Published:Updated:

Indian Football: ஜோதிடத்துக்கு லட்சங்கள் செலவழிக்கும் இந்திய கால்பந்து அமைப்பு; கிளம்பும் எதிர்ப்பு

IndianFootball

ஒரு முறை உள்நாட்டு தொடரில் டெல்லி கிளப் கோப்பையை வென்றவுடன், அந்த வெற்றி மீரட்டை சேர்ந்த ஒரு சாமியார் பாபாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Indian Football: ஜோதிடத்துக்கு லட்சங்கள் செலவழிக்கும் இந்திய கால்பந்து அமைப்பு; கிளம்பும் எதிர்ப்பு

ஒரு முறை உள்நாட்டு தொடரில் டெல்லி கிளப் கோப்பையை வென்றவுடன், அந்த வெற்றி மீரட்டை சேர்ந்த ஒரு சாமியார் பாபாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
IndianFootball
ஆசிய கால்பந்துத் தொடருக்கு இந்திய தேசிய அணி தேர்வாகியுள்ள நிலையில், அனைத்து இந்திய காலப்பந்து அமைப்பு ஒரு ஜோதிட நிறுவனத்திற்கு சுமார் 24 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கான பயிற்சியாளர் என்று முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது பயிற்சியாளர் அல்ல ஜோதிட நிறுவனம் என்று தற்போது அம்பலமாகியுள்ளது.

All India Football Federation
All India Football Federation

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கோல்கீப்பர் டனுமாய் போஸ் கூறுகையில் "சரியான நேரத்தில், முறையான பயிற்சி அளிக்காமல் பல போட்டிகளில் தோல்வியைத் தழுவ காரணமே இந்த அமைப்புதான். தற்போது வெற்றி பெறுவதற்காக ஒரு ஜோதிட அமைப்பை இவர்கள் அழைத்து வந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கால்பந்துத் துறை ஒரு அவலமான பாதையை நோக்கிச் சென்றுக்கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது. இந்த பணத்தை வைத்து வீரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஸ்பான்சர் செய்திருக்கலாம். இது குறித்து நிர்வாக அமைப்பு முறையான விசாரனை நடத்தி இன்னும் வெளியில் வராத பல குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனைத்து இந்திய கால்பந்து அமைப்பில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் மூன்று பேர் கொண்ட நிர்வாக அமைப்பினை (Committee on Administrators) நிறுவியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற விஷயங்கள் இந்திய கால்பந்து அணிக்கு புதிதல்ல. ஒரு முறை உள்நாட்டுத் தொடரில் டெல்லி கிளப் கோப்பையை வென்றவுடன், அந்த வெற்றி மீரட்டை சேர்ந்த ஒரு சாமியார் பாபாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.