Published:Updated:

ISL Chennaiyin FC: புதிய பயிற்சியாளர்; புது வீரர்கள்; சரிவிலிருந்து மீளுமா சென்னையின் எப்.சி ?

ISL Chennaiyin FC

வரும் சீசனுக்காக சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது சென்னையின் எப்.சி நிர்வாகம்.

ISL Chennaiyin FC: புதிய பயிற்சியாளர்; புது வீரர்கள்; சரிவிலிருந்து மீளுமா சென்னையின் எப்.சி ?

வரும் சீசனுக்காக சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது சென்னையின் எப்.சி நிர்வாகம்.

Published:Updated:
ISL Chennaiyin FC
சென்னையின் எப்.சி அணிக்கு கடந்த இரண்டு ஐ.எஸ்.எல் சீசன்கள் ஓர் மறக்கவேண்டிய காலகட்டம். புள்ளி பட்டியலில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 8-வது இடத்தை பிடிக்கும் அளவுக்கே இருந்தது அந்த அணியின் ஃபர்மார்மன்ஸ்.

கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு தொடர்களின் போட்டிகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடக்க அடுத்த சீஸனில் பழைய கொண்டாட்டத்திற்கு மீண்டும் திரும்ப இருக்கிறது ஐ.எஸ்.எல் தொடர். இந்நிலையில் வரும் சீசனுக்காக சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது சென்னையின் எப்.சி நிர்வாகம்.

தாமஸ் பிரடாரிக்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாமஸ் பிரடாரிக்
தாமஸ் பிரடாரிக்

சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தாமஸ் பிரடாரிக். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பன்டெஸ்லிகாவின் பேயர் லெவர்குசென், ஹானோவர் 96, VfL வொல்ஃப்ஸ்பர்க் போன்ற அணிகளுக்கு ஆடியுள்ள தாமஸ் ஓர் தேர்ந்த ஸ்ட்ரைக்கர். ஓவன் கோய்லுக்குப் பிறகு ஒரு முன்னாள் வீரர் அதுவும் ஸ்ட்ரைக்ராக ஆடியவர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. காரணம், ஓவன் கோய்லுக்கு பயிற்சியாளராக இருந்தபோது சென்னை அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் கோல் மழை பொழிந்துகொண்டிருந்தார் அணியின் ஸ்ட்ரைக்கர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத்தொடர்ந்து சில வெளிநாட்டு வீரர்களையும் வாங்கியுள்ளது சென்னையின் எப்.சி.

குவாமே கரிகாரி:

குவாமே கரிகாரி
குவாமே கரிகாரி

கானா நாட்டைச் சேர்ந்த குவாமே கரிகாரி சென்னையின் எப்சி அணியின் முக்கிய ஸ்ட்ரைக்கராக வரும் நாட்களில் இருக்கக்கூடும். சென்ற ஆண்டு தாய் பிரீமியர் லீக்கில் நகோன் ரட்சசிமா அணிக்காக ஆடிய இவர் 29 ஆட்டங்களில் 13 கோல்கள் அடித்துள்ளார். சென்னையின் எப்.சி அணியின் கோல் தாகத்தை இம்முறை குவாமே கரிகாரி தணிப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஃபாலோ டியாக்னே டிவேன்டர்:

ஃபாலோ டியாக்னே டிவேன்டர்:
ஃபாலோ டியாக்னே டிவேன்டர்:

எஃப்சி மெட்ஸால்சில் தன் கால்பந்துப் பயணத்தை தொடங்கியவர் டியாக்னே. அந்த அணிக்காக லீக் 2-வில் 67 போட்டிகள் ஆடி 5 கோல்கள் அடித்துள்ளார். அதன் பின் பன்டெஸ்லிகா அணியான எஸ்சி ஃப்ரீபர்க்கிக்காக 65 போட்டிகளில் ஆடி 2 கோல்கள் அடித்துள்ளார். சென்னையின் எப்.சி அணிப் பயிற்சியாளர் தாமஸ் பிரடாரிக் முன்னர் பயிற்சியளித்த Vllaznia Shkodër அல்பேனியா அணிக்காக டியாக்னே டிவேன்டர் ஆடியுள்ளதால் தாமஸ் பிரடாரிக்கு இவரின் ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும். 6.1அடி உயரம் கொண்ட டியாக்னே‌. கார்னர் கிக், ஏரியல் பந்து போன்றவற்றில் மற்ற அணி ஸ்ட்ரைக்கர்கள்ளுக்கு சிம்ம செப்பனமாக நிச்சயம் இருப்பார்‌.

வஃபா ஹகமானேஷி:

வஃபா ஹகமானேஷி:
வஃபா ஹகமானேஷி:

தன் 20-வது வயதில் எஃப்சி நாஃப்ட் தெஹ்ரானுக்கு எதிராக போட்டியில் செபஹான் அணிக்காக அறிமுகமானவர் ஈரானின் வஃபா ஹகமானேஷி. அங்கு இரண்டு சீசன்கள் ஆடிய அவர் நாஃப்ட் தெஹ்ரான் அணிக்கு மாறி அங்கு இரண்டு வருடங்கள் ஆடினார். பின்னர் 2013-14 ஆண்டுகளில் ஈரானிய டாப்-டிவிஷன் லீக்கை வென்ற ஃபூலாட் அணிக்காக மீண்டும் விளையாடிய அவர் பின்னர் ஃபஜ்ர் செபாசிக்கு புறப்பட்டார். இவரின் வருகையும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பீட்டர் ஸ்லிஸ்கோவிக்:

பீட்டர் ஸ்லிஸ்கோவிக்:
பீட்டர் ஸ்லிஸ்கோவிக்:

FSV ஃபிராங்க்ஃபர்ட் யூத் அகாடமியின் தயாரிப்பு, ஸ்லிஸ்கோவிக். 2011-ம் ஆண்டு ஜனவரி 29 எஃப்சி கைசர்ஸ்லாட்டர்னுக்கு எதிரான போட்டியில் மைன்ஸ் அணிக்காக தொழில்முறை போட்டியில் அறிமுகமான இவர் அறிமுகமானவர் பீட்டர் ஸ்லிஸ்கோவிக். பின்னர் மெயின்ஸ் அணியில் இணைந்து விளையாடிய அவர் 2016-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி ஒன்றரை வருட ஒப்பந்தத்தில் சுவிஸ் சூப்பர் லீக் அணியான எஃப்சி ஆரவ்வுக்காக விளையாடினார். ஸ்லிஸ்கோவிக் கடைசியாக விளையாடிய , SV Wehen Wiesbaden அணிக்கு 12 போட்டிகள் ஆடி‌‌ ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அது ஒரு குறையாக இருந்தாலும் அவர் இதுவரை 310 போட்டிகளில் விளையாடி 104 கோல்களை அடித்துள்ளார் எனவே சென்னையின் அணிக்காக தன் பழைய ஃபார்மில் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- உ.கற்பக ஐயப்பன்