1. கத்தார் உலகக் கோப்பையில் நேற்றைய தினம் அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் ஈரான் அணியும் வேல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் போது வேல்ஸ் கோல் கீப்பர் வெய்ன் ஹென்னிசி, ஈரான் அணி வீரர் மெஹ்தி தரேமி மீது காலால் மோதியதால், நடுவர் அவருக்கு ரெட் கார்டு வழங்கி ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார். இந்த 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் வழங்கப்பட்ட முதல் ரெட் கார்டு இதுவாகும்.

2. 2022 FIFA உலகக் கோப்பையில் இருந்து முதல் அணியாக வெளியேறியது கத்தார். நேற்று நடந்த ஆட்டத்தில் கத்தார் அணி செனகல் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் ஈக்குவேடார் அணியிடமும் கத்தார் வீழ்ந்தியிருந்தது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து உலகக்கோப்பை நடத்தும் நாடான கத்தாரே முதல் அணியாகத் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது.

3. 2022 ஃபிஃபா உலகக் கோப்பையில் சவுதி அரேபியா அணி அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும், சவுதி மன்னர் முகமது பின் அல் சலாம் விலை உயர்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் பாண்டமைப் பரிசாக வழங்குவார் என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும், அதில் உண்மை இல்லை என்று ஸ்டிரைக்கர் சலே அல்ஷெஹ்ரி மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.