Published:Updated:

ISL 2021-22: புத்தாண்டை வெற்றியோடு தொடங்கிய சென்னையின் FC... ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது!

Chennaiyin FC vs Jamshedpur FC
News
Chennaiyin FC vs Jamshedpur FC

இரண்டாம் பாதியில் சென்னை அணி அட்டாக் செய்ய வேண்டும் என்பதையே மறந்துவிட்டது. முழுக்க முழுக்க இந்த 1 கோலை வைத்து டிஃபன்ஸ் செய்தாலே போதும் என்ற மனநிலையோடே இருந்தது. ஆனால், அதை சிறப்பாக செய்து வெற்றியை வசப்படுத்தியது.

இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8-ன் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் FC, ஜாம்ஷட்பூர் FC அணிகள் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் சென்னையின் FC அணி 1-0 என வென்று, ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்த்து வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது.

இந்த சீசனை சிறப்பான வெற்றிகளோடு தொடங்கிய சென்னை அணி, போகப்போக தடுமாறியிருந்தது. கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளிலுமே தோற்றிருந்தது. இதனால் புள்ளிப்பட்டியலிலும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை நேற்று சந்தித்தது.

Chennaiyin FC vs Jamshedpur FC
Chennaiyin FC vs Jamshedpur FC
twitter.com/ChennaiyinFC

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை அணியின் வழக்கமான கோல் கீப்பரான விஷால் கெய்த்துக்கு பதில் தேப்ஜித் மஜும்தார் சேர்க்கப்பட்டிருந்தார். சஜித்தும் அறிமுக வீரராக களமிறங்கியிருந்தார். சென்னை அணி 3-5-2 என்ற ஃபார்மேஷனோடும் ஜாம்ஷெட்பூர் 4-2-3-1 என்ற ஃபார்மேஷனோடும் களமிறங்கியிருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜாம்ஷெட்பூர் அணி ஆரம்பத்திலிருந்தே அட்டாக் செய்வதில் குறியாக இருந்தது. முதல் சில நிமிடங்களிலேயே பாக்ஸுக்குள் சில வாய்ப்புகளை உருவாக்கியிருந்தனர். ஆனால், அவற்றை கோலாக மாற்றத் தவறியிருந்தனர். இருந்தாலும், இந்தத் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்து நீடிக்கவில்லை. கொஞ்ச நேரத்திலேயே சென்னை அணியும் தாக்குதலை தொடங்கியது. ஜாம்ஷெட்பூரை விட சென்னை அணிக்கு அதிகமான செட் பீஸ் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், முதல் 30 நிமிடங்களில் கிடைத்த கார்னர் மற்றும் ஃப்ரீ கிக் வாய்ப்புகள் எதையும் சென்னை அணி சரியாக ஃபினிஷ் செய்யவே இல்லை. இரண்டு அணிகளும் மாறி மாறி அட்டாக் செய்துக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் 31-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோலை அடித்திருந்தது. விளாடிமர் கோமன் எடுத்த ஃப்ரீ கிக்கை, லூகாஸ் தலையால் முட்டி கோலாக்கியிருந்தார். சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

Chennaiyin FC vs Jamshedpur FC
Chennaiyin FC vs Jamshedpur FC

முதல் பாதியில் இதன்பிறகும் சென்னை அணிக்கு சில கோல் வாய்ப்புகள் உருவாகியிருந்தன. இடதுப்பக்கம் இருந்து நன்றாக டிரிபிள் செய்து வந்து கேப்டன் அனிருத் தாபா இரண்டு முறை பாக்ஸுக்குள் அட்டாக் செய்ய முயன்றார். ஆனால், அவரிடமிருந்து பாஸ் வாங்கி கோலாக்க அங்கே யாருமே இல்லை. இது சென்னை அணிக்குக் கொஞ்சம் பின்னடைவாக அமைந்தது.

இன்னொரு பக்கம் ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஸ்டூவர்ட், டாங்கிள் போன்றோர் பயங்கரமாக அட்டாக் செய்து வாய்ப்புகளை உருவாக்கியிருந்தனர். ஆனால், அவையும் சரியாக ஃபினிஷ் ஆகவில்லை. சென்னையின் கோல் கீப்பர் தேப்ஜித் மஜும்தார் நன்றாகச் செயல்பட்டிருந்தார். அணியின் டிஃபன்ஸும் வலுவாக இருந்தது. முதல் பாதி முடிகிற சமயத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு சில கார்னர் வாய்ப்புகள் கிடைத்திருந்தன. சென்னையின் டிஃபண்டர்கள் அதை நன்றாக தடுத்திருந்தனர். முதல்பாதி சென்னை அணியின் முன்னிலையோடு 1-0 என முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாம் பாதி தொடங்கியது. இரண்டாம் பாதியில் சென்னை அணி அட்டாக் செய்ய வேண்டும் என்பதையே மறந்துவிட்டது. முழுக்க முழுக்க இந்த 1 கோலை வைத்து டிஃபன்ஸ் செய்தாலே போதும் என்ற மனநிலையோடே இருந்தது. இந்தப் பாதியின் பெரும்பாலான சமயங்களில் ஜாம்ஷெட்பூர் அட்டாக் செய்திருந்தது. ஆனால், அட்டாக் என்பதையே மறந்துவிட்டு டிஃபன்ஸில் மட்டுமே கவனம் செலுத்திய சென்னை அணியின் தடுப்பு அரணை ஜாம்ஷெட்பூர் வீரர்களால் உடைக்கவே முடியவில்லை. 31 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த சென்னை அணி கடைசி வரை அந்த ஒரு கோலை வைத்தே டிஃபண்ட் செய்து போட்டியை 1-0 என வென்றது.

Chennaiyin FC vs Jamshedpur FC
Chennaiyin FC vs Jamshedpur FC
twitter.com/ChennaiyinFC

அட்டாக் செய்வதில் கவனம் செலுத்தாதது குறித்தும் சில கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டது குறித்தும் சென்னையின் பயிற்சியாளர் பேண்டோவிச் எதாவது அதிருப்தி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிஃபன்ஸில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அணியின் ஒற்றை திட்டமாக இருந்ததால், அதை சரியாக செய்ததில் பேண்டோவிச்சும் மகிழ்ச்சியாகவே இருந்தார். ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்த்திருக்கும் சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியிருக்கிறது. புள்ளிப்பட்டியலிலும் நான்காவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.