Election bannerElection banner
Published:Updated:

பயிற்சி, பென்ச், கோல் செலிபிரேஷனில்கூட ஓகே... ஆனால், களத்துக்குள் சமூக இடைவெளியென்பது? #Bundesliga

Bundesliga
Bundesliga ( AP )

கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் 10 வீரர்களோடு ஆடிய யுனியோன் பெர்லின் அணி, 1-1 என மெய்ன்ஸோடு டிரா செய்தது.

பயிற்சியில், பென்ச்சில் அமர்ந்திருப்பதில், கோல் செலிபிரேஷனில்கூட சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், களத்துக்குள்? கால்பந்துக் களத்தில் அதைப் பற்றியெல்லாம் யோசித்தே பார்க்க முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறது புண்டஸ்லிகாவின் இந்த வாரச் சுற்று. 39 யெல்லோ கார்டுகள், 4 ரெட் கார்டுகள் என இந்தச் சுற்றில் மட்டும், ஒன்பதே போட்டிகளில் 43 கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஹோஃபன்ஹெய்ம், கலோன் அணிகள் மோதிய போட்டியில் மட்டும் 7 கார்டுகள் (5 யெல்லோ + 2 ரெட்) கொடுக்கப்பட்டது. களத்துக்குள் இறங்கிய பிறகு வீரர்களைக் கட்டுப்படுத்திவிடமுடியுமா என்ன?

ஒரேயொரு மேஜிக் மொமன்ட்... 3 புள்ளிகளையும் சாம்பியன் வாய்ப்பையும் இழக்கிறது டார்ட்மண்ட்! #Bundesliga

பேயர்ன் மூனிச் - பொருஷியா டார்ட்மண்ட் அணிகளுக்கிடையிலான போட்டியோடு தொடங்கியது இந்த `மிட்வீக்’ சுற்று. கிம்மிச் அடித்த ஒரு கோல் மூலம், டார்ட்மண்டை வீழ்த்தியது நடப்பு சாம்பியன். 50 - 50 போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட பேய்ர்ன் லெவர்குசன் - வோல்ஸ்பெர்க் ஆட்டம் ஒன்சைட் கேமாக மாறியது. பே அரேனாவில் ஹோம் டீமின் யுக்திகளை அசால்டாக உடைத்து 4 - 1 என்று வெற்றி பெற்றது வோல்ஸ்பெர்க்.

Bayer Leverkusan vs Wolfsburg
Bayer Leverkusan vs Wolfsburg
FotMob

70 சதவிகிதம் பொசஷன் வைத்திருந்தது லெவர்குசான் அணிதான். வோல்ஸ்பெர்க் 188 பாஸ்கள் மட்டுமே செய்ய, அந்த அணி 542 பாஸ்களை கச்சிதமாக முடித்தது. கார்னர்களின் எண்ணிக்கை 12 - 6. ஆனால், அந்த பொசஷனும் பாஸ்களும் எதற்கும் பயனளிக்கவில்லை. 90 நிமிடத்தில் அவர்கள் அடித்தது 9 ஷாட்கள். அதில் டார்கெட்டை நோக்கிச் சென்றது என்னவோ ஒன்றே ஒன்றுதான். அதேசமயம், 30 சதவிகித நேரம் மட்டுமே பந்தை வசப்படுத்தியிருந்த வோல்ஸ்பெர்க், மொத்தம் 14 ஷாட்கள் அடித்தது. அதில் இலக்கை நோக்கி அடிக்கப்பட்டவை 9 ஷாட்கள்! இந்த வித்தியாசம்தான், ஷாட்களில் இருந்த துல்லியம்தான் ஆட்டத்தின் முடிவை மாற்றியது.

ஆட்டத்தை நிர்ணயித்த இன்னொரு முக்கியமான விஷயம் ஃபவுல்கள். லெவர்குசான் 10 ஃபவுல்கள் மட்டுமே செய்ய, 16 ஃபவுல்கள் செய்தது வோல்ஸ்பெர்க். குறைவான பௌல்கள் செய்திருந்தாலும், லெவர்குசான் தவறான இடங்களில் அதைச் செய்தது. ஃபைனல் தேர்டில், பாக்சுக்கு அருகில் செய்யப்பட்ட மூன்று தவறுகள், மூன்று கோல்களுக்கு வழிவகுத்தன. இரண்டு ஃப்ரீ கிக் வாய்ப்புகளை, மேக்ஸிமிலியன் ஃபிளிப்ஸ் பாக்சுக்குள் அனுப்ப, அவற்றை கோலாக்கினார் டிஃபண்டர் மரின் போங்ராசிக். ஃபிளிப்ஸ் அடித்த இன்னொரு டைரக்ட் ஃப்ரீ கிக், லெவர்குசானின் வாலில் பட்டு கோலுக்குள் நுழைந்தது. மூன்று தவறுகள், மூன்று கோல்கள்!

Bayer Leverkusan vs Wolfsburg
Bayer Leverkusan vs Wolfsburg
AP
தாமஸ் முல்லரின் மாஸ்... அல்போன்ஸா டேவிஸின் மிரட்டல்... அலறவிடும் பேயர்ன் மூனிச்! #Bundesliga

ரிலகேஷன் ஜோனில் இருக்கும் வெர்டர் ப்ரெமன் யாரும் எதிர்பாராத வகையில் பொருஷியா மொன்சன்கிளாட்பேச் அணியோடு டிரா செய்தது. அந்த அணியின் டிஃபண்டர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு எதிரணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் தடுத்தனர். மொன்சன்கிளாட்பாச் அணிக்கு ஒரு எளிதான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாகத் தடுப்பாட்டத்தில் செயல்பட்டனர்.

ஹோஃபன்ஹெய்ம், கலோன் அணிகள் மோதிய ஆட்டம் கோல்களும் கார்டுகளும் நிறைந்திருந்தது. முதல் பாதியில் கலோன் வீரர் செபாஸ்டியன் போர்னூ, நேரடியாக ரெட் கார்ட் பெற்று வெளியேறினார். முதல் பாதி முடியும் வரை 10 வீரர்களுடன் சமாளித்த கலோன், இரண்டாம் பாதி தொடங்கியவுடன் நொருங்க ஆரம்பித்தது. முதல் கோலை அடித்த பாம்காட்னர், 46-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். அடுத்த இரண்டாவது நிமிடம், ஸ்டீவன் ஜூபர் ஸ்கோரை 3-0 என்றாக்கினார். ஆனால், அடுத்த இரண்டாவது நிமிடம் அந்த அணியின் பெஞ்ஜமின் ஜுப்னர், இரண்டாவது யெல்லோ கார்ட் பெற்று வெளியேறினார். இரண்டு அணிகளும் 10 வீரர்களோடு கடைசி 40 நிமிடங்களை ஆடின.

Steven Zuber
Steven Zuber
AP

டசில்டார்ஃப் 2-1 என ஷால்கேவை வீழ்த்தி, ரிலகேஷனிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்திக்கொண்டது. மொன்சன்கிளாட்பேச் - வெர்டர் போட்டியோடு சேர்த்து, இந்தச் சுற்றில் மொத்தம் 5 போட்டிகள் டிரா ஆகின. எய்ன்ட்ராக்ட் ஃப்ராங்ஃபர்ட் - ஃப்ரீபெர்க் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. ஆர்.பி.லெய்ப்சிக், ஹெர்தா பெர்லின் அணிகள் 2-2 என டிரா செய்து, தலா 1 புள்ளி பெற்றன. அக்ஸ்பெர்க் - பெடர்பார்ன் ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் 10 வீரர்களோடு ஆடிய யுனியோன் பெர்லின் அணி, 1-1 என மெய்ன்ஸோடு டிரா செய்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு