Published:Updated:

FIFA World Cup 2022 Round Up: `கோல் அடிச்சது ரொனால்டோ' புது பஞ்சாயத்து; ஒட்டக ரைடுக்கு வந்த டிமாண்ட்

Ronaldo ( Twitter )

கத்தார் உலகக்கோப்பையில் நிகழ்ந்து வரும் சுவாரஸ்ய சம்பவங்களின் இன்றைய தொகுப்பு.

FIFA World Cup 2022 Round Up: `கோல் அடிச்சது ரொனால்டோ' புது பஞ்சாயத்து; ஒட்டக ரைடுக்கு வந்த டிமாண்ட்

கத்தார் உலகக்கோப்பையில் நிகழ்ந்து வரும் சுவாரஸ்ய சம்பவங்களின் இன்றைய தொகுப்பு.

Published:Updated:
Ronaldo ( Twitter )

1. போர்ச்சுக்கல் மற்றும் உருகுவே அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 2-0 என வென்றிருந்தது. இந்தப் போட்டியில் போர்ச்சுக்கல் அணியின் சார்பில் இரண்டு கோல்களையும் ஃபெர்ணான்டஸே அடித்திருந்தார். ஆனால், இப்போது புதிதாக ஒரு சச்சரவு கிளம்பியிருக்கிறது. அதாவது, போர்ச்சுக்கல் அடித்த முதல் கோலை ஃபெர்ணான்டஸ் அடிக்கவில்லை. ரொனால்டோதான் அடித்தார் என பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறார்கள். ஃபெர்ணான்டஸ் அடித்த க்ராஸை ரொனால்டோ ஹெட்டர் செய்ய முயன்றிருந்தார். ஆனால் பந்து ரொனால்டோவின் தலையில் பட்டதா என தெளிவாக தெரியவில்லை. இதை வைத்துதான் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறார்கள். ஃபெர்ணான்டஸே அது ரொனால்டோவின் கோல்தான் என்பது போலவும் பேசியிருக்கிறார்.

Ronaldo
Ronaldo
Screen Shot

2. உலகக்கோப்பை நடைபெறுவதால் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரில் முகாமிட்டிருக்கின்றனர். போட்டிகளை பார்ப்பது மட்டுமல்ல ஊர் சுற்றுவதுமே ரசிகர்களின் பொழுதுபோக்குதான். கத்தாரின் ஒட்டக சவாரி ரொம்பவே ஃபேமஸ். ரசிகர்கள் இந்த ஒட்டக சவாரியில் அதிக ஆர்வம் காட்டுவதால் இதற்கான டிமாண்ட் எகிறியிருக்கிறது. ஒட்டகங்கள் ஓவர் டைம் டியூட்டி பார்க்கிறதாம்!

3. செனகல் அணி க்ரூப் சுற்றை தாண்டி ரவுண்ட் ஆஃப் 16 க்கு முன்னேறியிருக்கிறது. கடைசியாக அந்த அணி 2002 உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறியிருந்தது. அதன்பிறகு இப்போதுதான் நாக் அவுட்டுக்கு முன்னேறியிருக்கிறது. சுவாரஸ்யம் என்னவெனில், 2002 உலகக்கோப்பையில் செனகல் அணிக்கு அலியா சீஸ் கேப்டனாக இருந்தார். அந்த அலியா சீஸ்தான் இப்போது செனகல் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

4. குரோயேஷியாவுக்கு கனடாவுக்கும் இடையிலான ஆட்டத்தின் போது கனடா கோல்கீப்பர் மிலன் போர்ஜானுக்கு எதிராக விரும்பத்தகாத வகையில் இனவெறியுடன் சில குரோயேஷியா ரசிகர்கள் கமெண்ட் அடித்திருக்கின்றனர். FIFA அமைப்பு அந்த ரசிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

5. ஆண்களுக்கான உலகக்கோப்பைப் போட்டியில் பெண் நடுவர்கள் பங்கேற்கும் முறை இந்த உலகக்கோப்பையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று பெண் நடுவர்கள் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கின்றனர். சிறப்பம்சம் என்னவெனில், நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் மூன்று பெண் நடுவர்களுமே பங்கேற்க இருக்கின்றனர்.