Published:Updated:

களத்தில் இரண்டு கோல்... Coca Cola-க்கு டெட்லி பன்ச்... யூரோ கோப்பையில் அதிரடி காட்டும் ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ ( BERNADETT SZABO )

நேற்றைய இந்த இரண்டு கோல்கள் மூலம் யூரோ கோப்பை வரலாற்றில் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள்(11) அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரொனால்டோ. குவாலிஃபையிங் போட்டிகளையும் சேர்த்தால் மொத்தம் 42 கோல்கள்.

யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டிகள் கடந்த வாரம் ஐரோப்பாவில் தொடங்கி நடந்து வருகின்றன. #EURO2020 தொடரில் நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் F பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பிரிவுதான் இந்த யூரோ கோப்பை சீசனிலேயே மிகவும் பலம் வாய்ந்த அணிகள் இடம் பெற்றிருக்கும் பிரிவு. ‘குரூப் ஆஃப் டெத்’ என அழைக்கப்படும் இந்தப் பிரிவில் போர்ச்சுகலோடு, ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இப்பிரிவில் பிரான்ஸ் - ஜெர்மனி மோதிய முதல் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியாக நேற்றிரவு போர்ச்சுகல் ஹங்கேரியுடன் புத்தபெஸ்ட் நகரில் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்காமல் போக, ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கான முதல் கோலை அடித்தார் ரஃபேல் குரேரியோ. 1-0 என முன்னிலைப் பெற்றது போர்ச்சுகல். ஆனால், ரசிகர்கள் எல்லோரும் ரொனால்டோவிடம் இருந்து ஒரு கோலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் ஹங்கேரி வீரர் செய்த தவறால் போர்ச்சுகலுக்கு பெனால்ட்டி ஷூட் வாய்ப்பு கிடைக்க பந்து கேப்டன் ரொனால்டோவின் காலுக்குப்போனது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அற்புதமான கோலாக்கினார் ரொனால்டோ. அடுத்த ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் அணிக்கான மூன்றாவது கோலையும் அடித்தார் ரொனால்டோ.

ரொனால்டோ
ரொனால்டோ
Laszlo Balogh
களத்தில் இரண்டு கோல்... Coca Cola-க்கு டெட்லி பன்ச்... யூரோ கோப்பையில் அதிரடி காட்டும் ரொனால்டோ!
BERNADETT SZABO
களத்தில் இரண்டு கோல்... Coca Cola-க்கு டெட்லி பன்ச்... யூரோ கோப்பையில் அதிரடி காட்டும் ரொனால்டோ!
BERNADETT SZABO

நேற்றைய இந்த இரண்டு கோல்கள் மூலம் யூரோ கோப்பை வரலாற்றில் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள்(11) அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரொனால்டோ. குவாலிஃபையிங் போட்டிகளையும் சேர்த்தால் மொத்தம் 42 கோல்கள்.

போர்ச்சுகலுக்காக மொத்தம் 106 கோல்கள் அடித்திருக்கும் ரொனால்டோ விரைவில் உலக சாதனையும் படைக்க இருக்கிறார். ஒரு நாட்டுக்காக அதிகபட்ச கோல்கள் அடித்தவர்கள் என்கிற பட்டியலில் 109 கோல்கள் அடித்து ஈரானின் அலி டே முதலிடத்தில் இருக்கிறார். இன்னும் நான்கு கோல்கள் அடித்தால் அலி டேவின் சாதனையை முறியடித்துவிடுவார் ரொனால்டோ. அதுமட்டுமல்லாமல் 5 யூரோ கோப்பை இறுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடியவர் என்கிற சாதனையும் ரொனால்டோவுக்கு சொந்தமாகியிருக்கிறது.

இதற்கிடையே நேற்றைய போட்டிக்கு முன்பாக காலையில் நடக்கும் வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கு பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸுடன் வந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சரான கோக்க-கோலாவின் இரண்டு பாட்டில்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேட்டியளிப்பவருக்கு முன்பாக வைக்கப்படுவது வழக்கம். டிவியில் ஒளிபரப்பாகும் போது கோக்க-கோலா பாட்டில்கள் தெரிய வேண்டும் என்பதுதான் நடைமுறை. அதன்படி நேற்று ரொனால்டோவின் முன்பாகவும், பயிற்சியாளரின் முன்பாகவும் கோக்க-கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், பத்திரிகையாளர் அறைக்குள் நுழைந்து தனது இடத்தில் உட்கார்ந்ததும் தன் முன்பாக இருந்த இரண்டு கோக் பாட்டில்களையும் எடுத்து கீழே மறைத்துவைத்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து ‘’தண்ணீர் குடியுங்கள்'’ என்றார். இது இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவாகியிருக்கிறது.

களத்தில் இரண்டு கோல்... Coca Cola-க்கு டெட்லி பன்ச்... யூரோ கோப்பையில் அதிரடி காட்டும் ரொனால்டோ!
BERNADETT SZABO

60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரோ கோப்பையின் ஸ்பான்சராக இருக்கும் கோக்க-கோலாவின் பிராண்டை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுவிட்டார் என்பதால் ரொனால்டோ மீது யூரோ கோப்பை அமைப்பு அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரொனால்டோ கோலா பானங்களை எதிர்த்து பேசுவது முதல்முறையல்ல. ஏற்கெனவே ‘’என் மகன் எவ்வளவு சொல்லியும் கோக், ஃபான்ட்டா குளிர்பானங்களை குடிக்கிறான். எனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அவன் செய்கிறான்’’ எனப் பேசியிருக்கிறார்.

ரொனால்டோ
ரொனால்டோ

யூரோ கோப்பையின்போது ரொனால்டோ கோக்க-கோலா பாட்டிலை ஒதுக்கியதால் உடனடியாக கோக்ககோலாவின் பங்குகள் சரிந்தன. ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக 5,353 ரூபாயில் இருந்த ஒரு கோக்ககோலா ஷேரின் மதிப்பு, இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின் 5,267 என இறங்கியது. சில மணி நேரங்களில் 520 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு கோக்ககோலா பிராண்டின் மதிப்பு சரிந்ததாக சொல்லப்படுகிறது. இது யூரோ கோப்பை ஸ்பான்சர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்கம்போல யூரோ கோப்பையின் விவாதப் பொருளாகியிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

அடுத்த கட்டுரைக்கு