Published:Updated:

அட்டாக்கிலும் அசத்திய சென்னையின் FC... மூன்று புள்ளிகளோடு மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்!

Chennaiyin FC ( Chennaiyin FC )

ப்ளே ஆஃப்ஸ் கேள்விக்குறியாகிவிடும் என்ற சூழலில் நார்த்ஈஸ்ட்டிற்கு எதிராக சென்னை அணி தனது அணுகுமுறையை மாற்றியிருந்தது. வழக்கத்தை விட அட்டாக் செய்வதில் அதிகமாகக் கவனம் செலுத்தியிருந்தனர்.

அட்டாக்கிலும் அசத்திய சென்னையின் FC... மூன்று புள்ளிகளோடு மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்!

ப்ளே ஆஃப்ஸ் கேள்விக்குறியாகிவிடும் என்ற சூழலில் நார்த்ஈஸ்ட்டிற்கு எதிராக சென்னை அணி தனது அணுகுமுறையை மாற்றியிருந்தது. வழக்கத்தை விட அட்டாக் செய்வதில் அதிகமாகக் கவனம் செலுத்தியிருந்தனர்.

Published:Updated:
Chennaiyin FC ( Chennaiyin FC )
இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8 இன் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னையின் FC அணியும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதியிருந்தன. இந்தப் போட்டியை சென்னையின் FC அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்றிருக்கிறது. வழக்கமாக அட்டாக்கில் கோட்டைவிடும் சென்னை அணி இந்த முறை அட்டாக்கிலும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தது.

சென்னை அணி தனது வழக்கமான 3-5-2 ஃபார்மேஷனோடு இறங்க நார்த்ஈஸ்ட் அணி 4-3-3 என்ற ஃபார்மேஷனோடு களமிறங்கியிருந்தது. மிர்லான் முர்சேவ், சாங்தே போன்றோரு சென்னையின் தொடக்க லெவனில் இடம் கிடைத்திருக்கவில்லை.

சென்னை அணி இறங்கி ஆடி அட்டாக் செய்வதை விட டிஃபன்ஸிவ்வாக ஆடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தது. இந்த யுக்தி ஒரு சில போட்டிகளில் நல்ல ரிசல்ட்டை கொடுத்திருந்தாலும் கடைசி சில போட்டிகளாக தற்காப்பு ஆட்டம் சென்னை அணிக்கு பின்னடைவையே கொடுத்தது. இந்த சீசனில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருக்கும் அணியாகவும் சென்னையே இருக்கிறது. சீசனின் இரண்டாம் பாதி தொடங்கிவிட்டதால் இனியும் இதேமாதிரியே ஆடிக்கொண்டிருந்தால் ப்ளே ஆஃப்ஸ் கேள்விக்குறியாகிவிடும் என்ற சூழல் நார்த் ஈஸ்ட்டிற்கு எதிராக சென்னை அணி தனது அணுகுமுறையை மாற்றியிருந்தது. வழக்கத்தை விட அட்டாக் செய்வதில் அதிகமாகக் கவனம் செலுத்தியிருந்தனர். இதனால் போட்டியும் பரபரப்பாக அமைந்திருந்தது.

டேன்மாவியோ
டேன்மாவியோ
ISL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் 10 நிமிடங்களில் மட்டும் சென்னை அணி இரண்டு ஃப்ரீ கிக்களை பெற்றிருந்தது. ஒரு ஆஃப் சைடு கோலையும் ஒரு Shot on target ஐயும் செய்திருந்தது.

இந்த 10 நிமிட ஆட்டமே சென்னை அணியின் அட்டாக்கிங் மனநிலையை வெளிக்காட்டி விட்டது. ஆனாலும், சென்னை அணியின் முதல் கோலுக்காக இரண்டாம் பாதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 30-33 இந்த மூன்று நிமிடங்களுக்குள் மட்டும் சென்னை அணியின் வீரரான ரஹீமிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. பெரிதாக நார்த்ஈஸ்ட்டின் தடுப்பு அரண் எதுவுமே இல்லாமல் கோல் கீப்பரை மட்டுமே எதிர்த்து ஷாட் அடிக்க வேண்டிய நிலையில் ரஹீம் அந்த இரண்டு வாய்ப்புகளையுமே கோட்டைவிட்டார். இதன்பிறகு, உடனே நார்த்ஈஸ்ட் அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த கார்னர் வாய்ப்பை டேன்மாவியா கோலாக்கி நார்த்ஈஸ்ட்டை 1-0 என முன்னிலை எடுக்க வைத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் பாதியில் சென்னை அணி அதிகமாக Possession ஐ வைத்திருந்த போதும் நன்றாகவே அட்டாக் செய்திருந்த போதும் எதையும் சரியாக ஃபினிஷ் செய்து கோலாக்கியிருக்க முடியவில்லை. முதல் பாதி 1-0 என நார்த்ஈஸ்ட் முன்னிலையுடனே முடிந்திருந்தது.

இரண்டாம் பாதி தொடங்கியது. இரண்டாம் பாதியின் தொடக்க நிமிடங்களிலும் நார்த் ஈஸ்ட்டே அட்டாக் செய்திருந்தது. அவர்களுக்கு ஒன்றிரண்டு கார்னர் வாய்ப்புகளும் கிடைத்திருந்தன. ஆனால், சென்னையின் FC சீக்கிரமே ஆட்டத்திற்குள் வந்து கோலையும் அடித்தது.

51வது நிமிடத்தில் நிந்தாய் மற்றும் ரஹீம் செட் செய்து கொடுத்த பந்தை பாக்ஸிற்கு வெளியே இருந்து பொரிசுயிக் ஷாட் அடிக்க அது கோலாக மாறியிருந்தது.
பொரிசுயிக்
பொரிசுயிக்
ISL

பொரிசுயிக் பெரிதாக எந்த வித்தையும் காட்டாமல் இலகுவாக க்ரவுண்டடாகவே அந்த கிக்கை செய்திருந்தார். நார்த்ஈஸ்ட்டின் சுமாரான டிஃபன்ஸ் மற்றும் கோல் கீப்பர் மிர்ஷாத்தின் உத்வேகமற்ற தன்மையால் அது கோலாகியிருந்தது. இதன் மூலம் போட்டி 1-1 என சமநிலைக்கு வந்தது.

அடுத்த சில நிமிடங்களிலேயே இன்னொரு கோலையும் அடித்து சென்னை அணி முன்னிலை பெற்றது. 57 வது நிமிடத்தில் கிடைத்த ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பை விளாடிமிர் கோமன் அட்டகாசமாக கோலாக்கி 2-1 என முன்னிலையை பெற்றுக்கொடுத்தார். இதன்பிறகு, ஆட்டம் சென்னையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. கடைசி சில நிமிடங்களில் நார்த்ஈஸ்ட் அணி பயங்கரமாக அட்டாக் செய்து கோலுக்காக முயன்றது. குறிப்பாக, 85-90 இந்த கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து அட்டாக் செய்தனர். ஹெர்னான், ஃப்ளாட்மேன், இம்ரான் ஆகியோர் விறுவிறுவென அட்டாக் செய்து கோல் வாய்ப்புகளை உருவாக்கியிருந்தனர்.

இந்தப் பரபரப்பான 5 நிமிடத்தில் நார்த் ஈஸ்ட்டிற்கு கோலை வழங்காமல் இருந்ததற்கு சென்னையின் கோல் கீப்பர் தேப்ஜித் மஜூம்தாருக்கே முழு க்ரெடிட்டையும் கொடுக்க வேண்டும்.
Koman
Koman
ISL

அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். கூடுதலாக 7 நிமிடங்கள் கொடுக்கப்பட்ட போதும் நார்த்ஈஸ்ட்டின் அட்டாக் தொடர்ந்தது. விசில் அடிக்கப்படுவதற்கு 15 நொடிகள் இருக்கும்போது மட்டும் இரண்டு கோல் வாய்ப்புகளை உருவாக்கியிருந்தனர். இரண்டுமே கோல் போஸ்ட்டில் பட்டு தெறித்து வெளியே சென்றிருந்தது. பரபரப்பாக முடிந்த இந்த ஆட்டத்தை சென்னை அணி 2-1 என வென்றது.

நார்த் ஈஸ்ட்டிற்கு எதிரான இந்தப் போட்டியை வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. முதலிலேயே ஒரு கோலை வழங்கிவிட்ட பிறகும் சென்னை அணி இந்தப் போட்டியை வென்றதற்கு அட்டாக்கில் வழக்கத்தை மீறி வெளிக்காட்டிய உத்வேகமே காரணம். இதை தக்கவைத்துக் கொண்டு தொடர் வெற்றிகளை பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.