Published:Updated:

FIFA World Cup Round up: பிரேசிலுக்கும் அடி போர்ச்சுகலுக்கும் அடி; ஒரே நாளில் இருபெரும் அப்செட்கள்!

Cameroon ( FIFA )

கத்தார் உலகக்கோப்பையின் இன்றைய தினத்தின் சுவாரஸ்ய தொகுப்புகளின் ரவுண்ட் அப்!

FIFA World Cup Round up: பிரேசிலுக்கும் அடி போர்ச்சுகலுக்கும் அடி; ஒரே நாளில் இருபெரும் அப்செட்கள்!

கத்தார் உலகக்கோப்பையின் இன்றைய தினத்தின் சுவாரஸ்ய தொகுப்புகளின் ரவுண்ட் அப்!

Published:Updated:
Cameroon ( FIFA )

1. நேற்று லுசைல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் G பிரிவில் பிரேசில் அணியும் கேமரூன் அணியும் மோதின. இந்த போட்டியின் இரண்டாவது பாதி வரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில், 92-வது நிமிடத்தில் கேமரூன் கேப்டன் வின்சென்ட் அபுபக்கர் கோல் அடித்தார். கோலடித்த பின்னர், தனது டீ - ஷர்டைக் கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் நடுவர் அவருக்கு ரெட் கார்டை அளித்து வெளியேற்றினார். இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வெற்றி பெற்றது.

2. நேற்று, குரூப் H பிரிவில் போர்ச்சுக்கல் அணியும் தென்கொரியா அணியும் எஜுகேஷனல் சிட்டி மைதானத்தில் மோதின. ஆட்டத்தின் 90வது நிமிடம் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென்கொரியா அணி வீரர் ஹ்வங், மற்றொரு கோலை அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் கொரிய அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. தென் கொரிய அணி வீரர் சன் ஹெயுங் மின், இந்த வெற்றியை மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீருடன் கொண்டாடிய புகைப்படத்தை FIFA தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

3. நேற்று, குரூப் H பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணியும் கானா அணியும் அல் ஜனோப் ஸ்டேடியத்தில் மோதின. இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றி பெற்றது. உருகுவே அணி வெற்றியைப் பெற்றாலும், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதன் மூலம், கானா அணியும்  உருகுவே அணியும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டன. உருகுவே அணி வீரர்கள் ஆட்டம் முடிந்த பின் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரஸ், கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

4. நேற்று, பிரேசில் அணியும் கேமரூன் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வெற்றி பெற்றது. 1998-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு, பிரேசில் அணி உலகக் கோப்பையின் குரூப் பிரிவு ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தப் போட்டியின் மூலம், உலகக்கோப்பையில் பிரேசில் அணியை வீழ்த்திய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை கேமரூன் அணி பெற்றுள்ளது.

பிரேசில் - கேமரூன்
பிரேசில் - கேமரூன்
AP

5. இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில், முன்னணி கால்பந்து அணிகளைத் தோற்கடித்த அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. சவுதி அரேபியா அணி, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியைத் தோற்கடித்தது. 2018 உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணியை துனிசியா அணி தோற்கடித்தது. இதேபோல் நேற்று, பிரேசில் அணியை கேமரூன் அணி தோற்கடித்தது. அப்செட்டை நிகழ்த்திய திருப்தியுடன் இந்த அணிகள் தொடரிலிருந்து வெளியேறியிருக்கின்றன.