Published:Updated:

England Vs Italy | EURO 2020 Final : ஹேரி கேன் கோப்பை வெல்வாரா? அலசும் தமிழ் கமென்ட்டேட்டர்ஸ்!

England Vs Italy
England Vs Italy

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் யூரோ கோப்பை இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 55 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத இங்கிலாந்தும், 53 ஆண்டுகளுக்கு முன்பு யூரோ கோப்பையை வென்ற இத்தாலியும் இதில் மோதுகின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான யூரோ கோப்பையின் இறுதிப்போட்டி இன்று இரவு லண்டனில் நடைபெறுகிறது. 1966-ல் உலக கோப்பையை வென்றபிறகு தொடர்ந்து ஒரு கோப்பைக்காகப் போராடும் இங்கிலாந்து, முன்னாள் யூரோ சாம்பியனான இத்தாலியை சந்திக்கிறது.

செம ஃபார்மில் இருக்கும் ஹேரி கேன் தலைமையில் இங்கிலாந்து களமிறங்க, ஜார்ஜியோ சியலினி தலைமையில் இத்தாலி களமிறங்குகிறது. யூரோ தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கும் இரு அணிகளில் யார் வெற்றிபெறுவார்கள், It's Coming home இந்தமுறையாவது நிறைவேறுமா என அலசியிருக்கிறார்கள் தமிழ் வர்ணனையாளர்கள்.

சோனி டிவியில் இந்த யூரோ தொடர் முழுக்க தமிழில் வர்ணனை செய்த ஸ்போர்ட்ஸ் விகடனின் பிரதீப் கிருஷ்ணா, அபிஷேக் ராஜா, நல்லப்பன் மோகன்ராஜா, சுதிர் சீனிவாசன் ஆகிய நால்வரும் இரு அணிகளின் பலம், பலவீனங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

England Vs Italy வெற்றி யாருக்கு... வர்ணணையாளர்களின் கணிப்பை இந்த வீடியோவில் காணலாம்!
அடுத்த கட்டுரைக்கு