Published:Updated:

`கால்பந்தாட்டத்தைப் பார்க்க பெண்களை அனுமதிங்க!'- இரானுக்கு ஃபிஃபா கெடுபிடி

அங்கிருந்தவர்கள் ஹைலரை விமர்சித்ததோடு அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். அஞ்சிய ஹைலர் நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து, சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

foot ball
foot ball ( arabnews )

இரான் நாட்டு தெஹ்ரான் மைதானத்தில் நடக்க இருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை ரசிக்க, பெண் ரசிகைகள் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான எல்லா முயற்சியையும் ஃபிஃபா எடுத்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபெண்டினா கூறியிருக்கிறார்.

டிக்கெட் விற்பனையின் மூலமே பெண் ரசிகைகளை அனுமதிப்பதை இரான் அரசு நிரூபிக்க வேண்டும்.
ஜியானி இன்ஃபெண்டினா ( ஃபிஃபா தலைவர் )

1981-ம் ஆண்டிலிருந்து இரான் நாட்டில், பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து போட்டிகளை ரசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்வமுள்ள பெண் ரசிகைகள் அவ்வப்போது ஆண் வேடமணிந்து மைதானத்திற்குள் சென்று வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இரான் நாட்டிலுள்ள தெஹ்ரான் மைதானத்தில் நடந்த கால்பந்தாட்டத்தை ரசிக்க  ஹைலர் என்ற இளம்பெண் ஆண்வேடமணிந்து மைதானத்திற்குள் நுழைய முயற்சி செய்தார். ஆனால், ஹைலரை மைதானத்தின் வாசலில் வைத்து கைது செய்து மூன்று நாள்கள் சிறையில் வைத்தது இரான் அரசு. பிணையில் வந்த ஹைலர் ஆறு மாத காலமாக தன்னுடைய வழக்குக்காக காத்திருந்தார். செப்டம்பர் 9-ம் தேதி ஹைலரின் வழக்கு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.

இரான்
இரான்
thenational.ae

அன்று நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால் வழக்கு விசாரிக்கப்படவில்லை. அங்கு இருந்தவர்கள் ஹைலரை விமர்சித்ததோடு அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அஞ்சிய ஹைலர் நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து, சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். ஹைலரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஹலைர் விரும்பிய ஊதாநிற அணியினைக் குறிப்பிட்டு '#BlueGirl' என்ற ஹேஸ்டேக்குகள் மூலம் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின.

ஹைலர் மரணத்தை அடுத்து ஃபிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபெண்டினா இரானுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், ``2022-ம் ஆண்டு இரானில் நடக்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் கால் இறுதிச்சுற்றைக் கண்டு ரசிக்க பெண் ரசிகைகளை அவசியம் அனுமதிக்க வேண்டும். டிக்கெட் விற்பனையின் மூலமே பெண் ரசிகைகளை அனுமதிப்பதை இரான் அரசு நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் திட்டமிட்டபடி இரானில் கால்பந்தாட்டம் நடக்கும். மேலும் உங்களின் 40 ஆண்டுக்கால வழிமுறைகளை மதிக்கிறோம். ஆனால், இது மாற்றத்திற்கான நேரம். கால்பந்தாட்ட கனவுக்காக வாழ்க்கையைத் தொலைத்தவரின் கனவு வெல்லட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இரான்
இரான்
bbc

ஃபிஃபா கால்பந்தாட்ட அமைப்பு கெடுபிடி காட்டியுள்ள நிலையில், இரான் அரசு தன் எழுதப்படாத சட்டத்தை உடைக்குமா, ஹலர் மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்றும் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.