Published:Updated:

FIFA WorldCup:BTS குழுவின் இசைக்கச்சேரி; FIFA பாடல் பாடும் இந்தியப் பாடகி; அசத்தலானதொடக்கவிழா!

தென்கொரியாவின் BTS இசைக்குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஒருவரான ஜான்கூத் தொடக்கவிழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்.

FIFA WorldCup:BTS குழுவின் இசைக்கச்சேரி; FIFA பாடல் பாடும் இந்தியப் பாடகி; அசத்தலானதொடக்கவிழா!

தென்கொரியாவின் BTS இசைக்குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஒருவரான ஜான்கூத் தொடக்கவிழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்.

Published:Updated:
  22 வது கால்பந்து உலகக்கோப்பை இன்று கத்தாரில் கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது.  உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையைப் கத்தார் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே உலகக்கோப்பைக்காக கத்தார் தயாராகி வந்தது.  ஆயத்தங்கள் எல்லாம் முடிந்து இன்று முதல் அந்த கோலாகல திருவிழா தொடங்கவிருக்கிறது. தொடக்க நிகழ்ச்சியையே கத்தார் வெகு விமரிசையாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.
Qatar
Qatar
FIFA

அதன்படி, தென்கொரியாவின் BTS இசைக்குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஒருவரான ஜான்கூத் விழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார். “ட்ரீமர்ஸ்” என்ற தலைப்பில் அவர் பாடவிருக்கிறார். தொடர்ந்து அமெரிக்க இசைக் குழுவான பிளாக் ஐட் பீஸ்( black Eyed Peas) மற்றும் கொலம்பிய பாடகர் ஜே பால்வின் ஆகியோரும் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். நைஜீரிய பாடகரும் பாடலாசிரியருமான பேட்ரிக் நாமேகா ஒகோரி மற்றும் 2022 உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிட்ட அமெரிக்க ராப்பரான லில் பேபி ஆகியோரும் நிகழ்ச்சியில் பாடுகிறார்கள். இந்திய நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி, ஃபிஃபா உலகக் கோப்பை 2022 அதிகாரப்பூர்வ பாடலான "லைட் தி வேர்ல்ட்" இல் படியிருந்தார். இவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த பாடலை பாட இருக்கிறார். இதையடுத்து கத்தார் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்நாட்டு கலைஞர்களின் இசை,நடனம், பாடல்களை அரங்கேற்ற உள்ளனர். 60,000 இருக்கைகள் கொண்ட அல்மேத் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கிருக்கின்றன. இந்தியா சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.  

BTS
BTS
FIFA

கலை நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு 2022 உலகக் கோப்பையின் முதல் நாள் ஆட்டத்தில் கத்தார்- ஈகுவேடார் அணிகள் மோதுகின்றன.  ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக, இந்த உலகக்கோப்பையில் 3 மகளிர் நடுவர்கள் பணியாற்றவிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.