Published:Updated:

`நான் போட்டோவில் தெரியவேண்டும்' - விளையாட்டு வீரர் சுனில் சேத்ரியை ஓரமாகத் தள்ளிய இல.கணேசன்! | Video

பரிசு அளிப்பு விழா

தான் புகைப்படத்தில் தெரியவேண்டும் என்பதற்காகக் கால்பந்து வீரரான சுனில் சேத்ரியை ஓரமாகத் தள்ளிய மணிப்பூர், மேற்கு வங்க ஆளுநரும் முன்னாள் தமிழக பா.ஜ.க-வின் தலைவருமான இல.கணேசன். விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

Published:Updated:

`நான் போட்டோவில் தெரியவேண்டும்' - விளையாட்டு வீரர் சுனில் சேத்ரியை ஓரமாகத் தள்ளிய இல.கணேசன்! | Video

தான் புகைப்படத்தில் தெரியவேண்டும் என்பதற்காகக் கால்பந்து வீரரான சுனில் சேத்ரியை ஓரமாகத் தள்ளிய மணிப்பூர், மேற்கு வங்க ஆளுநரும் முன்னாள் தமிழக பா.ஜ.க-வின் தலைவருமான இல.கணேசன். விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

பரிசு அளிப்பு விழா

131-வது டுராண்ட் கோப்பை (Durand Cup) கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு FC அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி FC அணியை வீழ்த்தி வெற்றி பெற்று, கோப்பையையும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் பெங்களூர் FC அணிக்காக அதிக கோல்கள் (5) அடித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சிவசக்தி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. மணிப்பூர் ஆளுநரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசனுக்குச் சமீபத்தில் மேற்கு வங்கத்தின் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற அக்கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஆளுநர் என்ற முறையில் இல.கணேசன் கலந்துகொண்டார்.

பரிசளிப்பு விழாவின் போது, புகைப்படத்தில் தான் தெரியவேண்டும் என்பதற்காகப் பெங்களூர் FC அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை அவர் ஓரமாகத் தள்ளிய காட்சி, தற்போது வைரலாகி வருகிறது. இதே போன்று தமிழகக் கால்பந்து வீரரான சிவசக்தி நாராயணனும், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு விருந்தினரால் தள்ளப்பட்ட காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரும், முன்னாள் தமிழக பா.ஜ.க-வின் தலைவருமான இல.கணேசனின் இந்தச் செயல் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகிவருகிறது. அரசியல்வாதிகள் தங்களின் விளம்பரத்துக்காக விளையாட்டு வீரர்களை ஒதுக்குவது கண்டிக்கத்தக்கச் செயல் என்கிற ரீதியில் கமென்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.