Published:Updated:

FIFA WorldCup: கிரீடம் சூடுவாரா மெஸ்ஸி? பிரேசிலின் ஏக்கம் தீர்ப்பாரா நெய்மர்? தொடங்கும் உலகக்கோப்பை

FIFA WorldCup

உலகக்கோப்பையை வெல்வதுதான் மெஸ்ஸிக்கு முழுமையான நிம்மதியை கொடுக்கக்கூடும். அதுதான் அவரின் இலக்கும் கூட. அவரின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கப்போவதால் அந்த கிரீடத்தை அணிவித்து கொள்ள மெஸ்ஸிக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பும் இதுவே.

FIFA WorldCup: கிரீடம் சூடுவாரா மெஸ்ஸி? பிரேசிலின் ஏக்கம் தீர்ப்பாரா நெய்மர்? தொடங்கும் உலகக்கோப்பை

உலகக்கோப்பையை வெல்வதுதான் மெஸ்ஸிக்கு முழுமையான நிம்மதியை கொடுக்கக்கூடும். அதுதான் அவரின் இலக்கும் கூட. அவரின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கப்போவதால் அந்த கிரீடத்தை அணிவித்து கொள்ள மெஸ்ஸிக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பும் இதுவே.

Published:Updated:
FIFA WorldCup

கத்தார் கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் பிரமாண்டமாகத் தொடங்கவிருக்கிறது. உலகக்கோப்பை என்பதற்கான முழுமையான பொருளை இந்தத் தொடரின் மூலமே உணர முடியும்.வேறெந்த விளையாட்டிலுமே உலகக்கோப்பை என்பது இத்தனை பரந்துபட்ட தன்மையோடு நடைபெறுவது இல்லை. அங்கும் இங்குமாக சிறு சிறு கூட்டங்களே மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு ஆதாரமாக இருக்கின்றனர். ஆனால் இங்கே,

கால்பந்தில் குறிப்பாக உலகக்கோப்பை நிஜமாகவே உலகம் முழுவதிலுமான ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறது. கத்தாரின் மக்கள் தொகையே 30 லட்சத்தை தாண்டாது. ஆனால், இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு வரைக்குமே போட்டிகளை நேரில் காண 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கிறது. உலகக்கோப்பையின் வியக்க வைக்கும் பிரம்மாண்டத்திற்கு இதுவே ஒரு சான்று. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடக்கப்போகும் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் பற்றிய ஒரு அலசல் இங்கே..
Teams
Teams
FIFA

மொத்தமாக 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பிரிவிற்கு 4 அணிகள். இந்த 4 அணிகளும் தங்களுக்குள்ளாக மோதிக் கொள்ளும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு அணிகளை பிடிக்கும் அணிகள் அடுத்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அதன்பின், எல்லாமே நாக் அவுட்தான். தோல்வியேயின்றி கடைசி வரை எஞ்சியிருக்கும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

குரூப் A - கத்தார், ஈக்குவேடார், செனகல், நெதர்லாந்து.

கத்தார் அணி போட்டியை நடத்துகிற நாடு என்கிற அடிப்படையில் மட்டுமே தகுதி பெற்றிருக்கிறது. ஆக, இந்த குரூப்பில் சவாலளிக்கும் வகையிலான போட்டி என்பது மீதமிருக்கும் மூன்று அணிக்குள்ளாக இருப்பதற்குதான் வாய்ப்பு அதிகம். அதிலும், நெதர்லாந்து அணி பல முறை ரன்னர் அப் ஆகியிருக்கிறது. முந்தைய உலகக்கோப்பைகளில் குரூப் சுற்றுகளிலும் சிறப்பாகவே ஆடியிருக்கிறது. ஆக, நெதர்லாந்து அணி அடுத்தச்சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெறக்கூடும். இரண்டாம் இடத்திற்கு செனகலும் ஈக்குவேடாரும் போட்டி போடக்கூடும்.

குரூப் B - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

சந்தேகமே இல்லாமல் இங்கிலாந்து அணியே இந்தப் பிரிவில் வலுவான அணியாக இருக்கக்கூடும். முதல் அணியாகவும் அவர்களே தகுதிபெறுவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. கோல் மழை பொழியும் இங்கிலாந்து அணி இங்கேயும் அதே அட்டாக்கிங் பாணியிலான ஆட்டத்தை முன்னெடுக்கக்கூடும். இங்கிலாந்து அணியின் ஹேரி கேன்தான் கடந்த முறை 'Golden Boot' விருதை வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு இடத்தை பிடிப்பதற்காக அமெரிக்கா, வேல்ஸ், ஈரான் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.

குரூப் C - அர்ஜென்டினா, சவூதி அரேபியா, போலந்து, மெக்சிகோ

அர்ஜென்டினா உறுதியாக அடுத்தச் சுற்றுக்குத் தகுதிப்பெறும். 1978, 1986 என இதற்கு முன் இரண்டு முறை அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. கடைசியாக 86 இல் வென்ற போது ஜாம்பவான் மரடோனா மாய வித்தைகளை நிகழ்த்தியிருந்தார். அவரின் மேதமைக்கான அங்கீகார கிரீடமாக அந்த உலகக்கோப்பை இருந்தது. மரடோனாவை போன்றே அர்ஜென்டினாவின் ஸ்டாராக உருவெடுத்த போதும் மெஸ்ஸிக்கு இன்னமும் அந்த உலகக்கோப்பை மட்டும் கிடைக்கவேயில்லை. 2014 இல் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஜெர்மனிக்கு எதிராகத் தோற்றிருந்தார்கள். மெஸ்ஸி அப்போது ரொம்பபே உடைந்து போயிருந்தார். தேசிய அணிக்காக ஒன்றுமே சாதிக்கமாட்டார் எனும் விமர்சனமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அதற்கெல்லாம் விடையளிக்கும் ஆண்டாக அமைந்தது.

Argentina's Lionel Messi
Argentina's Lionel Messi
AP
2014 உலகக்கோப்பையை தோற்ற அதே மரக்கானா மைதானத்தில் வைத்தே மெஸ்ஸி கோபா அமெரிக்கா கோப்பையை வென்று கொடுத்தார்.

'இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன்' என மெஸ்ஸி அப்போது பேசியிருந்தார். உலகக்கோப்பையை வெல்வதுதான் மெஸ்ஸிக்கு முழுமையான நிம்மதியை கொடுக்கக்கூடும். அதுதான் அவரின் இலக்கும் கூட. அவரின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கப்போவதால் அந்த கிரீடத்தை அணிவித்து கொள்ள மெஸ்ஸிக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பும் இதுவே.

குரூப் D - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, துனிஷியா, டென்மார்க்
Benzema
Benzema
FIFA

நடப்பு சாம்பியனான ஃபிரான்ஸ் இந்த குரூப்பிலிருந்து முதல் அணியாக அடுத்தச்சுற்றுக்கு செல்லக்கூடும். சிறந்த கால்பந்து வீரருக்கான பாலோன் டியார் விருதை வென்றிருக்கும் பென்சமா மற்றும் PSG அணிக்காக கலக்கி வரும் எம்பாப்பே ஆகியோர் அந்த அணிக்கு பெரும்பலமாக இருக்கக்கூடும். கடைசியாக 1962 இல் பிரேசில் மட்டுமே தொடர்ந்து இரு முறை உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. அதன்பிறகு, இத்தனை ஆண்டுகளில் சாம்பியனாகும் எந்த அணியும் அடுத்த முறையும் கோப்பையை தக்க வைத்ததே இல்லை. அந்த சாதனையை இந்த முறை ஃபிரான்ஸ் செய்யுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

குரூப் E - ஸ்பெயின், ஜெர்மனி, கோஸ்டாரிகா, ஜப்பான்
Germany
Germany
Germany

ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகள் முன்னாள் சாம்பியன்கள். ஆக, அவர்களே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்கிறது. ஜெர்மனி நான்கு முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. கடைசியாக 2014 இல் சாம்பியனாகியிருந்தது. கடந்த முறை குரூப் சுற்றுடனே வெளியேறியிருந்தது. 'எங்களின் மீதான அதிக எதிர்பார்ப்புகளை அறிகிறேன். வெற்றிக்கான எந்த உத்தரவாதத்தையும் எங்களால் கொடுக்க முடியாது. ஆனால், எங்களின் எதிரிகளை வெல்வதற்கான முழுபலத்துடன் களமிறங்குவோம். கடந்த முறையைவிட ஜெர்மனியின் முடிவுகள் வித்தியாசமானதாகத்தான் இருக்கும்.' என அணியின் மேனேஜர் ஹான்சி ஃபிளிக் யதார்த்தமும் நம்பிக்கையும் கலந்து பேசியிருக்கிறார்.

குரூப் F - பெல்ஜியம், கனடா, குரோஷியா, மொராக்கோ
Luca
Luca
FIFA

பெல்ஜியம் கடந்த முறை மூன்றாவது இடம் பிடித்திருந்தது. குரோயேஷியா ரன்னர் அப் ஆகியிருந்தது. இந்த இரண்டு அணிகளுக்குதான் அடுத்தச்சுற்று வாய்ப்பும் அதிகமிருக்கிறது. டீ ப்ரூனே, லூகாகூ போன்ற வீரர்கள் பெல்ஜியத்திற்கு பலமாக இருக்கக்கூடும். கடந்த முறை 'Golden Ball' விருதை வென்ற லூகா மாட்ரிக் இந்த முறையும் முக்கிய வீரராக குரோயேஷியாவிற்கு இருக்கக்கூடும். இரு அணிகளும் அடுத்தச் சுற்றுக்கு வந்து சில சர்ப்ரைஸ்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.

குரூப் G - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
குரூப் H - கானா, உருகுவோ, தென் கொரியா, போர்ச்சுக்கல்
Cristiano Ronaldo
Cristiano Ronaldo

2002 லிருந்து போர்ச்சுக்கல் அணி தொடர்ந்து உலகக்கோப்பைக்கு தகுதிப்பெற்று வருகிறது. ஆயினும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிட்டவே இல்லை. ரொனால்டோவுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. இதுவே அவரின் கடைசி உலகக்கோப்பையாகக் கூட இருக்கலாம். மான்செஸ்டர் யூனைட்டெடுடான சச்சரவுகளுக்கு பிறகு ரொனால்டோ இங்கே களமிறங்கவிருக்கிறார். ரொனால்டோவின் அதி சிறப்பான ஆட்டத்தை இந்த முறை காண வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் இந்த உலகக்கோப்பை தொடங்கவிருக்கிறது. களத்தில் அணிகள் சுவாரஸ்யத்தை கூட்டினால், களத்திற்கு வெளியே கத்தார் அரசு கட்டுப்பாடுகள் என்ற பெயரில் தினுசு தினுசாக என்னவெல்லாமோ செய்ய முயல்கிறது.

பரபரப்புக்கு மட்டுமில்லை, சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத தொடராகவே இந்த உலகக்கோப்பை அமையவிருக்கிறது. என்ன நடக்கப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்!