Published:Updated:

FIFA World Cup: இங்கிலாந்து வெற்றிக்குத் துணை நின்ற 2k கிட் ஜூட் பெல்லிங்ஹாம் - யார் இவர்?

ஜூட் பெல்லிங்ஹாம்

ஈரான் - இங்கிலாந்துக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஜூட் பெல்லிங்ஹாம் என்ற இளம் வீரர் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

FIFA World Cup: இங்கிலாந்து வெற்றிக்குத் துணை நின்ற 2k கிட் ஜூட் பெல்லிங்ஹாம் - யார் இவர்?

ஈரான் - இங்கிலாந்துக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஜூட் பெல்லிங்ஹாம் என்ற இளம் வீரர் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

Published:Updated:
ஜூட் பெல்லிங்ஹாம்

கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய ஃபிஃபா (FIFA) கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் டிசம்பர் 18-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல் உள்ளிட்ட 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜூட் பெல்லிங்ஹாம்
ஜூட் பெல்லிங்ஹாம்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - ஈரான் அணிகள் மோதின. இங்கிலாந்து அணியில் ஹாரி கேன், வெய்ன் ரூனி, பில் போடென், டெக்லன் ரைஸ் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு மத்தியில் ஜூட் பெல்லிங்ஹாம் என்ற இளம் வீரர் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். காரணம், நேற்றைய போட்டியில் இங்கிலாந்திற்காக அதிக கோல் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

ஜூட் பெல்லிங்ஹாம்
ஜூட் பெல்லிங்ஹாம்

அனைவரையும் கவர்ந்த, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜூட் பெல்லிங்ஹாம் ஒரு 2k கிட். Bundesliga, Borussia Dortmund மற்றும் இங்கிலாந்து தேசிய அணிக்கு மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார். இவர் 8 வயதிலேயே பர்மிங்காம் அணியில் சேர்ந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். பின் 17 வயதில், முதன் முதலாக இங்கிலாந்து அணியில் சேர்ந்து தனது திறமையால் அணியில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார். ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடக்க ஆட்டத்தில் ஈரானை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 6 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.