Published:Updated:

சொதப்பிய ரொனால்டோ & கோ, ஹாட்ரிக் கோல் அடித்த சாலா... மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஏன் இந்த அவமானம்?

ரொனால்டோ - ஓலே குன்னர் ( Martin Rickett )

எப்படி பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தமுடியாமல் இந்தியா தோற்றதோ, அதேப்போன்ற ஒரு தோல்வி. 5-0 என லிவர்பூலிடம் வீழ்ந்தது மான்செஸ்டர் யுனைடெட்.

சொதப்பிய ரொனால்டோ & கோ, ஹாட்ரிக் கோல் அடித்த சாலா... மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஏன் இந்த அவமானம்?

எப்படி பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தமுடியாமல் இந்தியா தோற்றதோ, அதேப்போன்ற ஒரு தோல்வி. 5-0 என லிவர்பூலிடம் வீழ்ந்தது மான்செஸ்டர் யுனைடெட்.

Published:Updated:
ரொனால்டோ - ஓலே குன்னர் ( Martin Rickett )

நேற்று விளையாட்டு உலகில் மிகவும் பரபரப்பான நாள். உலகம் முழுக்க 100 கோடி பேர் காணப்போகும் முதல் கிரிக்கெட் போட்டி என இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதிக்கொண்டிருக்க, நள்ளிரவில் இங்கிலீஷ் பிரிமியர் லீகில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் முகமது சாலாவின் லிவர்பூல் அணியும் மோதின.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி இந்திய ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட அவமானகரமானத் தோல்வியைக் கொடுத்ததோ அதேப்போல, மான்செஸ்டர் ரசிகர்களுக்கும் வாழ்வில் மறக்கமுடியாத தோல்வியைப் பரிசளித்தது லிவர்பூல்.

முகமது சாலா
முகமது சாலா
Rui Vieira

‘’இன்றைய போட்டியில் என்ன நடக்குமோ?" என ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொள்ளும் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு லிவர்பூல் அணிக்கு எதிரானத் தோல்வி உச்சபட்ச கோபத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த கோபம் எந்தளவுக்கு என்றால் போட்டி நடந்து கொண்டிருந்தபோதே "Theatre of Dreams" என்று வர்ணிக்கப்படும் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தங்களுடைய அணியின் ஆட்டத்தை காண சகிக்காமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியின் முதல் பாதியிலே வெளியேறினர்.மான்செஸ்டர் யுனைடெட் அணி தன்னுடைய கால்பந்து வரலாற்றில் படுமோசமான தோல்விகளில் ஒன்றை நேற்று தழுவியது.

2021-2022-க்கான பிரிமீயர் லீக் சீசனின் முதல் சுற்று போட்டியில் நீண்டகால எதிரிகளான மான்செஸ்டர் யுனைடெட் அணியும் லிவர்பூல் அணியும் மான்செஸ்டர் நகரில் நேற்று மோதின. இரு அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுமே மிகுந்த ஆர்வமாக போட்டியை காண காத்திருந்தனர். இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் அதிகம் இடம்பெற்று இருப்பதால்,போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் கிறிஸ்டியனோ ரொனால்டோ, புரூனோ ஃபெர்ணான்டஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் ஒரு கோல் கூட அடிக்காமல் போட்டி ஒருதலைபட்சமாக முடிந்துவிட்டது. எப்படி பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தமுடியாமல் இந்தியா தோற்றதோ, அதேப்போன்ற ஒரு தோல்வி. 5-0 என லிவர்பூலிடம் வீழ்ந்தது மான்செஸ்டர் யுனைடெட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டி தொடங்கியவுடன் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் லிவர்பூல் அணியின் பகுதியில் ஓரிரு பந்துகளை கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்கள்… அவ்வளவுதான். அதன்பிறகு முழுக்க முழுக்க ஆட்டம் லிவர்பூல் பக்கமே சென்றது. போட்டியின் 5-வது நிமிடத்தில் முகமது சாலா கொடுத்த பாஸை நபி கீட்டா கோல் அடித்தார். அடுத்த சில நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஜோட்டா கோல் அடித்தார்.

ரொனால்டோ
ரொனால்டோ
Rui Vieira

லிவர்பூல் அணி அடுத்தடுத்து கோல்கள் அடிக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் என்ன செய்வது எனத்தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். இவ்வளவு மோசமான தடுப்பாட்டத்தை மூன்றாம் தர அணிகள் கூட ஆடுமா என்று தெரியவில்லை. அவ்வளவு மோசம். போட்டியை பார்க்கும் போது லிவர்பூல் அணிக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் கீப்பர் டேவிட் டி கியாவுக்கும் இடையே மட்டுமே போட்டி நடைபெறுவது போல தெரிந்தது. அந்தளவுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களின் ஆட்டம் படுமோசமாக இருந்தது. வரிசையாக லிவர்பூல் அணி வீரர்கள் பந்தை எடுத்து கொண்டு வந்தார்கள், மான்செஸ்டர் யுனைடெட்டின் கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்கள் என இது மட்டும் தான் நடந்தது.

தொடர்ந்து 9 போட்டிகளில் கோல் அடித்து வரும் முகமது சாலா இந்த போட்டியிலும் 38 மற்றும் 45-வது நிமிடங்களில் கோல் அடித்து வேட்டையைத் தொடர்ந்தார். மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் போட்டியில் கொஞ்சம் கூட எதிர் அணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்களின் ஆட்டம் கால்பந்து ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டியின் முதல் பாதியில் கோபம் அடைந்து லிவர்பூல் வீரர் ஒருவரை எட்டி காலால் உதைத்தார். அவருடைய செயல் போட்டியை பார்த்த ஒட்டுமொத்த மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களின் மனநிலையை பிரதிபலித்தது. முதல் பாதியில் 0-4 என்ற கோல் கணக்கில் பின்தங்கி கிட்டத்தட்ட தோல்வி உறுதியானவுடன், ஆயிரக்கணக்கான மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

சொதப்பிய ரொனால்டோ & கோ, ஹாட்ரிக் கோல் அடித்த சாலா... மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஏன் இந்த அவமானம்?
Rui Vieira

இரண்டாவது பாதியில் முகமது சாலா மீண்டும் கோல் அடித்தார். 2003-ம் ஆண்டு ரியல் மேட்ரிட்டின் ரொனால்டோ(பிரேசில் வீரர்)வுக்குப் பிறகு Old Trafford மைதானத்தில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒரு கோல் கூட அடிக்காமல் 0-5 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோல்வியுற்றது.

கடந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-6 என்ற கணக்கில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பார் அணியிடம் தோல்வியடைந்தது. ஆனால் அதைவிட இந்த போட்டி படு மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. போட்டி முடிந்ததும் மான்செஸ்டர் யுனைடெட் கோல்கீப்பர் டேவிட் டி கியா "குழந்தைகள் போல நாங்கள் இந்த ஆட்டத்தில் ஆடினோம்" என்றார். அவ்வளவு மோசமான ஆட்டம். கிறிஸ்டியனோ ரொனால்டோ, ஜேடன் சான்சோ,ரபேல் வரனே வருகைக்கு பிறகு பிரிமீயர் லீலை வெல்லும் அணியாக மான்செஸ்டர் யுனைடெட் வலம் வரும் என கால்பந்து ரசிகர்கள் கணித்தார்கள். ஆனால் இப்போது ஜெயிப்போமா, தோற்போமா என ஒவ்வொரு போட்டியையும் சந்தேகத்துடன் எதிர்கொள்ளும் அவல நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆட்டம் இருக்கிறது.

Ole Gunnar Solskjaer
Ole Gunnar Solskjaer
Rui Vieira

தோல்விக்கான முழு பொறுப்பும் மான்செஸ்டர் யுனைடெட் அணி பயிற்சியாளர் ஓலே குன்னர் சோல்ஜெர் மீது சுமத்தப்படுகிறது. நன்றாக விளையாடும் வீரர்களை தவிர்த்து விடுவது, போட்டி உத்தி ஒன்றும் இல்லாமல் களமிறங்குவது என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்படுகிறது.தோல்வியின் விரக்தியில் #Oleout என மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய ஆத்திரத்தை கொட்டி வருகின்றனர். இந்த தோல்விக்குப்பிறகு ஓலே குன்னர் சோல்ஜெர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அவருக்கு பதிலாக ஜினடேன் ஜிடேன் அல்லது அன்டோனியோ கான்டே புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உடனடியாக சரியான பயிற்சியாளரை நியமிக்கவில்லை என்றால், மான்செஸ்டர் யுனைடெட் அணி பல அவமானகரமான தோல்விகளை சந்திக்கும் என்பது மட்டும் உறுதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism