Published:Updated:

அசரடிக்கும் அர்ஜெண்டினா; சரித்திரத்தை நோக்கி மொராக்கோ; அரையிறுதியில் வெல்லப்போகும் அணிகள் எவை?

Messi ( FIFA )

இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்குத்தான் இடம் எனும் போது அந்த இரண்டு அணிகள் எதுவாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு அத்தனை பேருக்குமே எழுந்திருக்கிறது

அசரடிக்கும் அர்ஜெண்டினா; சரித்திரத்தை நோக்கி மொராக்கோ; அரையிறுதியில் வெல்லப்போகும் அணிகள் எவை?

இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்குத்தான் இடம் எனும் போது அந்த இரண்டு அணிகள் எதுவாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு அத்தனை பேருக்குமே எழுந்திருக்கிறது

Published:Updated:
Messi ( FIFA )
கத்தார் உலகக்கோப்பையின் இறுதி வாரத்தில் இருக்கிறோம். நடந்து முடிந்த மூன்று வாரங்களுமே பெரும் ஆச்சர்யங்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.

வரவிருக்கும் அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப்போட்டியும் இதுநாள் வரை நாம் கண்டதற்கு சற்றும் குறையாத சுவாரஸ்யம் கொண்டதாகவே இருக்கப்போகிறது. அர்ஜெண்டினா, குரோஷியா, மொராக்கோ, ஃபிரான்ஸ் என நான்கு அணிகள் இறுதிப்போருக்கு முந்தைய அத்தியாயத்தில் இருக்கின்றன. இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்குத்தான் இடம் எனும்போது அந்த இரண்டு அணிகள் எதுவாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு அத்தனை பேருக்குமே எழுந்திருக்கிறது. அதற்கான விடையை நம்மாலும் கூற முடியாது. ஆயினும்,

அரையிறுதியில் ஆடப்போகும் இந்த 4 அணிகளின் கடந்து வந்த பாதையையும் ஒப்பிட்டு எந்த அணிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை அளவிட முயல்வோம்.

அர்ஜெண்டினா:

இந்த உலகக்கோப்பையில் அதிக எதிர்பார்ப்போடு களமிறங்கிய ஒரு அணி அர்ஜெண்டினாவே. காரணம், மெஸ்ஸி. இதுதான் தனது கடைசி உலகக்கோப்பை என அறிவித்துவிட்டு மெஸ்ஸி களமிறங்கியிருக்கிறார். அவருக்காக வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அணியுடைய கூட்டு எண்ணமாக இருக்கிறது. முதல் போட்டியிலேயே சவுதி அரேபியாவிடம் பலத்த அடி வாங்கியிருந்தாலும், அர்ஜெண்டினா அதை ஒரு 'Wake Up Call' ஆக எடுத்துக் கொண்டு முன்னேறியது. ஸ்கலோனியின் பயிற்சியில் தொடர் வெற்றிகளை பெற்று வந்த அந்த அணிக்கு சவுதி அரேபிய போட்டி ஒரு வேகத்தடையாக அமைந்திருந்தது. அந்த போட்டிக்குப் பிறகு எல்லாமே வெற்றிதான். மெஸ்ஸியின் ஃபார்ம், மெஸ்ஸியை மையப்படுத்தி வகுக்கப்படும் அணியின் திட்டங்கள் இவைதான் அர்ஜெண்டினாவின் பலம்-பலவீனம் என இரண்டுமாகவும் இருந்தது. இங்கே உலகக்கோப்பையில் அவர்களுக்கு எல்லாமே பலம்தான். எல்லாமே பாசிட்டிவ்தான்.

Messi
Messi
FIFA
மெஸ்ஸிக்காக மற்ற வீரர்கள் ஆடுகிறார்கள். மற்ற வீரர்களுக்காக மெஸ்ஸியும் ஆடுகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து தடுப்பாட்டக்காரர்களை கடந்து மெஸ்ஸி அடித்த கோல், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துடிப்பான டிரிப்பிளின் விளைவாக மொலினாவுக்கு கொடுத்த அசிஸ்ட் இவை இரண்டும்தான் மெஸ்ஸியின் தற்போதைய ஃபார்மிற்கான சான்று.

அல்வரெஸ், மார்ட்டினஸ், டீ மரியா, மொலினா போன்றவர்களின் ஒத்துழைப்பும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நெதர்லாந்துக்கு எதிராக பெனால்டி சூட் அவுட்டையுமே சேவ் செய்து கொடுத்தார். தங்களுடைய பகுதியை கண்ணும் கருத்துமாக காத்துக் கொள்வதில்தான் அர்ஜெண்டினா கொஞ்சம் தடுமாறுகிறது. ஒட்டமெண்ட்டி & கோ இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அந்த குறையும் நீர்த்துப் போகும்.

குரோஷியா:

'Underdog' இமேஜூடனேயே இந்த முறையும் களமிங்கிய குரோஷியா இந்த முறையும் சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது. காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்திருக்கிறது. குரோஷியா ஒரு 'எக்ஸ்ட்ரா டைம் ஸ்பெசலிஸ்ட்'. குரோஷொயாவை வெல்ல நினைக்கும் அணிகள், கொடுக்கப்பட்ட அந்த 90 நிமிடங்களுக்குள்ளேயே அவர்களை வீழ்த்திவிட வேண்டும். அதற்கு மேல் சென்றால் குரோஷியாவை வீழ்த்துவது ரொம்பவே சிரமம். சிரமம் கூட இல்லை. இதுவரை யாருமே வென்றதில்லை என்பதே இதுவரையிலான ரெக்கார்ட். கடந்த உலகக்கோப்பையிலும் அதுதான் நடந்திருந்தது.

Croatia
Croatia
FIFA

இந்த உலகக்கோப்பையிலும் அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. ரிச்சர்லிசன், பெரிசிச், கோவாசிச், லூகா மாட்ரிச் என அதி திறன் பொதிந்த வீரர்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றனர். இவர்களை முறியடித்து எதிரணி முன்னிலை எடுக்க வேண்டும். எடுத்த முன்னிலையை 90 நிமிடம் முடியும் வரை அப்படியே காப்பாற்ற வேண்டும்.

மொராக்கோ:

ஆப்பிரிக்க நாடான மொராக்கோ முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. உலகக்கோப்பையில் எப்போதுமே தென் அமெரிக்க நாடுகளும் ஐரோப்பிய நாடுகளுமே அதிக ஆதிக்கத்தை செலுத்தியிருக்கின்றனர். அமெரிக்காவும் தென் கொரியாவும் மட்டுமே இதற்கு விதிவிலக்காக ஒரே ஒரு முறை மட்டும் அரையிறுதி வரை முன்னேறியிருக்கின்றனர். மொராக்கோ இந்த விதிவிலக்கை இன்னுமே விஸ்தரித்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலிருந்து உலகக்கோப்பையின் அரையிறுதி வரை முன்னேறும் முதல் நாடு மொராக்கோ.

Morocco
Morocco
FIFA
மொராக்கோவைப் பொறுத்தவரை 1986 உலகக்கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 வரை முன்னேறியிருந்தார்கள். அப்போது அப்தர்ரஷக் கெய்ரி போன்ற வீரர்களை உள்ளடக்கிய கோல்டன் ஜெனரேஷனை அந்த அணி கொண்டிருந்தது. அப்போதிருந்தே அந்த அணி தற்காப்பில் ரொம்பவே வலுவானதுதான்.

அது இப்போது வரை தொடர்ந்திருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் மொராக்கோ அணி இதுவரை 5 கோல்களை அடித்து ஒரே ஒரு கோலை மட்டுமே எதிரணிக்கு வழங்கியிருக்கிறது. அந்த ஒரு கோலுமே 'Own Goal' ஆக அமைந்ததுதான். கோல் கீப்பர் யாசீன் போனோ இந்த உலகக்கோப்பையின் தலைசிறந்த பெர்ஃபார்மர்களில் ஒருவர். ஹக்கிமியும் அப்படியே. சியேச், என்நைசரி என பல வித்தைக்காரர்களை உள்ளடக்கிய அணியாகவே மொராக்கோ இருக்கிறது.

ஃபிரான்ஸ்:

நடப்பு சாம்பியனாக ரொம்பவே சௌகரியமாக போட்டிகளை வென்று கொண்டிருக்கிறது ஃபிரான்ஸ். ஜிரூ, எம்பாப்பே, க்ரீஸ்மேன், ஹெர்னாண்டஸ் என எல்லாருமே திறன்மிக்க ஸ்டார்கள். மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு பிந்தைய தலைமுறையின் ஹீரோவாக ஒளிரத் தொடங்கியிருக்கும் எம்பாப்பே அந்த அணியின் மிகப்பெரிய பலம். கோல்டன் பூட்டுக்கான ரேஸில் முன்னணியில் இருக்கிறார். அவரின் செம கூலான துடிப்புமிக்க அட்டாக்கை எதிரணிகள் எதிர்கொள்வது ரொம்பவே சிரமம். அவரை தாண்டியும் ஜிரூ, க்ரீஸ்மேன் போன்றோரு கலக்கவே செய்வர்.

கிலியன் எம்பாப்பே
கிலியன் எம்பாப்பே
FIFA

மொராக்கோவும் ஃபிரான்ஸூம் மோதப்போகும் ஆட்டத்தில் மொராக்கோவிம் டிஃபன்ஸூம் ஃபிரான்ஸின் அட்டாக்கும் கவனிக்கத்தக்க சுவாரஸ்ய அம்சங்களாக இருக்கப்போகிறது. எந்த அணி அரையிறுதிக்கு சென்றாலுமே ஒரு வரலாறுதான். அந்தளவுக்கு வெற்றிக்குத் தேவையான கனம் பொருந்திய காரணங்கள் அத்தனை அணிக்குமே இருக்கிறது.