை அடித்துவிட வேண்டும் எனத் துடித்தது ஸ்பெயின். 80-வது நிமிடத்தில் மிக அற்புதமான கோலை அடித்து ஸ்பெயினை 1-1 என கொண்டுபோய் நிறுத்தினார் அல்வாரோ மொராட்டா. ஆட்டம் முடிந்து எக்ஸ்ட்ரா டைமிலும் அதன்பிறகு கோல்கள் விழாமல் இருக்க ஆட்டம் டை பிரேக்கருக்குப் போனது.

பெனால்ட்டி ஷூட்டைத் தொடங்கியது இத்தாலி. முதல் ஷூட்டையே தவறவிட்டார் இத்தாலியின் மேனுவல் லோகடெலி. அடுத்து ஸ்பெயினின் டேனி எல்மோ கோல் போஸ்ட்டுக்கு மேலே அடிக்க முதல் பெனால்ட்டி ஷூட்டே 0-0 என ஆனது. இரண்டாவது வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார் ஆண்ட்ரியா பெலோட்டி. சில நிமிட நேரத்துக்கு முன்பு ஈக்வலைசர் கோல் அடித்து ஸ்பெயினின் ஹீரோவான ஆல்வொரோ மொரட்டோவின் பெனால்ட்டி ஷூட்டை சரியாகத் தடுத்தார் இத்தாலியின் கியான்லூகி டோனாரும்மா.இறுதியில் 4-2 என இத்தாலி வென்றது.

EURO 2020
EURO 2020
Andy Rain

"ஸ்பெயின் எங்களுக்கு ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்தியது. எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது நாங்கள் கோல் அடிக்க முயற்சித்தோம். ஆனால் எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது ஸ்பெயின். போட்டிக்கு முன்னர் பலர் எங்களை நம்பாவிட்டாலும் நாங்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைவோம் என நம்பினோம். நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என நினைத்தோம். ஸ்ட்ரைக்கர் இல்லாமல் விளையாட முடிவு செய்ததன் மூலம் ஸ்பெயின் ஆரம்பத்தில் எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், நாங்கள் எங்கள் திட்டத்தில் தெளிவாக இருந்து ஸ்பெயினை எதிர்கொண்டோம்" என போட்டிக்குப்பின் பேட்டியளித்தார் இத்தாலி பயிற்சியாளர் ராபர்டோ மான்சினி.

இன்று இரவு இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெல்லும் அணியோடு ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது இத்தாலி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு