Published:Updated:

பிரான்ஸ்தான் இனி கால்பந்தின் சூப்பர் ஸ்டார்… ஸ்பெயினை வீழ்த்தி Nations League சாம்பியனானது எப்படி?

கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ்- Nations League
News
கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ்- Nations League ( Miguel Medina )

உலகக் கோப்பை, யூரோ கோப்பை, UEFA Nations League என மூன்று கோப்பைகளையும் வென்ற முதல் அணி பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 உலகக் கோப்பையை வெல்லும் அணியிலும் பிரான்ஸ் தான் முதன்மையாக கணிக்கப்பட்டுள்ளது!

ஐரோப்பிய நாடுகளிடையே 2019-ம் ஆண்டு முதன் முதலாக UEFA Nations League என்ற போட்டி தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிடையே நட்பு ரீதியாக நடைபெறும் போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும். அந்த நான்கு அணிகளுக்கு இடையே போட்டி வைத்து வெற்றியாளரை தேர்வு செய்வார்கள்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற UEFA Nations League தொடரில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி கிறிஸ்டியனோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தொடரான இதன் இரண்டாம் எடிஷன் இந்த ஆண்டு நடந்தது.

Nations League - பிரான்ஸ்
Nations League - பிரான்ஸ்
Miguel Medina

2021 UEFA Nations League தொடருக்கு ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி 2020 யூரோ சாம்பியனான இத்தாலி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 37 போட்டிகள் தொடர் வெற்றி பெற்று வந்த இத்தாலி அணிக்கு முதல் தோல்வி இதுவாகும். இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியை பிரான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது. உலகின் நம்பர் 1 அணியான பெல்ஜியம் 2-0 என்ற கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்த போதும், போட்டியின் முடிவில் 2-3 என்ற கணக்கில் தோல்வியுற்று, தேசிய கால்பந்து போட்டியில் ஒரு கோப்பை கூட வெல்லாமல் தன்னுடைய துரதிஷ்டவசத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Nations League - பிரான்ஸ்
Nations League - பிரான்ஸ்
Luca Bruno

UEFA Nations League 2021 இறுதிப்போட்டியில் இளம் வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை இத்தாலியின் சின்சிரோ மைதானத்தில் எதிர் கொண்டது. பிரான்ஸ் கோல் கீப்பர் யூகோ லோரிஸ், நடுகள வீரர் பால் போக்பா, முன்கள வீரர்கள் கிலியன் எம்பாப்பே, ஆன்டனி கிரீஸ்மென், கரீம் பெஞ்ஜிமா போன்ற பிரான்சின் நட்சத்திர வீரர்களுடன் ஒப்பிடும் போது, ஸ்பெயின் அணி நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமல் இளம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. போட்டி தொடங்கியது முதலே ஸ்பெயின் கால்பந்தாட்ட யுத்திக்கேற்ப பந்தை தன் வசமே அதிகம் வைத்திருந்தது.

பிரான்ஸ் அணி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிர் தாக்குதல் தொடுத்து கொண்டிருந்தது. பிரான்ஸ் நட்சத்திர தடுப்பாட்ட வீரர் ரபேல் வரானே ஆட்டத்தின் முதல் பாதியில் காயம் காரணமாக வெளியேறினார். முதல் பாதியில் பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா மற்றும் ஸ்பெயின் வீரர் எரிக் கார்ஷியாவுக்கு கடினமான கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் பாதியில் கோல் ஏதுமின்றி 0-0 என்ற சமநிலையில் முடிவுற்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போட்டியின் இரண்டாம் பாதியில் கோப்பையை வெல்லும் முனைப்பில் இரண்டு அணிகளுமே தங்களுடைய ஆட்டத்தில் பலத்தை அதிகப்படுத்தி விளையாடியது.பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் அடித்த ஒரு பந்து கோல் கம்பத்தில் பட்டு, கீழே எல்லை கோட்டிற்கு வெளியே விழுந்து சென்றது. போட்டியின் 64வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிக்கேல் ஒயர்ஜாபல் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரரை தட்டு தடுமாறி சென்று கோல் அடித்தார். ஸ்பெயின் அணி 1-0 என்ற முன்னிலை எடுத்த அடுத்த இரண்டு நிமிடங்களிலே பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா அவுட் பாக்ஸ்க்கு வெளியே இருந்து பந்தை அடிக்க,அது சுழன்று கொண்டு கோல் கம்பத்தின் மூலையில் புகுந்து மிக அற்புதமான கோலானது. அடுத்தடுத்த நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க போட்டி சூடுபிடித்தது.

Nations League - பிரான்ஸ்
Nations League - பிரான்ஸ்
Luca Bruno

போட்டியின் 80 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே ஆஃப் சைட் நிலையில் நின்று சர்ச்சைக்குரிய ஒரு கோலை அடித்தார். ஸ்பெயின் தடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று முன்பு நின்று கொண்டிருந்த எம்பாப்பேவுக்கு சக வீரர் தியோ ஹெர்னாண்டஸ் பந்தை பாஸ் செய்தார். அதை ஸ்பெயின் தடுப்பாட்ட வீரர் எரிக் கார்ஸியா தவறுதலாக தொட்டுவிட, அது விதிப்படி ஆஃப் சைடில் நின்று கொண்டிருந்த கிலியன் எம்பாப்பேவுக்கு FIFA விதிப்படி ஆன் சைடாக மாறியது. பந்தை பெற்ற எம்பாப்பே ஸ்பெயின் கோல் கீப்பர் உனை சிமோனை தாண்டி கோல் அடித்தார். இது பிரான்ஸ் அணியின் வெற்றி கோலாக மாறியது. அதன்பிறகு ஸ்பெயின் வீரர்கள் கோல் கம்பத்தை நோக்கி அடித்த இரண்டு பந்துகளை யூகோ லோரிஸ் அருமையாக தடுத்து பிரான்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கிலியன் எம்பாப்பே
கிலியன் எம்பாப்பே
Luca Bruno

சிறந்த வீரர்களை உள்ளடக்கிய 2018 உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணி, 2020 யூரோ தொடரை உறுதியாக வெல்லும் அணி என கூறப்பட்டு வந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக ரவுண்ட் ஆஃப் 16-ல் சுவிட்சர்லாந்து அணியிடம் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் தோல்வியுற்று வெளியேறியது. தற்போது UEFA Nations League 2021யை வென்று தங்களுடைய சாம்பியன் இருப்பை பிரான்ஸ் அணி மீண்டும் உறுதி செய்து இருக்கிறது.

2022 உலகக் கோப்பையை வெல்லும் அணியிலும் பிரான்ஸ் தான் முதன்மையாக கணிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணி ஆடும் உத்தியை பார்க்கும் போது இந்த கணிப்பு நிச்சயம் நடக்கும் என்றே தோன்றுகிறது. கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். உலகக் கோப்பை, யூரோ கோப்பை, UEFA Nations League என மூன்று கோப்பைகளையும் வென்ற முதல் அணி பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.