Published:Updated:

EPL: தடுமாறிய மான்செஸ்டர் யுனைடட்டிமே தோல்வியுற்ற லிவர்பூல்; இனி சாம்பியன்ஷிப்புக்கு சண்டை செய்யுமா?

Premier League

ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மான்செஸ்டர் யுனைடட் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது.

EPL: தடுமாறிய மான்செஸ்டர் யுனைடட்டிமே தோல்வியுற்ற லிவர்பூல்; இனி சாம்பியன்ஷிப்புக்கு சண்டை செய்யுமா?

ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மான்செஸ்டர் யுனைடட் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது.

Published:Updated:
Premier League
மூன்று சுற்றுகள்தான் முடிந்திருக்கின்றன. ஆனால் பல பரபரப்பான முடிவுகளைப் பரிசளித்திருக்கிறது 2022-23 பிரீமியர் லீக் சீசன். ஆர்செனல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது. செல்சீ, மான்செஸ்டர் சிட்டி போன்ற அணிகள் இந்த வாரம் பெரிதாகத் தடுமாறின. இன்று அதிகாலை நடந்த போட்டியிலோ அநியாயத்துக்கும் தடுமாறிக்கொண்டிருந்த மான்செஸ்டர் யுனைடட் அணியிடம் தோற்றிருக்கிறது சாம்பியன்ஷிப் பட்டத்துக்குப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட லிவர்பூல். இப்போது புள்ளிப் பட்டியலில் லிவர்பூலை முந்தியிருக்கிறது மான்செஸ்டர் யுனைடட்.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்றதால் மான்செஸ்டர் யுனைடட் அணியின் மீதும் அந்த அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் மீதும் அளவு கடந்த நெருக்கடி இருந்தது. ஒருபக்கம் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்துக்கு வெளியே அந்த அணியின் உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டமும் வலுத்தது. அவர்கள் ஸ்குவாடுக்குள்ளும் பல குழப்பங்கள். வெளியேற விரும்பும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, விமர்சனங்களால் துளைக்கப்படும் கேப்டன் ஹாரி மகுயர், கோலடிக்க முடியாமல் தடுமாறும் மார்கஸ் ரேஷ்ஃபோர்ட், ஜேடன் சான்சோ என ஒட்டுமொத்த அணியையும் பிரச்னைகள் மட்டுமே சூழ்ந்திருந்தன.

Manchester United vs Liverpool
Manchester United vs Liverpool

இப்படியொரு சூழ்நிலையில்தான் யுனைட்டடைச் சந்தித்தது லிவர்பூல். அந்த அணிக்கும் நெருக்கடிகள் இல்லாமல் இல்லை. சீசனின் முதல் இரு போட்டிகளிலுமே வெற்றி பெறத் தவறியது அந்த அணி. ஃபுல்ஹாம், கிறிஸ்டல் பேலஸ் அணிகளோடு டிரா செய்திருந்தது. நிச்சயமாக 6 புள்ளிகளை வென்றிருக்க வேண்டிய போட்டிகளில் 4 புள்ளிகளை இழந்திருந்ததால், இந்தப் போட்டியில் தங்கள் தரத்தை நிரூபிக்கவேண்டிய நெருக்கடி அந்த அணிக்கும் இருந்தது. யுனைடட் மேனேஜர் எரிக் டென் ஹாக் இந்தப் போட்டியில் பல அதிரடி மாற்றங்கள் செய்தார். கேப்டன் ஹேரி மகுயர், லூக் ஷா, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றவர்களை பெஞ்சில் அமரவைத்தார். வேகத்தைக் கொண்டு லிவர்பூலை தாக்குவது என்று திட்டம் தீட்டியிருந்தார். லிவர்பூல் மேனேஜர் ஜார்ஜன் கிளாப்புக்கு இப்படி எதுவும் ஆப்ஷன்கள் இருக்கவில்லை. அணியின் 9 முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் ஹார்வி எலியாட், ஜோ கோமஸ் ஆகியோர் விளையாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மான்செஸ்டர் யுனைடட் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாகச் சமீப காலமாக டிஃபன்ஸில் தடுமாறிவரும் லிவர்பூல் ரைட் பேக் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்டைக் குறிவைத்து தங்கள் அட்டாக்கைத் திட்டம் தீட்டியது அந்த அணி. அதற்குப் பல நேரங்களில் பலனும் கிடைத்தது. ரேஷ்ஃபோர்ட், எலாங்கா ஆகியோரின் வேகம், டிரென்ட்டை மேலும் தடுமாற வைத்தது. அதற்கெல்லாம் பலனாக 16வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது மான்செஸ்டர் யுனைடட். கிறிஸ்டியன் எரிக்சன் உடன் 1-2 ஆடிய எலாங்கா, இடது விங்கில் முன்னேறி பெனால்டி ஏரியாவுக்கு பந்தை கிராஸ் செய்தார். அங்கு மார்க் செய்யப்படாமல் இருந்த சான்சோ, பந்தை நன்றாகக் கட்டுக்குள் கொண்டுவந்து இலக்கை நோக்கி அடித்தார். யுனைடட் முன்னிலை பெற்றது. வான் டைக் அவரை பிரஸ் செய்திருந்தால் அந்த கோலை தடுத்திருக்க முடியும். அவரும் சமீப காலமாகத் தவறுகள் செய்து வருவது அந்த அணிக்கு பெரும் பிரச்னையாக அமைந்து வருகிறது. இதனால் ஜேம்ஸ் மில்னர் அவரோடு கோபித்துக் கொண்டார்.

Manchester United vs Liverpool
Manchester United vs Liverpool

25-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடட் இரண்டாவது கோலை அடித்திருக்கும். இடது விங்கில் பாக்ஸுக்கு சற்று வெளியே கிடைத்த ஃப்ரீ கிக்கை நேரடியாக ஷூட் செய்தார் கிறிஸ்டியன் எரிக்சன். அற்புதமான அந்த கர்லர் பால் இரண்டாவது போஸ்ட்டில் கோலாகியிருக்கும். ஆனால் ஆலிசன் ஒருவழியாக அதை தன் விரல்களால் தட்டிவிட்டு லிவர்பூலைக் காப்பாற்றினார். அதுவரை அட்டாக்கில் எதுவும் செய்ய முடியாமல் தடுமாறிய லிவர்பூல் அணி, கொஞ்சம் கொஞ்சமாக யுனைடட் டிஃபன்ஸை சோதிக்கத் தொடங்கியது. இருந்தாலும் அவர்களால் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஒவ்வொரு சிறு முயற்சிகளையும் மான்செஸ்டர் யுனைடட் டிஃபண்டர்கள் சிறப்பாகத் தடுத்தனர். குறிப்பாகக் கடந்த போட்டிகளின்போது பெரிதும் விமர்சிக்கப்பட்ட லிசாண்ட்ரோ மார்டினஸ் அட்டகாசமக்ச் செயல்பட்டார். டேக்கிள், இன்டர்செப்ஷன் என லிவர்பூல் அட்டாக்குகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டார். இறுதியில் முதல் பாதி 1-0 என முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியில் லிவர்பூல் அதிரடியான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது பாதி தொடங்கிய எட்டே நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்தது மான்செஸ்டர் யுனைடட். கோலடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் ஒட்டுமொத்த லிவர்பூல் அணியும் அட்டாக் செய்தது. அனைவரும் யுனைடட் பாதியிலிருந்த நேரத்தில், பந்தை மீட்டு கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கியது யுனைடட். லிவர்பூல் கேப்டன் ஜோர்டன் ஹெண்டர்சன் ஒரு பாஸைத் தவறாகச் செய்ய, பந்தைப் பெற்ற ஆன்டனி மார்ஷியல், ரேஷ்ஃபோர்டை ரிலீஸ் செய்தார். புயல் வேகத்தில் முன்னேறிய ரேஷ்ஃபோர்ட், ஆலிசனை ஏமாற்றி கோலடித்தார். 2-0.

அதன்பிறகு லிவர்பூல் மாற்றி மாற்றி அட்டாக்குகளை மேற்கொண்டது. ஆனால் அவர்களால் கோலடிக்கவே முடியவில்லை. ஃபெபினியோவின் ஹெட்டரை டீ கே தடுத்தார். சில நல்ல வாய்ப்புகளை ராபர்டோ ஃபிர்மினோ கோட்டை விட்டார். அணியின் சூப்பர் ஸ்டார் முகமது சலாவும் பெரிதாக எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்தான் லிவர்பூல் அணியின் முதல் கோலை அடித்தார். 81வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கார்னர் கிடைத்தது. டிரென்ட் அனுப்பிய கார்னரை ஃபேபியோ கர்வாலோ கோல் நோக்கி அடித்தார். ஆனால் அதை டீ கே தடுத்துவிட்டார். ரீபௌண்ட்டான பந்தை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் சலா. அதனால் யுனைடட்டின் முன்னிலை குறைந்தது. போட்டி சூடு பிடித்தது.

Manchester United vs Liverpool
Manchester United vs Liverpool

கடைசி சில நிமிடங்கள் சில மாற்றங்களைச் செய்தார் டென் ஹாக். சோர்வடைந்த வீரர்களை வெளியே எடுத்துவிட்டு ஃபிரெஷாக இருந்த வீரர்களை உள்ளே அனுப்பினார். கடைசிக் கட்டத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் லிவர்பூல் அணியால் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. அதன் விளைவாக 2-1 என இந்தப் போட்டியை வென்றது மான்செஸ்டர் யுனைடட்.

இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்று புள்ளிகளுடன் 14வது இடத்துக்கு முன்னேறியது அந்த அணி. இந்த சீசனில் இதுவரை வெற்றியே பதிவு செய்யாத லிவர்பூல், 3 போட்டிகளில் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று 16வது இடத்தில் இருக்கிறது.