Published:Updated:

இத்தாலி ரசிகர்களுக்கு அடி உதை… சொந்த நாட்டு வீரர்கள் மீதே இனவெறி தாக்குதல்… கலவரமாகும் இங்கிலாந்து!

இங்கிலாந்து வீரர்கள் ராஷ்ஃபோர்டு, சாஞ்சோ, சாகா

மார்க்கஸ் ராஷ்ஃபோர்டின் குடும்பம் கரிபீயன் தீவுகளில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். புக்காயோ சாகா நைஜீரிய பின்னணி கொண்டவர். ஜேடன் சாஞ்சோவின் பெற்றோரும் வெஸ்ட் இண்டீஸில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள்.

Published:Updated:

இத்தாலி ரசிகர்களுக்கு அடி உதை… சொந்த நாட்டு வீரர்கள் மீதே இனவெறி தாக்குதல்… கலவரமாகும் இங்கிலாந்து!

மார்க்கஸ் ராஷ்ஃபோர்டின் குடும்பம் கரிபீயன் தீவுகளில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். புக்காயோ சாகா நைஜீரிய பின்னணி கொண்டவர். ஜேடன் சாஞ்சோவின் பெற்றோரும் வெஸ்ட் இண்டீஸில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள்.

இங்கிலாந்து வீரர்கள் ராஷ்ஃபோர்டு, சாஞ்சோ, சாகா

நேற்று நள்ளிரவு நடைபெற்ற யூரோ கோப்பை 2020 இறுதிப்போட்டியில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்கள் முன் நடந்த இந்தத்தோல்விக்கு இத்தாலி ரசிகர்களையும், இங்கிலாந்து அணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களையும் தாக்கத்தொடங்கியிருக்கிறார்கள் சில இனவெறிகொண்ட இங்கிலாந்து ரசிகர்கள்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘’இனவெறித் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது’’ எனக் கண்டித்தும் லட்சணக்கணக்கான இனவெறி ட்வீட்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.

நேற்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் டை ஆனது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட் அவுட் முறை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்காக பெனால்ட்டி ஷூட் அவுட் செய்த 5 வீரர்களில் மூன்று வீரர்கள் வேறு இனப் பின்னணி கொண்டவர்கள்.

ஹேரி கேன், ஹேரி மேகுவர் இருவரும் கோல் அடித்துவிட, மார்க்கஸ் ராஷ்ஃபோர்டு, ஜேடன் சாஞ்சோ, புக்காயோ சாகோ மூவரும் கோல் அடிக்கவில்லை. ''வந்தேறிகளால்தான் இங்கிலாந்து தோற்றது'' என இந்த வீரர்களின் நிறம் மற்றும் பிறப்பிடும் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்துவருகிறார்கள் சில இங்கிலாந்து ரசிகர்கள்.

மார்க்கஸ் ராஷ்ஃபோர்டின் குடும்பம் கரிபீயன் தீவுகளில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். புக்காயோ சாகா நைஜீரிய பின்னணி கொண்டவர். ஜேடன் சாஞ்சோவின் பெற்றோரும் வெஸ்ட் இண்டீஸில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள். ‘’வெளிநாட்டில் இருந்த வந்த வீரர்களால்தான் நாம் தோற்றோம். பூர்வீக இங்கிலாந்து வீரர்கள் இருவரும் சரியாக கோல் அடித்து விட்டார்கள்’’ எனத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் இனவெறி ரசிகர்கள்.

இந்த இனவெறி தாக்குதலுக்கு பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். தென்னாப்ரிக்காவைச் சேர்ந்தவரும், இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெவின் பீட்டர்சன் இனவெறி ரசிகர்களை கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

‘’நேற்றிரவு ஸ்டேடியத்தில் இருந்து வெளியே வந்து என் மகன் டிலானுடன் கார் ஏறுவதற்குள் நான் கண்ட காட்சிகள் மிகவும் கொடூரமாக இருந்தது. 2021-லும் இப்படி ஒரு நடத்தையா? நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த வீரர்களைப் பற்றி இவ்வளவு அவதூறா, 2030 உலக கோப்பையை நடத்த தகுதியான இடம்தானா இங்கிலாந்து?’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் கெவின் பீட்டர்சன்.

கெவின் பீட்டர்சன்
கெவின் பீட்டர்சன்

‘’இங்கிலாந்து அணி வெற்றிபெற்றபோதெல்லாம் ‘நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள், கறுப்பு - வெள்ளை என்கிற பாகுபாடெல்லாம் நம்மிடையே இல்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஒரு போட்டியில் இங்கிலாந்து தோற்றதும் கறுப்பின வீரர்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது’’ என வருந்துகிறார்கள் எப்போதும் பாதிக்கப்படும் மக்கள்.

சமூக வலைதளங்களில் வெறுப்பை பரப்பும் இனவெறி ரசிகர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்திருக்கிறது இங்கிலாந்து போலீஸ். ஆனால், அரசியல் தலைவர்களே இனவெறிக்கு ஆதரவாக இருக்கும்போது மக்கள் எப்படித் திருந்துவார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்.