Published:Updated:

கோல் அடிக்கத் தவறும் சென்னையின் FC; அட்டாக்கில் சொதப்பி கோவாவிற்கு எதிராகத் தோல்வி!

Ortiz ( ISL )

முதல் பாதியில் மட்டும் கோவாவிற்கு 8 கார்னர் வாய்ப்புகள் கிடைத்திருந்தது. சென்னை அணிக்கு 1 கார்னர் கூட கிடைத்திருக்கவில்லை. இதிலிருந்தே சென்னை அணியின் அட்டாக்கின் தரம் எப்படியிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

கோல் அடிக்கத் தவறும் சென்னையின் FC; அட்டாக்கில் சொதப்பி கோவாவிற்கு எதிராகத் தோல்வி!

முதல் பாதியில் மட்டும் கோவாவிற்கு 8 கார்னர் வாய்ப்புகள் கிடைத்திருந்தது. சென்னை அணிக்கு 1 கார்னர் கூட கிடைத்திருக்கவில்லை. இதிலிருந்தே சென்னை அணியின் அட்டாக்கின் தரம் எப்படியிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

Published:Updated:
Ortiz ( ISL )

இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8 - ன் 54 வது போட்டியில் சென்னையின் FC யும் FC கோவாவும் நேற்று மோதியிருந்தன.

இந்த போட்டியை FC கோவா 1-0 என வென்றிருக்கிறது. ஜாம்ஷெட்பூருக்கு எதிராக இந்த புத்தாண்டை வெற்றியோடு தொடங்கியிருந்த சென்னை மீண்டும் தோல்வியடைந்திருக்கிறது.
சென்னை மற்றும் கோவா வீரர்கள்
சென்னை மற்றும் கோவா வீரர்கள்
ISL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 வது இடத்தில் இருந்தது. கோவா 9 வது இடத்தில் இருந்தது. மேலும், கோவா கடைசியாக ஆடி 5 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. கோவாக்கு எதிராக அதிக கோல்களை அடித்த அணியாகவும் சென்னையே இருக்கிறது. இதையெல்லாம் வைத்து இந்த போட்டியை சென்னை எளிதாக வென்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், களத்தில் நடந்தது வேறு.

3-4-3 என்ற ஃபார்மேஷனோடு கோவா களமிறங்க, 3-5-2 என்ற ஃபார்மேஷனோடு சென்னை களமிறங்கியிருந்தது. சென்னை அணியின் முன்னாள் வீரராக இருந்து இப்போது மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியிருக்கும் வால்ஸ்கிஸ் தொடக்க லெவனிலேயே இருந்தார்.

அதிகமாக கோல்களை கொடுத்து போட்டிகளில் தோல்வியை தழுவியதால் அட்டாக்கை விட டிஃபன்ஸில் சென்னை அணி அதிகம் கவனம் செலுத்துகிறது. ஜாம்ஷெட்பூருக்கு எதிரான கடந்த போட்டியில் கூட முதல் கோலை அடித்த பிறகு, அடுத்த கோலுக்காக பெரிதாக அட்டாக்கே செய்யவில்லை. அந்த ஒரு கோலை வைத்துக் கொண்டு டிஃபண்ட் செய்வதிலேயே கவனம் செலுத்தியது. இது வெற்றியையும் தேடிக்கொடுத்தது. ஆனால், கோலாக மாற்றியிருக்க வேண்டிய சில வாய்ப்புகளை மோசமாக தவறவிட்டிருந்தனர்.

கோவாவுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் இதுதான் நடந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோல் வந்திருக்க வேண்டும். மிர்லான் முர்சேவ் சிறப்பாக அட்டாக் செய்து ஒன்றிரண்டு முறை முன் நகர்ந்து சென்றார். ஆனால், அவரிடமிருந்து பாஸை வாங்கி கிக் எடுக்க ஆளே இல்லை. இதனால் முர்சேவே லாங் ஷாட்களை அடிக்க வேண்டியிருந்தது. இதனால் சில கோல் வாய்ப்புகள் தவறிப்போயிருந்தது. சக அட்டாக்கரான வால்ஸ்கிஸிடமிருந்தும் முர்சேவுக்கு பெரிதாக சப்போர்ட் கிடைத்திருக்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முர்சேவ்
முர்சேவ்
Chennaiyin FC

கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் இப்படி தவறிப்போக, கோவா அணியே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. நன்றாக அட்டாக் செய்து தொடர்ந்து கார்னர்களை பெற்றுக் கொண்டிருந்தனர். முதல் பாதியில் மட்டும் கோவாவிற்கு 8 கார்னர் வாய்ப்புகள் கிடைத்திருந்தது. சென்னை அணிக்கு 1 கார்னர் கூட கிடைத்திருக்கவில்லை. இதிலிருந்தே சென்னை அணியின் அட்டாக்கின் தரம் எப்படியிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியும். அந்த 8 கார்னர்களும் கோலாகாமல் தடுக்கப்பட்டதற்கு கோல் கீப்பரான தேப்ஜித் மஜும்தரூக்கும் சென்னை வீரர்களுக்கும் க்ரெடிட் கொடுக்கலாம். ஆனால், இதே ஈடுபாடு அட்டாக்கில் வெளிப்படாதது பின்னடைவாகவே அமைந்தது.

இரண்டாம் பாதியிலும் கோவாவின் ஆக்ரோஷமான அட்டாக் தொடர்ந்தது. கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தது. எடியூ பேடியா, ஆர்ட்டிஷ் ஆகியோர் சிறப்பாக அட்டாக் செய்து வாய்ப்புகளை உருவாக்கினர்.

சென்னை அணிக்காக மிர்லான் முர்சேவ் தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தார்.

சப்ஸ்டீடியுட்டாக எட்வினுக்கு பதில் சாங்தேவும் வால்ஸ்கிஸுக்கு பதிலாக கடந்த போட்டியின் கோல் ஸ்கோரரான லூகாஸும் களமிறங்கிய பிறகு முர்சேவுக்கு கொஞ்சம் சப்போர்ட் கிடைத்தது.

மூவரும் இணைந்து ஒரு கோலுக்காக முயன்றிருந்தனர். ஆனால், கோவா வீரர்களால் அதுவும் சிறப்பாக தடுக்கப்பட்டிருந்தது.

0-0 என டிராவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கோவா சர்ப்ரைஸ் கொடுத்தது. 82 வது நிமிடத்தில் பாக்ஸிற்கு வெளியே இருந்து ஆர்ட்டிஷ் அடித்த ஒரு லாங் ஷாட்டில் கோல் அடித்தார். இடதுகாலில் ஆர்ட்டிஷ் அடித்த அந்த கிக்கில் பந்து கர்வ் ஆகி செகண்ட் போஸ்ட்டில் கோலானது. இதை கணிக்க தவறி தேப்ஜித் மஜும்தார் கோலை தடுக்க வாய்ப்பின்றி வேடிக்கை மட்டுமே பார்த்தார். 1-0 என போட்டியில் கோவா முன்னிலை பெற்றது.

எஞ்சியிருந்த சில நிமிடங்களில் சென்னை அணியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. FC கோவா போட்டியை வென்றது. இந்த சீசனில் குறைவான கோல்களை அடித்திருக்கும் அணியாக சென்னையே இருக்கிறது. டிஃபன்ஸில் அதிக கவனத்தை செலுத்தும் சென்னை அணி ஒருங்கிணைவோடு அட்டாக்கிலும் அதிக கவனத்தை செலுத்தினால் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த முடியும்.