Published:Updated:

பிரீமியர் லீக் Week 2: பாதாளத்தில் வீழ்ந்த மான்செஸ்டர் யுனைடட்; யுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள்!

பிரீமியர் லீக் - Premier League

யுனைடட் அட்டாக்கர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. கோல்கள் கொடுத்த நம்பிக்கை பிரென்ட்ஃபோர்ட் அணியின் டிஃபன்ஸையும் வலுவாக்கியது. நம்பிக்கையற்ற, உடைந்து போன மான்செஸ்டர் யுனைடட் அணியைச் சமாளிப்பது அந்த அணிக்கு மிகவும் எளிதாக மாறிப்போனது.

பிரீமியர் லீக் Week 2: பாதாளத்தில் வீழ்ந்த மான்செஸ்டர் யுனைடட்; யுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள்!

யுனைடட் அட்டாக்கர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. கோல்கள் கொடுத்த நம்பிக்கை பிரென்ட்ஃபோர்ட் அணியின் டிஃபன்ஸையும் வலுவாக்கியது. நம்பிக்கையற்ற, உடைந்து போன மான்செஸ்டர் யுனைடட் அணியைச் சமாளிப்பது அந்த அணிக்கு மிகவும் எளிதாக மாறிப்போனது.

Published:Updated:
பிரீமியர் லீக் - Premier League

மான்செஸ்டர் யுனைடட் - கொஞ்சமாவது மாறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க, முன்பை விட பெரிய ஏமாற்றத்தைப் பரிசளித்திருக்கிறது அந்த அணி. சீசனின் முதல் போட்டியில் 2-1 என பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணியிடம் தோற்ற அந்த அணி, இந்த வாரம் பிரென்ட்ஃபோர்ட் அணிக்கு எதிராக 4-0 என தோற்றிருக்கிறது. அதுவும் முதல் 35 நிமிடங்களிலேயே 4 கோல்களை வாங்கி இதுவரை கண்டிராத வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது அந்த அணி. மான்செஸ்டர் சிட்டி, ஆர்செனல் போன்ற அணிகள் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர யாரும் எதிர்பாராத வகையில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது யுனைடட்.

எரிக் டென் ஹாக் பயிற்சியாளராக பதவியேற்ற பின் மிகப்பெரிய நம்பிக்கை மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்களிடம் துளிர்விட்டது. ப்ரீ சீசன் முடிவுகள் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்தன. ஆனால், லீக் தொடங்கியதிலிருந்து அந்த நம்பிக்கையை யுனைடட் வீரர்களே உடைத்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரீமியர் லீக் - Premier League
பிரீமியர் லீக் - Premier League

பிரென்ட்ஃபோர்ட் அணிக்கு எதிரான போட்டியின் ஆரம்ப கட்டத்தில் யுனைடட்தான் பந்தை அதிகமாக தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் ஒரு அட்டகாசமான நகர்வாலும், டி.கே-வின் தவறாலும் பிரென்ட்ஃபோர்ட் முன்னிலை பெற்றது. துரோ இன்-ல் இருந்து யுனைடட் வீரர்களிடமிருந்து பந்தைப் பறித்தது பிரென்ட்ஃபோர்ட். ஜென்சன் டா சில்வாவுக்கு பாஸ் செய்ய, பாக்சுக்கு வெளியே இருந்து கோல் நோக்கி அடித்தார் அவர். அதை டி.கே மிகவும் எளிதாகத் தடுத்திருக்கலாம். ஆனால் 2018 உலகக் கோப்பையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஷாட்டை விட்டதுபோல, இந்த ஷாட்டையும் தன் கைகளுக்கு இடையே சென்று கோலாகவிட்டார் யுனைடட் அணியின் கோல்கீப்பர். அந்த ஒரு தவறே அவரை வாட்டிக்கொண்டிருந்த நிலையில், எட்டே நிமிடங்கள் கழித்து இரண்டாவது தவறையும் செய்தார் அவர்.

பிரென்ட்ஃபோர்ட் வீரர் வருவதைச் சரியாக கவனிக்காமல் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு பாஸ் செய்தார் அவர். எரிக்சனால் அதைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அது சாத்தியமும் இல்லை. பந்தை மீட்ட மதியஸ் ஜென்சன் அதை எளிதாக கோலாக்கினார். 2-0. முப்பதாவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி பென் மீ பிரென்ட்ஃபோர்ட் அணியின் மூன்றாவது கோலை அடித்தார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எம்பாயுமோ நான்காவது கோலை அடித்து மான்செஸ்டர் யுனைடட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் இதயங்களையும் நொறுக்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு மத்தியில் யுனைடட் அட்டாக்கர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. கோல்கள் கொடுத்த நம்பிக்கை பிரென்ட்ஃபோர்ட் அணியின் டிஃபன்ஸையும் வலுவாக்கியது. நம்பிக்கையற்ற, உடைந்து போன மான்செஸ்டர் யுனைடட் அணியை சமாளிப்பது அந்த அணிக்கு மிகவும் எளிதாக மாறிப்போனது. இரண்டாவது பாதி தொடங்கும்போது மூன்று மாற்றங்கள் செய்தார் டென் ஹாக். தொடக்கத்தில் அந்த அணி சில வாய்ப்புகளை உருவாக்கியது. சில கிராஸ்கள் போடப்பட்டன. கிடைத்த இரண்டு வாய்ப்புகளை ரொனால்டோவால் டார்கெட் நோக்கி வைக்க முடியவில்லை. கடைசி வரை எவ்வளவோ முயற்சி செய்தும் மான்செஸ்டர் யுனைடடால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 4-0 என வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது பிரென்ட்ஃபோர்ட்.

பிரீமியர் லீக் - Premier League
பிரீமியர் லீக் - Premier League

இந்த வாரம் பிரிமீயர் லீகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய மற்றொரு போட்டி செல்சீ vs டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். களத்தில் சிறப்பான ஆட்டம் நடந்துகொண்டிருந்தாலும், களத்துக்கு வெளியேதான் நெருப்பு அதிகமாக எரிந்தது. செல்சீ 1-0 என முன்னிலையில் இருந்தபோது, ஒரு இடத்தில் ஹாவர்ட்ஸை ஃபவுல் செய்தார் பென்டன்கர். ஆனால் நடுவர் ஆன்டனி டெய்லர் ஃபவுல் கொடுக்கவில்லை. ஆட்டம் தொடரே அதே மூவில் கோலடித்தது ஸ்பர்ஸ். அதனால் செல்சீ வீரர்கள் நடுவர்களை முற்றுகையிட்டனர். பயிற்சியாளர் தாமஸ் டுகெல், ஸ்பர்ஸ் பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்டேவிடம் காரசாரமாக விவாதித்தார். இதனால் பெரும் பிரச்னை கிளம்பியது. இறுதியில் இரண்டு மேனேஜர்களுக்கும் எல்லோ கார்டு கொடுத்தார் நடுவர்.

செல்சீ இரண்டாவது கோல் அடிக்க, களத்தில் ஓடி தன் கோபத்தையும் சந்தோஷத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தினார் டுகெல். ஆனால் கடைசியில் ஒரு நிமிடம் இருக்கும்போது கார்னரில் இருந்து கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார் ஹேரி கேன். அப்போதும் ஒரு பெரும் பிரச்னை எழுந்தது. செல்சீ வீரர் குகுரெயாவை முடியைப் பிடித்து இழுத்து தள்ளினார் கிறிஸ்டியன் ரொமேரோ. இருந்தும் நடுவர், VAR என யாரும் ஃபவுல் கொடுக்கவில்லை. இதுவும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இறுதியில் போட்டி முடிந்து இரண்டு மேனேஜர்களும் கை குலுக்கிய போது அடுத்த போர் மூண்டது. கான்டேவின் கைகளை டுகெல் இறுக்கமாக முறுக்க, அதன்பிறகு வார்த்தை யுத்தமும் தொடங்கியது. அதனால் இருவருக்குமே ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

பிரீமியர் லீக் - Premier League
பிரீமியர் லீக் - Premier League
போர்ன்மௌத் அணியைப் பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி 4-0 என எளிதாக வெற்றி பெற்றது. ஆர்செனல் அணி 4-2 என லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. அந்த அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கேப்ரியல் ஜீசுஸ் 2 கோல்கள், 2 அசிஸ்ட்கள் என 4 கோல்களுக்குமே காரணமாக இருந்தார். இந்த 2 அணிகள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றன.

மற்றொரு போட்டியில் அர்செனல் அணி லெய்செஸ்டர் சிட்டியுடன் மோதியது. ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கேப்ரியல் ஜீசுஸ் ஆர்சனல் அணிக்காக தன் முதல் கோலை அடித்தார். மீண்டும் 35-வது நிமிடத்தில் அவரின் இரண்டாவது கோலை அடித்தார் அவர். சென்ற ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது போல் இந்த ஆட்டத்திலும் அர்செனல் அணி அருமையாக விளையாடியது. அதன் பலனாக 55-வது நிமிடத்தில் கிரானிட் ஷக்காவமும், மார்டினெல்லி 75-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் 4-2 கோல் கணக்கில் அர்செனல் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

பிரீமியர் லீக் - Premier League
பிரீமியர் லீக் - Premier League

லிவர்பூல் எஃப்சி vs கிரிஸ்டல் பேலஸ் அணி மோதிய போட்டி ஆன்ஃபீல்டில் நடைப்பெற்றது. தொடக்கத்தில் இருந்தே லிவர்பூல் அணியே ஆதிக்கம் செலுத்த ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் கவுண்டரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஜஹா கிரிஸ்டல் பேலஸ் முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் லிவர்பூல் அணி கோல் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் நுனிஸ் செய்த பவுல்லால் லிவர்பூல் அணியில் பத்து வீரர்கள் மட்டுமே ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் 61-வது நிமிடத்தில் லூயிஸ் டியாஸ்சின் கோல் ஆட்டத்தை 1-1 என்று சமநிலைக்கு ஆக்கியது.

பிரீமியர் லீக் போட்டி முடிவுகள் - கேம் வீக் 2

ஆஸ்டன் விலா 2 - 1 எவர்டன்

ஆர்செனல் 4 - 2 லெஸ்டர் சிட்டி

பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 0 - 0 நியூகாசிள் யுனைடட்

மான்செஸ்டர் சிட்டி 4 - 0 போர்ன்மௌத்

சௌதாம்ப்டன் 2 - 2 லீட்ஸ் யுனைடட்

வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் 0 - 0 ஃபுல்ஹாம்

பிரென்ட்ஃபோர்ட் 4 - 0 மான்செஸ்டர் யுனைடட்

நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் 1 - 0 வெஸ்ட் ஹாம் யுனைடட்

செல்சீ 2 - 2 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

ஐரோப்பாவின் மற்றொரு பெரிய தொடரான லா லிகா இந்த வாரம் தொடங்கியது. காசே இல்லை என்று சொன்னாலும் எண்ணற்ற வீரர்களை வாங்கிக் குவித்த பார்சிலோனா முதல் போட்டியில் ஒரு கோல் அடிக்கவே தடுமாறியது. ரயோ வலெசானோ அணிக்கு எதிரான பார்சிலோனாவின் ஆட்டம் 0-0 என முடிந்தது. நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் கூட தங்கள் முதல் போட்டியில் தடுமாறியது. செகுண்டா பி தொடரை வென்று புரமொஷன் பெற்ற அல்மேரிய அணிக்கு எதிராக மோதிய அந்த அணி சுமார் 55 நிமிடங்கள் ஒரு கோல் பின்தங்கியிருந்தது. இருந்தாலும் கடைசி அரை மணி நேரத்தில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது மாட்ரிட்.

பிரீமியர் லீக் - Premier League
பிரீமியர் லீக் - Premier League
Serie A திருவிழாவும் இந்த வாரம் தொடங்கியது‌. Serie A-வில் கடந்த முறை சாம்பியனான ஏசி மிலன் மற்றும் யுடினெஸ் அணிகள் மோதின. யுடினெஸ்சை 4-2 பந்தாடியது ஏசி மிலன்‌. ஆட்டம் தெடங்கிய 2 நிமிடத்தில் கோல் அடித்த யுடினெஸ் அதை தக்க வைக்க முடியவில்லை. ஹெர்னாண்டஸ் 11' (penalty) ரெபிக் 15', 68 , தியாஸ் 46 ஆகியோர் ஏசி மிலன்னுக்கு கோல் அடித்தனர்.

- லோகு, உ.கற்பக ஐயப்பன்