Published:Updated:

Euro2020 : மோசமாக விளையாடி டிரா செய்த இங்கிலாந்து... ஸ்வீடன் சூப்பர் வெற்றி!

தொடர்ந்து டிஃபன்ஸிவான ஃபார்மேஷனிலேயே விளையாடிய இங்கிலாந்தால் ஸ்காட்லாந்துக்கு எந்த சவாலும் கொடுக்க முடியவில்லை. அதனால், இந்தப் போட்டி கோல் ஏதும் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யூரோ 2020 கால்பந்து தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஸ்வீடன், ஸ்லொவேகியா அணிகள் மோதின. முதல் போட்டியில் ஸ்பெய்னுக்கு எதிராக ஸ்வீடன் டிரா செய்திருந்தது. ஸ்லொவேகியாவோ போலாந்தை வீழ்த்தி நம்பிக்கையோடு போட்டியைத் தொடங்கியது. இரண்டு அணியின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்ததால், முதல் பாதியில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. ஹம்செக், டூடா இருவரும் முழுமையான ஸ்டிரைக்கர்களாக இல்லாததால் அவர்களால் லிண்டலாஃபின் குழுவுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்த முடியவில்லை.

முதல் போட்டியில் 1 புள்ளி மட்டுமே எடுத்திருந்ததால், ஸ்வீடனுக்கு இந்தப் போட்டியில் 3 புள்ளிகள் அவசியப்பட்டது. அதனால், இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் இருந்தே அந்த அணியினர் அட்டாக்கில் ஈடுபடத் தொடங்கினார்கள். முதல் போட்டியில் சில நல்ல வாய்ப்புகளை உருவாக்கிய இளம் ஃபார்வேர்ட் அலெக்சாண்டர் ஐசக், இந்தப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்டார். நிறைய வாய்ப்புகளை உருவாக்கினார்.

Alexander Isak
Alexander Isak
AP

75-வது நிமிடத்தில் அவர் செய்த ஒரு அட்டகாசமான மூவ், ஸ்வீடனுக்கு பெனால்ட்டி பெற்றுக்கொடுத்தது. டிஃபண்டரை நன்றாக 'ஹோல்ட்' செய்து பெனால்ட்டி ஏரியாவுக்குள் நுழைந்த குவாசினுக்கு அழகாக பந்தை ஃபிளிக் செய்தார். பந்தை எட்டிய குவாசினை ஸ்லொவேகிய கோல்கீப்பர் டுப்ராவ்கா பாக்சுக்குள் ஃபவுல் செய்ய ஸ்வீடனுக்கு பெனால்ட்டி கிடைத்தது. அதை கோலாக்கி அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் எமில் ஃபோர்ஸ்பர்க்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த போட்டியில் செக் குடியரசு, குரேஷியா அணிகள் மோதின. 35-வது நிமிடத்தில் குரேஷிய டிஃபண்டர் டெஜான் லோவ்ரன், பேட்ரிக் ஷிக்கை ஃபவுல் செய்ய அந்த அணிக்கு பெனால்ட்டி கிடைத்தது. அதை ஷிக் கோலாக மாற்றி அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்த யூரோவில் அவர் அடித்திருக்கும் மூன்றாவது கோல் இது.

Patrik Schik
Patrik Schik
AP

இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் குரேஷியா பதில் கோல் அடித்தது. 47-வது நிமிடத்தில் அவர்களுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. அதை கிரமாரிச் அதிவேகமாக எடுத்து பெரிசிச்சுக்கு பாஸ் செய்தார். இடது விங்கில் நுழைந்த அவர், சூஃபலை ஏமாற்றி கட் இன் செய்து உள்ளே வந்து கோலாக்கினார். அதன்பிறகு இரண்டு அணிகளாலும் கோலடிக்க முடியாமல் போக ஆட்டம் 1-1 என டிராவானது.

நள்ளிரவு நடந்த போட்டியில் சர்வதேச கால்பந்து அரங்கின் மிகப்பெரிய எதிரிகளான இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் லண்டன் வெம்பிளியில் மோதின. இரண்டு அணிகளும் ஒருசில மாற்றங்களோடு களமிறங்கின. வழக்கம்போல் சௌத்கேட்டின் டிஃபன்ஸிவான செட் அப் இந்தப் போட்டியிலும் தொடர, அவர்களால் அட்டாக்கிங் தேர்டில் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. நடுகளத்தில் கிரியேட்டிவிட்டி இல்லாததால் ஃபார்வேர்ட் கேனுக்கு அவர்களால் வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியவில்லை.

England vs Scotland
England vs Scotland
AP

ஆட்டம் போகப் போக ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து அதே மனநிலையில்தான் ஆடினார்கள். அதனால், ஸ்காட்லாந்து டிஃபன்ஸுக்கு பெரிய பிரச்னை ஏற்படவும் இல்லை. ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.

இன்று நடக்கும் போட்டிகள் ஸ்பெய்ன் vs போலாந்து, பிரான்ஸ் vs ஹங்கேரி, ஜெர்மனி vs போர்ச்சுகல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு