Published:Updated:

ஹாட்ஸ்பாட்டில் மீண்டும் ஃபுட்பால்... ஜெர்மெனியில் தொடங்குகிறது சீசன்! #Bundesliga #Laliga #SerieA

Bundesliga ( AP )

கால்பந்து இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு உயிரூட்ட வந்துகொண்டிருக்கிறார்கள் ஹாலண்ட், சான்சோ, அல்போன்சா டேவிஸ் என அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார்கள்.

ஹாட்ஸ்பாட்டில் மீண்டும் ஃபுட்பால்... ஜெர்மெனியில் தொடங்குகிறது சீசன்! #Bundesliga #Laliga #SerieA

கால்பந்து இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு உயிரூட்ட வந்துகொண்டிருக்கிறார்கள் ஹாலண்ட், சான்சோ, அல்போன்சா டேவிஸ் என அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார்கள்.

Published:Updated:
Bundesliga ( AP )

கொரோனா பாதிப்பால் மொத்தமாக ஸ்தம்பித்துப் போயிருந்த கால்பந்து உலகம், இப்போது மெதுவாக பழைய நிலைமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. புண்டலஸ்லிகா தொடர் வரும் 16-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், ஜுன் இரண்டாம் வாரத்திலிருந்து மீண்டும் போட்டியைத் தொடங்க பிரீமியர் லீக் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

பெலாரஸ், நிகராகுவா, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் லாக் டௌன் சமயத்திலும் போட்டிகள் நடந்துகொண்டேதான் இருந்தன. ரசிகர்களின் வரவு குறைவாய் இருந்தபோதிலும், காலி மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால், இங்கிலாந்து, ஸ்பெய்ன், இத்தாலி போன்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகம் என்பதால், முன்னணி தொடர்களான பிரீமியர் லீக், லா லிகா, சீர் ஏ போன்றவையனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் வரை எந்த விளையாட்டுப் போட்டிகளும் நாட்டில் நடக்கவேண்டாமென்று பிரான்ஸ் பிரதமர் கூறியதால், லீக் 1 தொடர் முன்பே முடிக்கப்பட்டு, பி.எஸ்.ஜி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இதேதான் நடந்தது. ஆனால், முன்னணி தொடர்கள் எதுவும் அப்படியொரு முடிவை எடுக்கத் தயாராக இருக்கவில்லை.

Bundesliga
Bundesliga
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரீமியர் லீக், லா லிகா போன்ற தொடர்கள் நிறுத்தப்பட்டால், பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால் அந்தந்த நாட்டு கால்பந்து அமைப்புகள் சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தன. பிரீமீயர் லீகின் எஞ்சிய போட்டிகள் நடக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அந்த நிர்வாகத்துக்கு சுமார் 762 மில்லியன் பவுண்ட் வருவாய் இழப்பு ஏற்படும். அப்படியிருக்கையில் தொடரைக் கைவிடும் முயற்சியை எப்படி எடுப்பார்கள்!

அப்படியிருக்கையில் வரும் 16-ம் தேதியிலிருந்து ஜெர்மனியின் புண்டஸ்லிகா தொடர் மீண்டும் தொடங்கப்போகிறது. வழக்கம்போல் பேயர்ன் மூனிச் அணி புண்டஸ்லிகா புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 55 புள்ளிகள் பெற்று, இரண்டாம் இடத்திலிருக்கும் பொருஷியா டார்ட்மண்ட் அணியைவிட 4 புள்ளிகள் முன்னணியில் இருக்கிறது பேயர்ன். கால்பந்து இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு உயிரூட்ட வந்துகொண்டிருக்கிறார்கள் ஹாலண்ட், சான்சோ, அல்போன்சா டேவிஸ் போன்ற அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புண்டஸ்லிகாவைப்போல், சீரி ஏ, லா லிகா, பிரீமியர் லீக் தொடர்களையும் விரைவில் தொடங்க அந்த அமைப்புகள் அதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றன. லா லிகா, சீரி ஏ அணிகள் தனிமைப் பயிற்சியைத் தொடங்கிவிட்டன. சமூக இடைவெளியைப் பின்பற்றி வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். புண்டஸ்லிகா, எப்போதும்போல் வீக் எண்ட்களில் நடப்பதுபோல்தான் அட்டவணை வெளியிட்டுள்ளது. ஆனால், லா லிகா தொடங்க ஜூன் இரண்டாம் வாரம்கூட ஆகிவிடலாம் என்பதால், அந்தப் போட்டிகள் முன்பு ஐ.எஸ்.எல் நடத்தப்பட்டதுபோல் தினமும் நடைபெறும் எனத் தெரிகிறது.

“தினமும் போட்டி நடந்தாலும் அது வீரர்களின் மனநலனை பாதிக்காத வகையில்தான் இருக்கும். ஒரு அணி 3 நாள்களுக்கு ஒருமுறைதான் விளையாடும். இங்கு எதுவுமே திணிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார் லா லிகா அமைப்பின் தலைவர் ஹேவியர் தேபாஸ். இதேபோல், சீரி ஏ தொடர் தொடங்குவதற்கும் ஒரு கண்டிஷன் போடப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்கியபின், அணிகளைச் சார்ந்த யாரேனும் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், தொடர் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணிகள் பயிற்சிக்குத் திரும்பிவிட்டதால் இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கிவிடும். ஆனால், பிரீமியர் லீக் பக்கம் இருந்துதான் எந்த அப்டேட்டும் இதுவரை வரவில்லை. அதேபோல், சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் பற்றியும் UEFA இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism